Posts filed under: ‘blog meet‘
பாப்கார்ன் வித் குட்டீஸ் : சென்னை பதிவர் சந்திப்பு!

”பாப்பாக்கு காது எங்கே குத்துனீங்க?”

“காதுலதான்!!”

போன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,

”பேசு குட்டிம்மா, என் மானத்தை வாங்காதே”

”பேசாம இருக்கறதைவிட பேசினா தாங்க நமக்கு டேமேஜ்”

போன்ற கவனத்தைக் கவரும் அனுபவச்சிதறல்களையும்….நேற்று கிண்டி சிறார் பூங்கா கண்டது – நீண்டநாட்களாக பேச்சில் மட்டுமே இருந்த “பதிவர் சந்திப்பு வித் கிட்ஸ்” நேற்று சாத்தியப்பட்டது!!

அமித்து அம்மா அமித்துவுடனும், வித்யா ஜூனியருடனும், தீபா நேஹாவுடனும், அமுதா நந்தினி மற்றும் யாழினியுடனும், நான் பப்புவுடனும்!

(பதிவுலகத்தின் பிரபல குட்டீஸ்! )

அமித்து அம்மாவும் அமித்தும் மேட்சிங்-கான உடையில் வந்திறங்கினர். நாங்கள் வாயிலில் காத்திருக்க, மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். அமித்து ஒரு சமத்து குழந்தை. அமித்து அம்மாதான் ”கோங்கு” கேட்ட அமித்துவை ஒரு குரங்கு டஸ்ட்பின் காட்டி ஏமாற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார்.

வித்யா மட்டுமே சொன்ன நேரத்தை கடைப்பிடித்தார்..கடமை கண்ணியம்..காட்பாடி! ஜுனியர் செம ஆட்டம்! விட்டால் பார்க்கை ஒரு ரவுண்ட் வந்திருப்பார். வித்யாவின் கெஞ்சல்+மிரட்டலுக்கு செவிசாய்த்து அடக்கிவாசித்தார். ஃபோட்டோ எடுக்கலாமென்று சொன்னதும் மிக அழகாக வந்து புன்னகை புரிந்தார்.! பப்புவிடமிருந்து பையை வாங்கிவிட முயற்சி செய்துக் கொண்டிருந்தார் 🙂

நேஹா யார்பேசினாலும் “மம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“பௌபௌ” என்று “ம்மா” என்றும் மிருகங்களைப் பார்ததுச் சொல்லிக்கொண்டிருந்தார். தீபாவின் மிரட்டலில் தூக்கத்தைத் தியாகம் செய்து வந்திருந்தார்.

நந்தினி, யாழினியுடன் வந்திருந்தார் அமுதா. நந்தினி எல்லா குட்டீஸுக்கும் ப்ரெண்ட் ஆகிவிட்டாள். எல்லா குட்டீஸையும் பார்த்த அமுதா, ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல…”சரி, இந்த தட்டிலாவது சாப்பிட்டு உடம்பு தேறுதான்னு பார்ப்போம்னு” எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தட்டை பரிசளித்தார்! நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க…;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

பப்பு பார்க்கை சுற்றிவர துடித்துக் கொண்டிருந்தாள். வரும்போதே கவிதா ஆண்ட்டி வந்துட்டாங்களா என்று கேட்டாள்! வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல….”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! 😦 முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது…அவ்வ்வ்!! கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள்! (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே!)

On the whole, we had fun!புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!

Advertisements

Add a comment ஜூன் 29, 2009

சுட்டிப் பையன் பபிள்ஸ்!!

பபிள்ஸ் சீரிஸ் புத்தகங்கள் பப்புவிற்கு மிகவும் பிடித்தம். பபிள்ஸ் என்ன பண்ணான், அவங்க அம்மா என்ன சொன்னாங்க என்பது ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் மிகப் பிரசித்தம். பபிள்சை நாங்கள் ஒரு லைப்ரரியில் தான் சந்தித்தோம். அதே போல் பெப்பர் என்றும் சீரிஸ் வருகிறது.

