Posts filed under: ‘sasirekha‘
powerful கற்றாழை

பெண்களின் பிரசவ காலத்தில் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.அந்த மாற்றங்களில் ஒன்றுதான் constipation.இது எல்லாருக்கும் இருக்கும் என்றில்லை.சிலருக்கு இருக்கலாம்,பலருக்கு இல்லாமலிருக்கலாம்.அவரவரின் உடல்நிலையைப் பொறுத்தே அமையும்.

constipation வந்தால் இறுதியில் அது piles இல் கொண்டு போய் விட்டு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.பிரசவம் வரை இது பற்றி நாம் மருத்துவரின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளலாம்,அதாவது அவர்கள் தரும் மருந்துகளை உட்கொள்ளலாம்.ஆனால் பிரசவத்தின் பின்னர் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் அருமருந்தான கற்றாழையை சாப்பிடலாம்.கற்றாழையை தொடர்ந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாபிடுவதால் piles என்னும் இம்சையை அறவே ஒழித்துக் கட்டலாம்.

உட்கொள்ளும் முறை:

கற்றளையை செடியில் இருந்து விரல் நீளத்திற்கு அறுத்தெடுத்து பின்னர் அதிலிருக்கும் பச்சை நிற தொலை கத்தியால் சீவி விட்டு உள்ளே இருக்கும் நுங்கு போன்ற நிறமில்லா சதையை உட்கொள்ளலாம்.

பி.கு:

பச்சை நிறம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது.கொஞ்சம் ஒட்டி இருந்தாலும் அதை சாபிடும்போது அநியாயத்திற்குக் கசக்கும்.

உள்ளே இருக்கும் சதையில் எவ்விதமான சுவையும் இருக்காது.அதனால் பயம் தவிர்த்து சாப்பிடலாம்.

Advertisements

15 பின்னூட்டங்கள் மே 11, 2009

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா?

உலகில் எத்தனை உறவுகள் கிடைத்தாலும் நிச்சயமாக ஒரு அம்மாவிற்கு ஈடு கொடுக்க என்னைப் பொறுத்தவரை யாராலும் முடியாது.நம்மை பெற்றது முதல் வளர்த்ததுவரை அவர் பட்ட துயர்கள் நாமறியோம்!இது எனக்கு நன்றாகவே பொருந்தும்!!
என் அம்மாவின் அருமையை முதன் முதலில் கொஞ்சமாய் அறிந்தது நான் விடுதியில் தங்கி இருந்த சமயம்.என்னால் அப்போதெல்லாம் என் அம்மா இல்லாமல் இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனாலும் சில நாட்கள் அம்மாவைப் பிரிந்தே கழிந்தது.அதுவே என் முதல் அனுபவம்.

என் அம்மாவின் அருமையை நான் இரண்டாவதாக அறிந்தது என் கர்ப்ப காலத்தில்.
எப்படித்தான் என்னையும் சுமந்து கொண்டு என் அண்ணனையும் வளர்த்துக் கொண்டு வீட்டிலும் வேலை செய்கிறாரோ என்று…அப்போதெல்லாம் வீட்டு வேலையை சாதரணமாக சொல்லிவிட முடியாது.அடுப்பு,உரல்,அம்மி……etc.நான்

மூன்றாவதாக என் அம்மாவின் அருமையைகண்டது என் பிரசவத்தின் பின்னர்.எனது பிரசவ வலியின் போது கூட என் அம்மாவிடம் நான் கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது….அம்மா நீயும் இப்படிதான் கஷ்டப் பட்டாயா என்று…
என் அம்மாவிடம் எனக்குக் கிடைத்த பதில் புன்னகை மட்டுமே!
என் பிரசவத்தின் பின்னர் நான் முதன் முதலில் பார்க்க நினைத்தது என் அம்மாவைதான்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் விட்ட கண்ணீர் முதலில் என் அம்மாவின் அன்பிற்காக.அதை என்ன வார்த்தை கொண்டு எழுதுவதென்று எனக்கு தெரிய வில்லை!

இன்னும் எத்தனைதான் இருக்கிறதோ அம்மாவின் அருமையை அறிந்து கொள்ள?
அன்பென்றாலே அம்மா!
அருமை என்றாலும் அம்மாதான்!!

10 பின்னூட்டங்கள் மே 8, 2009

பார்ட்டிக்கு போலாமா?

