Posts filed under: ‘pappu's art‘
பப்பு மணி மாலை…

தெர்மோகோல் மணிமாலை. மாலை மாதிரி வரைந்து தந்ததும் கோந்தை தடவி பப்பு ஒட்டினாள்.

பழக்கூடை – வரைந்து_வண்ணமடித்து_வெட்டி_ஒட்டியது! அதிலிருப்பது, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் பச்சை ஆப்பிள். ( யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது…!!!) சிலசமயங்களில் படங்களுக்கு விதவித வண்ணம் தீட்டுவாள். சிலசமயங்களில் எல்லாம் ஒரே வண்ணமாக இருக்கும்..முழு படத்திற்கும் பிரவுன், சிவப்பு, மஞ்சள் என்று – சிலசமயங்களில் எ.கா.படத்திலிருப்பது போலவே தீட்டப்பட்டிருக்கும்! என்ன இருக்குமோ…அவள் மனதில்! கூடை என் கை வண்ணம்..ஹிஹி!

கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! 🙂

Advertisements

Add a comment நவம்பர் 17, 2009

7அப்-இல் மலர்ந்த மலர்கள்!


(Idea from Google)

ஏதாவது ஆர்ட் வொர்க் செய்யலாமென்று பப்புவுக்கு ஆர்வம் வந்தது, – எனக்குப் பொறுமை இல்லாதவொரு நேரத்தில்! காலி 7அப் பாட்டிலைக்கொண்டு மலர்கள் தீட்டலாமென்றதும் சம்மதித்தாள். எப்படி செய்யப்போகிறோமென்றதை ஒரு முறை செய்துக்காட்ட, தொடர்ந்தாள் அவள். பாட்டிலின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து தாளில் அழுத்த ஐந்து மடல்கள் பூத்தன – மூடியை திருப்பி வண்ணத்தில் தோய்த்து மடல்களின் உள்ளே அழுத்த மலரின் உள்பாகம்! ஜாலியாக செய்தாள்..ஒரு சில மலர்களுக்கு சரியாக நடுவில் வரவில்லை…ஹிஹி..

பாட்டில் மலர்களின் இறுதி வடிவம்!

Add a comment செப்ரெம்பர் 24, 2009

Fish ‘o ‘ Fish!

கடையில் வண்ணமீன்கள் பார்த்ததும், வீட்டில் நாமும் மீன்களைக் கொண்டுச்செல்லலாம் என்றாள் பப்பு! நாயை பார்த்தால், ‘நாயை வீட்டில் வச்சுக்கலாம்’, ‘பூனையை உள்ளே வரச் சொல்லு’, ‘சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ’ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறது!!நாமே வீட்டில் மீன்களைச் செய்யலாமென்றுச் அப்போதைக்கு அவளதுக் கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு )

எப்படிச் செய்யப் போகிறோமென்றுச் சொன்னேன். நீல நிறமும், கருப்பு வர்ணமும் கொண்டு கடலை தீட்டினாள், ! மீன்களை வரைந்துத் தந்தேன். வெட்டினாள். கண்களை வரைந்தாள். பஞ்சிங் மெஷின் கொண்டு பொட்டுகளை வெட்டி செதில்களாக்குவோமென்றதும், ஏற்கெனவே வெட்டிய பொட்டுகளை ஒட்டினாள். மீன்களைக் கடலில் நீந்தத் தொடங்கின!

பப்புவிற்கு மிகவும் பிடித்த பகுதி – பஞ்சிங் மெஷினால் ஓட்டைப் போட்டு பொட்டுகள் செய்வது! கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ!! 🙂இன்னொரு படத்திலிருக்கும் பச்சை ஏரி மீன்கள், பப்புவும் அப்பாவும் செய்தது.
அடுத்த வருடத்தில், நிஜ மீன்களை வளர்க்கும் பக்குவம் வருமென்று நம்புகிறோம்! நீண்ட நாட்களுக்கு முன் செய்தது இது, டிராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்!

Add a comment செப்ரெம்பர் 7, 2009

க்ரபக்..க்ரபக்..

முன்பு விலங்குகளின் கால்தடங்களை பதிக்க முயற்சி செய்து, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பப்புவும் ஆச்சியும் செய்த அடுத்த கட்ட நடவடிக்கை!!
பேக்கிங் மெட்டிரியலாக வந்த ஃபோம். தவளையின் கால்களை வரைந்து வெட்டிக் கொடுத்தேன்.( ஃபோமை வெட்ட வரவில்லை பப்புவிற்கு. )

முன்னங்கால்களும் பின்னங்கால்களையும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு செட். வண்ணத்தைக் கொண்டு சார்ட் பேப்பரில் பதித்து எடுத்தாள்.

