Posts filed under: ‘விருது‘
With oscar and Nobel!!

விருது கொடுத்த பா.ராஜாராமிற்கு மிகுந்த நன்றிகள்!! அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை! நன்றிகள் ராஜாராம்…கவிதைகளுக்கும், விருதுக்கும்!! இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்!!

தாய்லாந்து உலாத்தலுக்காக கானாஸ்

வாழ்த்து அட்டைக்காக ஆயில்ஸ்

கிளிஞ்சல்களுக்காக g3

டைரி – வெறு’மை-க்காக நிஜம்ஸ்

எந்தக்கடவுள் காப்பாற்றுவார் -க்காக சின்ன அம்மிணி

பயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க…..நான் ஆதவன்

கலைந்துபோன கடுதாசி – கதிர்

சுவையான ரெசிப்பிகளுக்காக பித்தனின் வாக்கு

வாழ்க்கை வாழ்வதற்கே! – கோமதி அரசு

அழகான கவிதைகளுக்காக ராமலஷ்மி

நல்ல ஐடியாக்களுக்காக தீஷூ

அருமையான கவிதைகளுக்காக அன்புடன் அருணா

நட்சத்திரங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அமுதா

சுற்றுலாக்குறிப்புகளுக்காக முத்துலட்சுமி

சொற்சித்திரங்களுக்காக தீபா

Advertisements

Add a comment ஒக்ரோபர் 13, 2009

”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?”

”ஹேமா (இது இந்த ஹேமா!), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்…..”

”இரு..இரு…பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே ? பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல….அவங்க பேரு சொல்லு!!”

ரொம்ப யோசிக்கிறேன்!

இப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் – பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்!! எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் – எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே!!ஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா!

ஓக்கே…புரிஞ்சுடுச்சா…அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்!! பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்!!

தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் – உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன்!! இந்த ‘சித்திரக்கூடம்’ என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் – உங்கள் பதிவுகள் அண்டைவீடு – இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்! இதில் virtual friends என்ன…real friends என்ன?! அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான்! இந்த விருதை எல்லோருக்குமே – எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே – நட்போடு வழங்குகிறேன்!! 🙂

இதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல!! அவ்வ்வ்வ்வ்!I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது!!

Add a comment ஜூலை 31, 2009

சுவாரசியமான வலைப்பதிவு விருதுகள்

எதிர்பாராமல் ஒரு கிடைத்த ஒரு பூச்செண்டு போல மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அமித்து அம்மாவிடமிருந்து கிடைத்த “சுவாரசியமான வலைப்பதிவு விருது”!

நன்றி அமித்து அம்மா !தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கு நன்றிகள்!

வலைப்பதிவுகளே சுவாரசியம்தானே! எனக்கு எல்லா வலைப்பதிவுகளுமே சுவாரசியம்தான். நாஸ்டால்ஜிக் இடுகைகள் பிடிக்கும் – நகைச்சுவை பிடிக்கும்- பயணக்கட்டுரைகளில்
புகைப்படம் பார்க்கப் பிடிக்கும் – மொக்கைகள் மிகவும் பிடிக்கும் -கதைகள் பிடிக்கும் -கவிதைகளும்தான் – அனுபவங்கள் பிடிக்கும் – நான் நினைப்பதை பிறர் அழகாக எழுத்தில் கொண்டுவருவதை படிக்கப் பிடிக்கும் – மொத்தத்தில் வலைப்பதிவுகளின் எல்லா சுவாரசியங்களுமே பிடிக்கும்! இதில் ஆறு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்தான்! எனினும், ஆறு வலைப்பதிவுகளுக்கு வழங்கியிருக்கிறேன். அதைத் தொடர்வது அவரவர் விருப்பம்!

ராப் : இவரது வலைப்பதிவு மட்டுமல்ல-பிறர் பதிவுகளில் இவர் என்ன மறுமொழி இட்டிருக்கிறார் என்று பார்த்து ரசிக்கும் அளவிற்கு இவரது ஸ்டைல் பிடிக்கும். காமெடியும், அதைச் சொல்லும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து சிரிக்கலாம்! அலுவலகத்திலே பலமுறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன்! ராப்- யூ ஆர் ராக்கிங்!! வாழ்த்துகள் ராப்!!

தீபா : ஒரு சுவாரசியமான வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். சமூகம்,சிந்தனைகள் என்ற லேபிளின் கீழ் வரும் இவரது, எல்லா படைப்புகளுமே என்னை கவர்ந்தவை. மிக அழகாக நாம் நினைப்பதையே எழுத்தில் கொண்டு வந்துவிடுவார். மிஷா-வை பற்றி எழுதியதில் இருந்து தொடர்ந்து இவரது பதிவுகளை வாசித்து வருகிறேன்! வாழ்த்துகள் தீபா!