நாம் எங்காவது பார்ட்டி களுக்கு நம் குழந்தைகளையும் அழைத்து செல்கிறோமானால்,அதிலும் நம் குழந்தை மற்றவரிடம் பேச தயங்குவதானால்,செல்லும் முன்னரே குழந்தைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்களுக்கு போகும் இடத்தில் அனைவரிடமும் எப்படி பேச வேண்டுமென்றும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டாமென்றும் முன்னரே சொல்லிக் கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.நான் இப்படி செய்வதினால் அவர்களும் அதற்க்கேற்றவாறே நடந்து கொள்வர்.அதை விடுத்து போன இடத்தில் குழந்தையிடம் யாரவது பேசும் பொழுது அவர்கள் பேசத் தயங்கினால் உடனே அவர்களை அந்த இடத்திலேயே வர்ப்புறுத்துவது அவர்களுக்கு அங்கே மிகவும் அவமானமாக இருக்கும்.அந்த உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை சொன்னால் அவர்களும் கூச்சமின்றி பழக ஆரம்பிப்பார்கள்.இதே போல் ஓரிரு முறை வெளியே செல்லும் முன் நாம் செய்தல் அடுத்த முறை அவர்களாகவே போகுமிடங்களில் மற்றவர்களிடம் அழகாகப் பேசி நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடுவர்!!
இது அவர்களின் வருங்கலத்திற்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும்!!!

3 பின்னூட்டங்கள் ஏப்ரல் 30, 2009

மூன்று குட்டி பன்றிகள்

இங்கே நானும் உங்களுடன் உங்களுக்காக கதை சொல்ல வந்திருக்கிறேன்.

ஒரு ஊரில் மூன்று குட்டி பன்றிகள் இருந்தது.ஓய்வு நேரங்களில்,நன்றாக சாப்பிட்டு தூங்குவது இவைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
இப்படியே நாட்கள் கடந்தது.இன்னும் சிறிது நாட்களில் குளிர் காலம் வந்துவிடும் என்பதால் மூன்றுமே தங்களுக்கென வீட்டைக் கட்டிக் கொள்ள விரும்பியது.
உடனே முதல் பன்றி,வைக்கோல் வைத்து வீட்டைக் கட்டி முடித்தது.
இரண்டாவது பன்றி,குச்சிகளை வைத்து கட்டி முடித்தது.மூன்றாவது பன்றியோ செங்கல் வைத்து வீட்டை கட்டி முடித்தது.மூன்று பண்ர்டிகளுக்கும் ஒரே சந்தோசம் தங்களுக்கென ஒரு வீடு இருப்பதை எண்ணி.
ஓரிரு நாட்கள் கழித்து அந்தப் பக்கமாக ஒரு நரி வந்ததாம்.அது முதல் பன்றியின் வீட்டுக் கதவைத் தட்டியதம்.உடனே பன்றி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டது தட்டுவது யாரென்று.அதனால் கதவைத் திறக்கமுடியாது என்றதாம்.அப்போது நரி சொன்னதாம்,
நீ கதைத் திறக்கவில்லை என்றால் நான் உன்வீட்டை ஊதியே இடித்துவிடுவேன்.பிறகு உன்னை சாப்பிட்டும் விடுவேன் என்றதாம்.உடனே பன்றியோ,சற்றும் பயப்படாமலம்,
உன்னால் முடிந்தால் செய்துபார் என்றதாம்.
நரி சொன்னதுபோல் வீட்டை ஊதியே இடித்துவிட்டதம்.ஆனால், பன்றியோ பயந்துகொண்டு வேகமாக இரண்டாம் பன்றியின் வீட்டுக்க ஓடியதாம்.அங்கே சென்றதும் இந்த நரி அங்கேயும் வந்து முன்னதாக சொன்னதுபோல் இங்கேயும் சொன்னதம்.இவர்களும்
உன்னால் முடியாது,முடிந்தால் செய்து பார் என்றார்களாம்.அதுவும் சொன்னதுபோல் வீட்டை இடுத்துவிட்டதாம்இடித்தும் இந்த இரண்டு பன்றிகள் பயந்து ஒடுவைதைக் கண்டு சிரித்துக் கொண்டே ஆணவத்துடன் பின்னாலேயே
நடந்து போனதாம்.அந்த இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் தாளிட்டுக் கொண்டதுகளாம்.அப்போது ஒன்றும் தெரியாத அந்த மூன்றாவது பன்றியிடம் நடந்தவற்றிப் பற்றி இவ்விரண்டும் கூறியதாம்.அந்த நேரத்தில்,நரி இங்கும் வந்து அதேபோலவே சொல்லி மிரட்டியதாம்.உடனே மூன்றாவது பன்றியோ,
அவ்விரண்டு பன்றிகள் சொன்னதுபோலவே சொன்னதாம்.
உடனே நரி ஊ…ஊ….வென வேகமாக ஊதிப் பார்த்ததாம்.ஆனால் பாவம்இப்படி செய்து செய்து அதற்கு இருதயம் பலவீனமாகிப் போய் இறந்தே போனதாம்.மூன்று பன்றிகளும் உயிர் தப்பியதை எண்ணி பெருமூச்சு விட்டனவாம்.