பெரியத் தவளையின் பெரியக்கால்கள்.

பின்னர், தவளையைப் போல நடக்க..இல்லையில்லை…. தாவ முயற்சி செய்து அறையைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பார்க்க சிரிப்பாக இருந்தது!!:-)) பப்பு இரண்டரை வயதாயிருக்கையில் சரளா என்பவர் அவளைக் கவனித்துக்கொண்டார். அவர், பப்புவை சாப்பிட வைக்க இந்த யுக்தியை பயன்படுத்துவாராம், மதிய வேளைகளில்! பப்பு அவரை நினைவுக் கூர்ந்தாள்.

சிலசமயங்களில் பப்பு, ராணி ஆயா, சரளா ஆயா அல்லது ஷோபனா ஆன்ட்டியை நினைவுக்க்கூர்ந்து, ‘எப்போ வருவாங்க’ என்று கேட்பாள். ‘அவங்க ஊருக்குப் போய்ட்டாங்க’ என்றாலும் ‘ஊர்லேர்ந்து எப்போ வருவாங்க’ என்றோ ‘வரச்சொல்லு’ என்றோ துளைத்து எடுக்கும் பப்புவை சமாளிக்க, ‘நீதான் வளர்ந்துட்டே இல்ல…உன்னை மாதிரி வேற ஒரு குட்டிப்பாப்பாவை பாத்துக்க போயிய்ட்டாங்க’ என்பேன். சமாதானமாகாமல், ‘என்னா பண்ணிட்டேனானாம் நானு?’ என்பாள். 😦 .’நீ ஒன்னும் பண்ணலை பப்பு, அந்த பாப்பா ரொம்ப குட்டியா இருக்காம், நீ ஸ்கூல் போறே இல்ல..அந்தப்பாப்பா இன்னும் ஸ்கூல் போகலையாம், அதனால, குட்டிப்பாப்பாவை சாப்பிட வைக்க போயிருக்காங்க’ என்று சொல்லிவைப்பேன்! பப்பு சாப்பிட படுத்தும்போது, அவர்கள், ‘நீ சாப்பிடலைன்னா நான் ஊருக்குப் போய்டுவேன்’ என்று சொன்னதன் விளைவுதான் இது!!

தலைப்பு : தவளை அப்படித்தான் கத்துமாம், பப்புவின் அகராதியில்!! 🙂

Add a comment ஓகஸ்ட் 9, 2009

ஸ்பான்ஜ் பெயிண்டிங்

பேக்கிங் ஃபோம் மற்றும் சாமான் தேய்க்கும் ஸ்பான்ஜ் – விதவிதமான வடிவங்களில் வெட்டி எடுத்துக்கொண்டோம். பப்புவே குழைத்த வண்ணம் – சிவப்பும் வெள்ளையும் கலந்து இளஞ்சிவப்பாக்கினாள். முழு சார்ட் பேப்பரில், வடிவங்களை வண்ணத்தில் தோய்த்து சார்ட் பேப்பரில் வைத்து எடுக்க வேண்டும். ஒன்றிரண்டை செய்துக்காட்டியபிறகு, முழுவதுமாக செய்து முடித்தாள்.

முடிவில்,இதைப் பார்க்க ஒரு ‘gift wrapper’ போல தோன்றியது! (அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!)

Add a comment ஜூலை 27, 2009

அந்த வானத்தைப் போல…

பவர் கட்டான ஒரு இரவில், மாடியில் உணவுண்டோம், எமர்ஜென்சி விளக்கின் துணையோடு. அதோடு தெளிவான வானம். பப்புவிற்கு மிகவும் பிடித்திருந்தது போல. நிலாவை வரச்சொல்லு, நிலாவை வரச்சொல்லு என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.(மாதவராஜ் ஐயா இந்த இடுகையை முன்பே வெளியிட்டிருந்தால் அந்த ஐடியாவை ஃபாலோ செய்திருப்பேன்..!! ):-). ஒரு சார்ட் பேப்பரில் கருநீலத்தை முழுவதுமாக வண்ணம் தீட்டினாள். நட்சத்திரங்களையும், வெவ்வேறு அளவுகளில் நிலாக்களையும் வரைந்தேன். அதை வெட்டிக் கொடுக்கச் சொன்னேன். (ஒரு நட்சத்திரத்தின் ஐந்தாம் கை வெட்டுபட்டு போயிற்று!கண்டுக்காதீங்க!) ஒரு சிலவற்றை நுணுக்கமாக வெட்ட உதவி தேவைப்பட்டது. அனைத்தையும் ஒட்டினாள். ஒட்டுவது மிக விருப்பம் பப்புவிற்கு!