கைப்புள்ள : கைப்புள்ள-இன் வலைப்பதிவில் சுவாரசியங்களுக்கு என்றுமேக் குறைவு இருந்ததில்லை. தடிப்பசங்க-லிருந்து, நாஸ்டால்ஜிக் இடுகைகள், பயணங்கள், அனுபவங்கள் என்று கலக்குவார். கலக்கலான வலைப்பூ.நெடுநாட்களாக ஒரு மௌனமான வாசிப்பாளராக இருந்து இப்போது அதையெல்லாம் மறுமொழிகளில் ஈடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! 🙂 வாழ்த்துகள் கைப்ஸ்!

ஈழத்துமுற்றம் : இது ஒரு குழு வலைப்பதிவு.மிக சுவாரசியமான வலைப்பதிவு.கானாவை எணேய் என்றால் என்ன அர்த்தம்,பாற்றரி-னே சொல்லுவீங்களா, ரீச்சர் எபப்டி கூப்பிடுவீங்க என்று நிறைய நாட்கள் தொணதொணத்து இருக்கிறேன்.அதற்கு எல்லாம் இனி இங்கே பதில் கிடைக்கும். இது ஈழத்து வாழ்க்கையை, அவர்கள் வாழ்க்கைமுறையை,
அனுபவங்களை அசைப்போடும் வலைப்பதிவு!எல்லாவற்றுக்கும் மேல் நீண்டநாட்கள் மௌனம் காத்த சிநேகிதியின் மௌனம் கலைத்த வலைப்பதிவு! எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!! தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!!

சோம்பேறி : இவரது நகைச்சுவை பதிவுகளும் அவரது நகைச்சுவை பாணியுமே கலக்கலாக இருக்கும்! அவரது கேப்ஷன் மிகவும் பிடிக்கும்! 32 கேள்விகள் தொடர் பதிவும் , ரெண்டாப்பு படிச்சியாய்யா இடுகையும் ரசித்து படித்தவை! பள்ளி அல்லது கல்லூரி இந்தமாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்-சூழலை இயல்பாகவும் கலகலப்பாக்குவதற்கும்!! வாழ்த்துகள் சோம்பேறி!

சின்ன அம்மிணி : இவரது சிறுகதைகளும் அனுபவப்பகிர்வுகளும் மிகவும் பிடிக்கும்! ஆஸ்திரேலியா பற்றிய இடுகைகளும் சுவாரசியமானவை. இப்போது சமீபத்தில் மொக்கையிலும் குறைந்தவரில்லை என்று நிரூபித்திருக்கிறார். 🙂 வாழ்த்துகள் சின்ன அம்மிணி!

குறிப்பு:

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

Add a comment ஜூலை 15, 2009

பப்பு கையில் பட்டாம்பூச்சி!!

சீனா ஐயா பப்புவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார். நன்றிகள் தெரிவிக்கிறாள் பப்பு!

பப்பு பறக்கவிடும் பட்டாம்பூச்சிகள் செல்லுமிடங்கள் :

மோகிதா – Rithu’s dad தன் செல்ல மகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்வதற்காக!

பத்மா & வைஷு – தன் உயிரெழுத்துகளை ரசித்து ரசித்து எழுதும் ஃபேஷன் டிசைனரின் சசியின் குறும்பு குட்டீஸ்-க்காக

ஹரிணி – குடுகுடுப்பையாரின் சுட்டிப்பெண். இப்போதுதான் வலையுலகில் அடியெடுத்து வைத்திருந்தாலும் அழகாக தமிழ் எழுதுகிறார், தனது கலைக்கூடத்தில்!

வாழ்த்துகள் குட்டீஸ் !!

விதிமுறைகள் :

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Add a comment மே 3, 2009

வண்ணத்துப் பூச்சி விருது


“சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்.” என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்!

தமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ்! இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம்! (மாட்டிக்கிட்டீங்களா?!!) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில்! இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்!


“சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)”
என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்!

கொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன்! பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது!

கானாஸ் – கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்!
அதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ!!


சிநேகிதி
– சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்!!

ஆகாயநதி – பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக!

குடுகுடுப்பை – இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக!!

சின்ன அம்மிணி – மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன்! அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்!

நிலாவும் அம்மாவும் – நிலா எழுது கடுதாசிக்காக!

தமிழன் -கறுப்பி – இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்….மிக அருமையான கவிதைகள்..!

உண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்!
ராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,
நான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.
ஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்! 🙂

Add a comment ஜனவரி 8, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category