Posts filed under: ‘வேளச்சேரி‘
Kreative krayonz @ Velachery

க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் – நமது “பார்வைகள்” கவிதாவின் ப்ரெய்ன் சைல்ட்!! என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று! கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் “க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்” மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-))! வாழ்த்துகள் கவிதா!!

வேளச்சேரியில், ஒரு ஹாபி/ஆக்டிவிட்டி சென்டர் – Lets do Somthing சிறிது நாட்களுக்கு முன் பானை வனைதலைப் பற்றி சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தது இது!!

வேளச்சேரி வளர்கிறது!! 🙂

Advertisements

Add a comment ஒக்ரோபர் 26, 2009

பன்றிக்காய்ச்சல், வேளச்சேரி,பள்ளிகள் மற்றும் பெற்றோர்…

அமெரிக்கா, மெக்ஸிகோ என்றுக் கேள்விப்பட்டு கடைசியில் இந்த பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டது எங்கள் வீட்டுக்கருகில். நான்காவது Hop-இல் தெரிந்த ஒருவருக்கு பாஸிடிவ். நேற்றுக்காலை வரை எந்தக்கேள்வியுமில்லாமல்தான் அவரவர் பணியிடத்திற்குச் சென்றுக்கொண்டிருந்தோம். பப்புவை பள்ளிக்கு அனுப்புவதிலும் எந்தக் கேள்வியுமில்லாமல். அந்தச் சிறுவனின் மரணம், உடனே பரவிய முன்னெச்சரிக்கை பற்றிய மின்மடல்கள், மாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், சம்பாஷணைகள் என்று நேற்று மதியத்திற்குள் நீக்கமற நிறைந்திருந்தது பன்றிக்காய்ச்சல் கவலைகள்.

மதியத்திற்குள் அலுவலக நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி விடுமுறையை அறிவித்திருந்தது. அதைக்கேட்டு முடிப்பதற்குள், வேளச்சேரியில் பத்து பள்ளிகளில் விடுமுறை என்றச் செய்தியும் சேர்ந்திருந்தது. பப்புவின் பள்ளிக்குத் தொடர்புக் கொண்டபோது, அவர்கள், இதைக்குறித்து அரசு அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும், விடுமுறை அறிவிக்க அரசு ஆணை எதுவும் அந்தப்பகுதிக்கு இல்லாததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினர்.

பப்புவுக்கு வேறு நேற்றிலிருந்து மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது. அந்த மின்மடல்களைப் படித்து படித்து எனக்கும் அதிலிருந்த அறிகுறிகள் இருப்பதாகவே ஒரு மாயை. சொல்லவா வேண்டும்…கவலைப் படுவதுதான் கை வந்த கலையாயிற்றே!! மூன்று மணிக்கு பப்பு வீட்டிற்கு வந்துவிட்டாள். டைரியில் நோட் : அரசு ஆணை வரும் வரை பள்ளி இயங்கும் என்றும் குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் இருந்தால் அனுப்ப வேண்டாமென்றும் இருந்தது. இந்தவாரம் முழுவதும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று இப்போது முடிவு செய்துள்ளோம்.

அனுப்பிவிட்டு பயந்துக்கொண்டிருப்பதை விட இது மேல் என்றுத் தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு நாளைக்கு?!! I am paranoid. அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது!
முன்பு ஆந்தராக்ஸ் பயம் பரவியபோது இப்படி இல்லவே இல்லை, நான்!! எனது அச்சம், கவலை, நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் – பப்பு!! (கடவுளுக்கு நன்றி!)

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி….எல்லாம் ஒரு வைரஸினால்! அந்தச்சிறுவனின் தந்தை சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார், அச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா என்று எத்தனையோக் காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! 😦

Add a comment ஓகஸ்ட் 11, 2009

பள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்

வேளச்சேரி, தாம்பரம்,நங்கநல்லூர் பகுதிகளில் உள்ள ரெகுலர் பள்ளிகளின் எக்செல் ஷீட். பப்புவை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு தொகுத்தது. பிறருக்கும் உபயோகப்படலாமென பகிர்கிறேன்.!!

(படத்தின் மேல் க்ளிக்கினால் தெளிவாகத் தெரியும்.)

Add a comment ஒக்ரோபர் 14, 2008

கட்ட வண்டி..கட்ட வண்டி…

வேளச்சேரி பெட்ரோல் நிலையத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம். எனக்கோ ரிசர்வ்வில் ஒடிக்கொண்டிருக்கிறது. திங்கள் காலை எப்போதும் கூட்டம் இருக்கும். மாலை டாங்க் நிரப்பிக் கொள்ளலலாமா….என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே
ஒரு ஆள் “பெட்ரோல் இல்லை..காலி” என்றபோது..ஆ..லாரி ஸ்ட்ரைக்..!! ம்ம்..அப்படி மீதமிருந்த மொத்தக் கூட்டமும், எதிரிலுள்ள பங்கிற்கு திரும்பிற்று. 2T மிக்ஸில் கூட்டம் குறைவாயிருந்த்தால், பாக்கியசாலியானேன்!! மாலை அதே பங்க்கில் 200-250 வாகனங்கள்!! பாதுகாப்பிற்கு, போலிசும்!! உலகில் பெட்ரோல் கிடைப்பது இன்றே கடைசி
என்பதுபோல் தோன்றியது! உண்மையில் அப்படி ஒரு நாள் வரும்போது, சென்னை எப்படி இருக்கும்…சென்னை இருக்குமா??!!

a cliche,

பேருந்து நிறுத்தங்கள்/பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஹோண்டா சிட்டிகளும், ஆல்டோ, வேகன் ஆர்களும் மூன்று சீட்டுகள் காலியாய் விரைந்தன!! சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்திருந்தது. வாகனங்கள் பங்க்களில் காத்துக்கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம், என் தோழியின் கூற்றுப்படி!!