முடிவில் எங்கள் வானம் – இப்படிதான் இருந்தது!

கொஞ்ச நாட்களாக நாங்கள் ஒரு புத்தகம் வாசிக்கிறோம்…பெரும்பாலும் தூங்கச் செல்லுமுன்!! Good Night Moon. பழமையான புத்தகம்தான்.எளிமையானது.திண்மையான பக்கங்கள் கொண்டது.விக்கியில் வாசிக்க.. Bedtime Stories சொல்லி நாந்தான் தூங்கிப் போயிருக்கிறேன்…பலமுறைகள்…ஆனால் இந்தப்புத்தகத்தை வாசித்து 5-10 நிமிடங்களில் பப்பு உறங்கிவிடுகிறாள்! நல்ல புத்தகம்தான்!!

Add a comment ஜூலை 19, 2009

விலங்குகளின் காலடித் தடங்கள்

”கோழிக்கு கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் ”வாத்தின் கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் பப்பு கேட்டபின் தோன்றிய ஐடியா இது. அவளிடமிருந்த விலங்கு பொம்மைகளின் காலடித் தடங்களை பேப்பரில் பதிக்கலாமென்று சொல்லி ஒரு “எறும்புத்தின்னி”யின் காலடியை பதித்துக் காட்டினேன். மீதியை அவளாகவேச் செய்தாள். சிறு பொம்மைகளாக இருந்தபடியால் எல்லாமே ஒரே மாதிரி நீள்வட்டமாக வந்தது.ஆனாலும், விடாமல் எல்லா விலங்குகளின் கால் தடங்களையும் செய்து முடித்தாள்.

Add a comment ஜூலை 11, 2009

Cat & Catterpillar!

செய்தித்தாளுடன் வந்திருந்த ஃப்லையரில் இருந்த C ஐ பப்பு அடையாளம் காட்டினாள். அதை வெட்ட சொன்னேன். பின்னர், வளையலால் சார்ட் பேப்பரில் வட்டங்கள் போட வேண்டும். அதை வெட்ட வேண்டும். அதை ஒட்டி caterpillar செய்யப் போகிறோம் என்று சொல்லி ஒரு வட்டத்தைச் செய்துக் காட்டியதும், இதில் எப்படி கேட்டர்பில்லர் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்துடனே, மீதியைத் தானாகவே செய்தாள். ஓரிரு வட்டங்கள் வடிவம் சரியாக வரவில்லை(படத்தைப் பெரிதாக்கினால் தெரியும்!). பின்னர் வெட்டி முடித்து எல்லாவற்றையும் ஒட்டினாள். சில இடங்களில் பொருத்துவதற்கு இடத்தை நான் காட்ட வேண்டியிருந்தது. ஒட்டி முடித்ததும் கண்கள் வரையச் சொன்னேன். அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்!

இது ஸ்பான்ஞ் கொண்டு செய்தது. பூரிகட்டையில் அலுமினியம் ஃபாயிலை சுற்றி அதில் ஸ்பான்ஞ்ச்-ஐ ரப்பர் பான்டால் கட்டிவைத்தேன். தட்டில் அவளாகவே வண்ணங்களை குழைத்தாள். பூனை பொம்மையை மஞ்சள் சார்டில் வரைந்துத் தந்தேன். அதில் பூரிக்கட்டையால் வண்ணங்களைக் கொண்டு உருட்ட வேண்டும். ஒரு தடவை செய்துக் காட்டியதும் முழு சார்ட்டிலும் பூரிக்கட்டையால் உருட்டி வண்ணப்படுத்தினாள். பின்னர் அதை வெட்டச் சொன்னேன். வால் பகுதியில் என்னை வெட்டச் சொன்னாள். வெட்டியபின் வேறு சார்ட் பேப்பரில் ஒட்டினாள்!