moral of the story ஐ நீங்களே சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் குழந்தைக்கு சொல்லி விடுங்களேன் ப்ளீஸ்.

7 பின்னூட்டங்கள் மார்ச் 20, 2009

உங்களுக்குத் தெரியுமா?

நான் அறிந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்.

பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது என்று நினைத்தீர்களா?

இப்போது நமக்கு கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள் கிடைக்கிறது.அது பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது.அந்தப் பழஅங்கள் பழுத்து சுமார் ஒரு வருட காலம் இருக்கும்.ஆனால்,அழுகி விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு வித மெழுகினால் கோட் செய்கிறார்கள்.இப்படி செய்வதால் அந்த பழங்கள் வாய்ப்புகள் விடுகிறது.

கடைகளில் வாங்கும் நாமோ அதை நன்றா…………கக் கழுவி குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்.இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

மெழுகினால் கோட் செய்யப்பட பழம் என்பதால் உடலில் போய் செரிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிறது.அதுவரை உடலினுள் செரிக்காமல் இருப்பதால் பக்கவிழவுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்..:-(

அதனால் இவ்வாறான விளைவுகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது:

*தநீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதில் பழங்களை அறை மணி நேரம் போட்டு எடுத்து சாப்பிடலாம்.

*தொலை நீக்கி விட்டு சாப்பிடலாம்.

இன்னொரு விஷயமும் உள்ளது.

நாம் வாங்கும் மசாலாவுடன் சேர்ந்த நூடில்சில் கூட ஒரு வித மெழுகினால்கோட் செய்கிறார்கள்.அதனால்,அதில் போட்டிருக்கும் செய்முறையை விடுத்து வேறொரு முறையை கையாண்டால் உடலுக்கு நல்லது.

*தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் வெறும் நூடில்சைப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

பின்னர் அந்தத் ண்ணீரை கீழே கொட்டிவிட்டு ,வேறொரு தண்ணீரில் அதே நூடில்சைப் போட்டு மசாலா கலந்து செயலாம்.

அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு மூன்று முறை நூடில்சை செய்து சாப்பிடலாம்.

குழைந்தைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்வோமே!!

அவர்களின் நலம் காப்போம்!!!

6 பின்னூட்டங்கள் பிப்ரவரி 26, 2009

வழிகாட்டுங்கள் ப்ளீஸ்……..

இப்போது பத்மாவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் அவளுக்கு பிடித்ததுபோல்தான் வீட்டில் சமையல் செய்கிறேன்.ஆனால் அவளோ,என்னை பொறுமையின் எல்லைக்………….கே கொண்டுபோய் விடுவாள்.அவள் என்னை டென்ஷன் ஆக்குவது உணவே வேளையின்போதுதான்.
இத்தனைக்கும் நான் பத்மாவிற்கு நொறுக்ஸ் எதுவும் கொடுப்பதில்லை (காலை முதல் மதியம் வரை).ஆனாலும்,சாப்பாடு என்றால் அவளுக்கு எப்படிதான் இருக்குமோ தெரியவில்லை.
சாப்பிடாமல் விடவும் என்னால் முடியாது…..நான் என்னதான் செய்வது.இப்போது நான் இதை எழுதுவதற்கு காரணமே இன்று எனக்கு அவளுடன் நடந்த போராட்டத்தின் பாதிப்பே.
இதுபோல் எனக்கு மட்டும்தான் நடக்கிறதா,இல்லை எனை போன்ற அம்மாக்களும் இங்கே உண்டா?
இவளுக்கு நான் எப்படித்தான் உணவின் மேல் விருப்பத்தைக் கொண்டு வருவது…….
தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!!!!!!

21 பின்னூட்டங்கள் பிப்ரவரி 20, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category