Posts filed under: ‘விளையாட்டு‘
டான்கிராம் (Tangram)

Floor puzzle, peg puzzle மாதிரி இல்லாமல் புது வகையான பஸில் தேடிய பொழுது என் கவனத்திற்கு வந்தது டான்கிராம். பல பேருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு புதிதாக இருந்ததால், என்னைப் போல் தெரிந்திராத பெற்றோருக்குத் தெரிவிக்கவே இப்பதிவு.டான்கிராம் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்லாது கணிதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. It is good for problem solving and pattern design skills.

இந்தப்பழமையான விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெறும் ஏழு பீஸுகள் மட்டுமே உள்ளன. அதை வைத்து ஆயிரத்திற்க்கும் மேல் உருவங்கள் உருவாக்கலாம். இதன் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. ஏழையும் உபயோகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பீஸும் அடுத்ததைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக்கூடாது. அதில் உருவான உருவங்களைக் காண வியப்பாக இருக்கிறது. பார்க்க எளிதாகத் தோன்றினாலும் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

இதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரடாக்ஸ்(Paradox). A paradox is a statement of conclusion that seems self-contradictory but is really true. பாரடாக்ஸுக்கு ஒரு பிரபலமான உதாரணம் “I always lie”. பொய் சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த வாக்கியம் மூலம் உண்மையைக் கூறுவதால் contradictory. டான்கிராமில் நிறைய paradox உருவாக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று.

இரண்டு சதுரமும் ஒரே அளவிலான ஏழு டான்கிராம் பீஸுகளால் ஆனது என்றால், ஏன் இரண்டாவது சதுரத்தில் இரண்டு செவ்வகங்களில் இல்லை?

சற்றே பெரிய குழந்தைகளுக்கு (ஏழு வயதிற்கு மேல்)அறிமுகப்படுத்தலாம்.

டான்கிராம் பீஸுகள் செய்யும் முறை
http://tangrams.ca/inner/foldtan.htm

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த
http://www.enchantedlearning.com/crafts/chinesenewyear/tangram/

குழந்தைகள் ஆன்லைனில் விளையாட
http://pbskids.org/cyberchase/games/area/tangram.html

Advertisements

6 பின்னூட்டங்கள் ஏப்ரல் 8, 2009

குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

குழந்தைகள் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றால் கிடைக்கும் சில பொம்மைகளின் பட்டியல் கீழே:

*** முதலில் கிடைத்தது ‘தேன் நிப்பிள்’. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் குழந்தைகளை எவ்வளவு கவரும் என்பது தெரியவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.

ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்

4 பின்னூட்டங்கள் ஜனவரி 26, 2009

ஓடி விளையாடு பாப்பா

“ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.”

என்பது மகாகவியின் பொன்னான வரிகள்.

நாம் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா, தூங்குகின்றனரா, படிக்கின்றனரா என்று பார்க்கும் அளவுக்கு போதிய உடல் உழைப்பு இருக்கின்றதா என கவனிக்கிறோமா என்று ஒரு கேள்வி தோன்றியது. இதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். முன்பு “வெயிலோடு விளையாடி…” என்று குழந்தைகள் ஆனந்தமாக விளையாட நேரம் ஒதுக்கி ஆட்டம் போட்டுவிட்டு வந்ததால் , நம் பெற்றோர் இதைப் பற்றித் தனியாக யோசிக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. ஆனால் இன்று வீடியோ கேம்ஸும், டி.வி.யும் அவர்களை ஆட்டுவிக்கும் காலத்தில், இதைக் குறித்து நாம் சற்றே யோசிக்க வேண்டும்.

முதலில் விளையாட்டினால் என்ன பலன்கள் எனக் காண்போம்.

– உடல் வளமும் மன வளமும் மேம்படுகிறது
– அவர்களது கற்பனைத் திறன் மேம்படுகிறது
– குழு விளையாட்டுக்களல், மற்றவரோடு பழகும் திறன் மேம்படுகிறது
– வெற்றி தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் தருகிறது. இதனால் அவர்கள் மன உறுதி மேம்படுகிறது, அவர்களது சுயமதிப்பு உயர்கிறது.

காலங்கள் மாறினாலும் குழந்தைகள் என்றும் குழந்தைகள் தான். யோசித்து எதுவும் செய்யாத வரை குழந்தைகள் தங்கள் தேவையை அழகாகச் செய்கின்றனர். பிறந்த குழந்தையைப் பாருங்கள் , கையை காலை ஆட்டிக் கொண்டே இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அது அந்த வேலையை அலுக்காது செய்யும், குப்புற விழுவது, தவழ்வது, நிற்பது, நடப்பது என அவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். பிறகு தான் டி.வியும் மற்றவையும் அவர்கள் கவனத்தை ஈர்க்கின்றன, தம்மை மறக்கச் செய்கின்றன.

இன்று பெரும்பாலோரின் பல நோய்களுக்கு மருத்துவர் கூறும் அறிவுரை, “எடையைக் குறையுங்கள்” என்பது தான். நாம் நம் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்தினால் பிற்காலத்தில் அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடற்பயிற்சி என்பதை விட, விளையாட விட்டால் அவர்கள் அதை அனுபவித்து செய்வார்கள். விளையாட்டு என்பது கற்பதற்கும் உதவும் என்றாலும், விளையாட்டை விளையாடுவதற்காக மட்டுமே விளையாட வேண்டும். கொஞ்ச தூரம் நட என்றால் நடக்காத குழந்தைகள் கூட, கண்ணாமூச்சி என்றால் ஆவலாக ஓடி வந்து அலுக்காது விளையாடுவார்கள். சில குழந்தைகள் அதற்கும் மசிய மாட்டார்கள், ஆனால் நடனம் என்றால் ஆவலாக ஓடி வருவார்கள். இப்படி ஏதேனும் உடலுக்கு நலன் பயக்கும் பழக்கம் ஒன்றை ஏற்படுத்தி விட்டால், குழந்தைகள் என்றும் குதூகலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.

3 பின்னூட்டங்கள் திசெம்பர் 8, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

நவம்பர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Posts by Month

Posts by Category