அப்புறம் இந்த ABC புக்கை படித்தோம். எழுத்துகளை சொல்லித்தராம, ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் வாக்கியங்களை வாசித்தோம். ஒவ்வொரு எழுத்துக்கான ஒரு ஸ்டிக்கர் முதல்பக்கத்தில் இருந்தது. பப்புவின் வடலூர் ஆயா, பப்புவுக்கு கொடுத்தது இது. அவர் கொடுத்தவுடனேயே, ஸ்டிக்கரைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாத பப்பு, ஆயாவோட உதவியுடன் ஒட்டியிருந்தார். அதனாலே ஸ்டிக்கர் வேலை மிச்சம். வாக்கியங்களை சொல்லச் சொல்ல அவளும் திரும்பச் சொன்னாள்!

நல்ல படங்களோட கொஞ்சம் ஃபன்னியாகவும் இருக்கு. இதன் விலை ரூ 85. உதாரணத்துக்கு, ஒரு பக்கம் இங்கே! நல்ல ABC புத்தகம் வித்தியாசமானதா உங்களிடம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

Add a comment ஜூலை 3, 2009

Mono printing – Part II

சாப்பாடு மடிக்கும் அலுமினிய ஃபாயிலை ஒரு அட்டையில் மடித்துக்கொண்டோம். மேலும் தட்டில் இன்சுலேஷன் டேப்பினால் கட்டமாக ஒட்டிக் கொடுத்தேன். அலுமினியம் ஃபாயில் சரியாக வரவில்லை – வண்ணங்கள் தீட்ட பப்புவிற்கு பிடிக்கவில்லை. தட்டு அவளுக்கு மிகவும் ஈசி.வழக்கமாக வண்ணம் தீட்டுவதும் போல இருந்தது அவளுக்கு! மேலும் பேப்பரால் அழுத்தி எடுப்பதும் எளிதாகவும் இருந்த்து, உதவி தேவைப்படவில்லை!

அடுத்தாக, பிரஷால் வட்டமாக வரைந்திருந்தாள். ஒரு ear bud கொடுத்தேன் அதில் வரைவதற்கு! மாங்காய் போல, பிறகு ஏதோதோ உருவங்களை bud-ஆல் வரைந்து பேப்பரை அழுத்தி பிரிண்ட் எடுத்தாள்!

எந்த வண்ணம் கலந்தால் எந்த வண்ணம் கிடைக்கும் என்று அறிய வைக்க ஓரளவிற்கு இம்முறையை பயன்படுத்தலாம். இப்போதைக்கு பப்புவிற்கு கருப்பு எப்படி வருமென்று தெரியும்(எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் குழைத்தால்!) 😉 !

பப்பு கார்னர் :

”நீட்டு பொடி வாங்கித் தர சொல்லுச்சு, வர்ஷினி” – பப்பு.

”என்னது?”

“நீட்டு பொடி உங்கம்மாவை வாங்கித் தர சொல்லு, உங்கம்மாக்கிட்டே சொல்லி வாங்கி போட்டுக்கோன்னு வர்ஷினி சொல்லுச்சு! – பப்பு

நீட்டு பொடியா? எப்படி இருக்கும்?

அவள் காட்டிய ஆக்‌ஷன்படி – நெத்திச்சூடி!

இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!

Note to perimma :

பெரிம்மா, என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு ஒரு தடவை ஃபேஷன் ஒட்டியாணம் கேட்டேன் இல்ல, நான் அப்போ செவன்த்தானே?!!ஹ்ம்ம்..அப்புறம், இந்ததடவை வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க நெத்திச்சூடி, ஓக்கே!

Add a comment ஜூன் 21, 2009

Mono printing – Part I

அம்மாக்கள் வலைப்பூவில் குட்டீஸ்-களுக்கு பயனுள்ள பெயிண்டிங் செய்முறைகளை கொடுத்திருக்கிறார் தீஷு. அதில் மோனோ ப்ரிண்டிங்-கை முயற்சி செய்தோம் இருவாரங்களுக்கு முன்பு. பப்புவின் விளையாட்டு சாமான்களில் ஒரு குட்டி மரசாமான் – மணக்கட்டையின் மினியேச்சர். அதன்மேல் வண்ணங்களை தீட்டி, சார்ட் பேப்பரை வைத்து ப்ரிண்ட் எடுத்தோம். ஓரிரு தடவைகள் அப்பாவின் கைகள் அவளுக்கு உதவி செய்தன.
பிறகு புரிந்துக் கொண்டு தானாக செய்தாள். ஆனால் நிறைய வண்ணங்களை குழைக்க அந்தச் சிறிய கட்டை ஏற்றதாக இல்லை. அதனால், வேறு சில ஏற்பாடுகளை செய்தோம். அவை part II-ல்!

Add a comment ஜூன் 20, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category