மூன்று விஷயங்கள் எங்களைக் கவர்ந்தவை (அ) பபிள்சை பற்றிச் சொல்ல..

1. ஆங்கில வார்த்தைகளை எளிதாக அறிமுகப் படுத்த (வார்த்தைகள் தான், வாக்கியங்கள் அல்ல!!)
2. ஒவ்வொரு கதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் அடிப்படையில் அமைந்திருப்பது
3. கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

பப்பு, சபரிக்கு பரிசளித்ததும் இந்த சீரிஸின் ஒரு கதையே! பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம். முத்துலெட்சுமியுடன் சபரியை பார்க்கப் போகிறோம் என்றதும் எந்த சந்தேகமுமில்லாமல் என் மனதில் தோன்றியது பபிள்ஸ்தான் சீரிஸ்தான்! Hope sabari enjoys with Bubbles!!

அம்மாக்களின் வலைப்பூவிலும் இதுக் குறித்து!

Add a comment பிப்ரவரி 3, 2009

ஒரு வெள்ளிக்கிழமை மாலை…

(இந்த கைகளுக்குச் சொந்தமான வலைப்பூ எது?!)

எங்கள் டீமை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பெண்மணியைச் சந்திக்க பப்புவும், நானும் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றோம். போய்க்கொண்டிருக்கும்போது ஒரு போன். “நான் முத்துலெட்சுமி பேசறேங்க”, என்றதும் எனக்குத் தெரிந்த 4 முத்துலெட்சுமிகளில் யார் என்று ஒரு குயிக் சர்ச் ஓடியது. பள்ளியில் கூடப் படித்த முத்துலெட்சுமியா, ஆனால் குரல் அப்படி இல்லை, ஜூனியர் முத்துவா கொஞ்சம் குரல் ஒத்துபோகுது, இல்லை இப்போ ரீசண்டா
திரும்ப மெயிலில் சந்தித்த முத்துஅக்காவா என்று கடக்டவென்று ஒரு பேட்டர்ன் & வாய்ஸ் மேட்ச். இதற்குள் 20-40 செகண்டுகள் கடந்துவிட்டிருந்தன. திரும்ப “நாந்தாங்க முத்துலெட்சுமி பேசறேன், எங்க இருக்கீங்க” என்றதும், அட இந்தம்மணியை பார்க்கத்தானே போய்க்கிட்டிருக்கோம்னு பொறி தட்டியது!!யெஸ்..அந்த பெண்மணி கயல்விழி-முத்துலெட்சுமி! அந்த டீம் – டாக்கிங் குரூப் டீம்!(சிறுமுயற்சி முத்துலெட்சுமி, இல்ல முத்துலெட்சுமி கயல்விழி-ன்னா உடனே புரிஞ்சுருக்குமோ!!)அறிமுகம், தயக்கம் எதுவுமே இல்லை..பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!


(The famous Kids of blogdom )

அப்படிப்பேசிக்கொண்ட்டேயிருந்த போது, this friendly lady made an entry. மேலே இருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்! அதிகம் மறுமொழிவதில்லையென்றாலும், தவறவிடாத பதிவு கவிதாவின் “பார்வைகள்”. தெரியுமா, என்ற போது, ”ஓ தெரியுமே” என நான் சொன்னதும் ஜெர்க்கானவர், ”இல்லல்ல, உங்க பதிவுகள் மூலம்தான்”, என்றதும் கொஞ்சம் ஆசுவாசமானார்.

Pappu remained quiet! ட்ரெயினை பார்த்துக் கொண்டேயிருக்க விரும்பினாள், அவள்!
பப்புவும் சபரியும் பரிசுகள் பரிமாறிக்கொண்டார்கள்! And, pappu thank muthu aunty
for the Bhindis!! கவிதா ஆன்ட்டியுடன் சொப்பு விளையாட வெயிட்டிங்

Add a comment ஜனவரி 12, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category