Add a comment ஜூலை 1, 2008

பப்பு-சைக்கிள்-நான்

பப்புவின் முதல் சைக்கிள் மியூஸியத்தில் வைக்கும் நிலையையடைந்தது, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு.அவள் எவ்வளவோ முயற்சித்தாள், சீட்டை பிரித்தெடுப்பதற்கு! கடைசிவரை முடியவில்லை!!

வேளச்சேரி பை-பாஸ் ரோட்டில் இருக்கிரது BSA சைக்கிள் கடை. குட்டீஸ் ட்ரை-சைக்கிளிலிருந்து, ட்ரெட்மில் வரை கிடைக்கிறது. பப்புவை அழைத்து சென்றதால், உயரம் , பெடலிங் எல்லாம் பார்த்து முடிவு செய்ய வசதியாயிற்று!

பேக் செய்வதற்காகக் கூட, சைக்கிளை விட்டு இறங்கமறுத்துவிட்டாள்!!
அந்த மாடலில் மற்றொன்றை வெளியில் நிறுத்தியபோதும், அந்த சைக்கிளை விட்டு ம்ஹூம்..இறங்கவேயில்லை!

வீட்டிற்கு வந்தபின், சீரியஸாக குனிந்து சைக்கிள் பாரில் இருந்த காற்றுகுமிழ் பேப்பரை ஒவ்வொன்றாக உடைக்க துவங்கியிருந்தாள்!!

ஃப்ளாஷ்பாக்

முதல் சைக்கிள் என் பன்னிரண்டாம் வயதில் கிடைத்தது. BSA SLR பெண்கள் சைக்கிள்.
அதை வாங்குவதற்க்கு நான் போகவேண்டியிருக்கவில்லை! நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னிடம் இருந்தது. அதன் விலை பப்புவின் தற்போதைய
சைக்கிள் விலையில் பாதி!!

Add a comment ஜூன் 13, 2008

ஐ ஸ்கிரீம்……

அலுவலக உணவுக்கூடத்தில் காதில் விழுந்தது இது:

இஸ்ரவேலில், குபா என்பது ஒரு தன்னிறைவு பெற்ற இடம். அதாவது, ஒருவருக்கு தேவையான எல்லாமே அந்த ஒரு இடத்திலேயே கிடைத்து விடும். ஒரு ஏரியா போன்ற இடம், ஆனால் வேறு எங்கும் சார்ந்து இருக்கத் தேவையின்றி! அது போல பல குபாக்கள் இருக்குமாம்.

வேளச்சேரியும் ஒரு குபா போலவே!! you name it and you have it..and the latest addition is Baskin Robbins with dazzling pink!!

அடையார் எனக்கு ஒரு சில காரணங்களுக்காக பிடிக்கும். கிராண்ட் ஸ்வீட்ஸ், கோகுல் ஆர்கேட் லெண்டிங் லைப்ரரி இன்னும் பிற. அதில் ஒன்று பாஸ்கின் ராபின்ஸ்.

flashback :
பப்புவின் முதல் ஸ்பூன் Baskin Robbins-லிருந்துதான்!!

ப்ராஜக்ட்டுக்காக, ஐந்து வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதிதில்தான் அடையார் baskin Robbins அறிமுகம். Baskin 31 Robbins இருக்கும் 31 என்பது வெரைட்டி
என நினைத்துக்கொள்வேன். ஒரு ஸ்கூப் 30 ரூபாய். அப்போது என் பேவரிட் banana split. அதுவும் டாப்பிங்….மேலே ஊற்றப்படும் சாஸ் நம்ம சாய்ஸ்.
ஒருமுறை பபிள்கம் ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டிருக்கிறேன்..பபிள்கம் போல, கொஞ்சம் chewy–ஆக குட்டி குட்டி துண்டுகள் இருக்கும்.yummy!!அதற்குப்பின் அந்த ப்ளேவர் கிடைக்கவே இல்லை..

ஓக்கே..ப்ளாஷ்பேக் ஓவர்!!

வேளச்சேரி கிளை கொஞ்சம் சிறியதுதான்! பப்புவுக்கு சாக்லேட் ஆல்மண்ட் மிகவும் பிடித்திருந்தது. பிளாக் கரண்ட் அண்ட் ப்ரூட் ஓவர்லோடட்-ம் நன்றாக இருந்தது.

டேஸ்ட் பார்க்க ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொடுப்பார்கள்.
நாம் டேஸ்ட் பார்த்து தெரிவு செய்து ஆர்டர் கொடுக்கலாம்!!
ஒரு ஸ்கூப் 40 ரூபாய். வாட் எக்ஸ்ட்ரா!

Add a comment ஜூன் 6, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category