Posts filed under: ‘வாழ்த்துக்கள்‘
Made in Madipakkam

குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

Advertisements

Add a comment நவம்பர் 14, 2009

ரம்ஜான் வாழ்த்துகள்!

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்! 🙂

Add a comment செப்ரெம்பர் 21, 2009

நன்றி: – மித்ரா

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. எங்கள் குட்டி தேவதைக்கு ” மித்ரா ” என்று பெயர் சூட்டி உள்ளோம் .

11 பின்னூட்டங்கள் ஜூன் 7, 2009

வாழ்த்துகள் : வீணா !!

வீணா மற்றும் சிவாவிற்கு வாழ்த்துகள் –
குட்டி தேவதைக்கு மே 26 அன்று பெற்றோராகியிருக்கிறார்கள்!!

அம்மாக்கள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகள், Happy Motherhood Veena!

14 பின்னூட்டங்கள் மே 28, 2009

பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!

அடிக்கடி அமித்து அப்டேட்ஸ்
ரசித்து சிரிக்க அனுபவம் பேசுது படைப்புகள்
வாழ்வின் உன்னதத்தை உணர வைக்கும் கவிதைக் கணங்கள்
அவ்வப்போது மனசைப் பிழியும் பதிவுகள்
விமர்சனம் செய்ய இன்னும் பல புத்தகங்கள்- என்று
மற்றுமோர் சுவாரசியமான ஆண்டை
”மழை”யாய் பொழியும் அமித்து அம்மாவிற்கு
வாழ்த்துகிறோம்!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!

Add a comment மே 14, 2009

அன்னையர் தின வாழ்த்துகள்

பதிவுலகில் இருக்கு அனைத்து அன்னையருக்கும்
தாய்மையை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!!

அம்மாக்களின் பகிர்வுகளில் எனது அன்னையர் தின இடுகை!!

(image courtesy – Google)

Add a comment மே 10, 2009

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. “அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற” என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.

பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.

அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்:)

7 பின்னூட்டங்கள் மே 5, 2009

Happy V-day!!

தூங்கும் முன் வழக்கமாய் பப்பு சொல்லும் வசனம்தான்..

ஆச்சி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!!

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் பப்பு!!

ஏன் என்னை பிடிக்கும்? (அவளுக்கும் இருக்கும் ‘ஏன்’ டீமான் இது!!)

நீதான் என் பப்பு….குட்டிப் பாப்பா!

வெண்மதி பிடிக்காது? ஆகாஷ் பிடிக்காது..list goes on…

ம்ம்..பிடிக்குமே..எல்லாரையும் பிடிக்கும்..உங்க ஸ்கூல்ல, இந்த ஊர்ல இருக்கற எல்லா பாப்பாவையும் பிடிக்கும்!!

அவள் என்ன நினைத்து அப்படி கேட்பாளெனத் தெரியாது..எதைச் சொன்னாலும் தொக்கி நிற்கும் ஏன் என்ற ஒரு கேள்வி..முடிவிலா கேள்விகள்!! அப்படிதான் இந்தக் கேள்வியும்! ஆனால், எனக்குள் யோசனையைத் தூண்டும் கேள்வி! ஏன் என் நேசம் பப்புவோடு மட்டுமே நிற்க வேண்டும்..எல்லா குட்டிப் பாப்பாக்களுக்கும் எனது அன்பு!!

முடிவாக, V-day என்பது அன்பைச் சொல்லும் நாளெனில், இதோ, எனது சின்னஞ்சிறிய ஆர்டிஸ்ட் உங்களை புன்னகையோடு வாழ்த்துகிறாள்…பப்பு @ சித்திரக்கூடத்தை தொடரும், தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் அனைவரையும்!!

Add a comment பிப்ரவரி 14, 2009

பட்டாம்பூச்சி – பப்புவிடமிருந்து!

குடுகுடுப்பையாரின் புதிய வண்ணத்துப் பூச்சியைத் தொடர்ந்து…!

இது பப்பு செய்த பட்டர்பிளை, சாக்லேட் காகிதத்திலிருந்து. இரண்டு முறை செய்துக் காட்டியபிறகு, அதைத் தொடர்ந்து இதை செய்தாள். முதல் முறை கீழ்பாகம் மேலே வந்திருந்தது,மடிப்புகளில்லாமல். திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

இந்த பட்டர்பிளை விருது பப்புவிடமிருந்து பறந்துச் செல்கிறது நன்றிகளுடன், பப்பு @ சித்திரக்கூடத்தை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்! உங்கள் அனைவரது ஆசிகளும், வாழ்த்துகளும், ஊக்கமும் பப்புவை என்றும் சூழ்ந்திருக்கும்!

Special Thanks to her friends who made an effort to visit her over the weekend!!
எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், “பார்வைகள்” கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர். உங்களது பரிசுகளும், அன்பும், உங்களுடன் தனது உலகத்தை பகிர்ந்துக் கொண்டதிலும் பப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி! அவள், உங்களிருவரையும் தனது நண்பர்கள் என்றுதான் அடையாளப் படுத்துகிறாள். அவளோடு பொறுமையாய், அவளுக்குச் சமமாய், பேசி, பேச்சைக் கேட்டதற்கு நன்றிகள் பல!!

Add a comment ஜனவரி 27, 2009

ஹாப்பி நியூ இயர்

ஹாய் எல்லாரும் நியூ இயர் கேக் சாப்பிடறீங்களா, இது என்னோட ட்ரீட்

இந்த ரோஸஸ் கூட உங்களுக்குதான்

ம்ம்ம், அவன் என்ன செய்றான்.

ஹைய்யொ அந்தப் பொண்ணு என்ன ஏன் அப்புடி பாக்குது, எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்குது பாஸ்

என்ன மாதிரியே சிரிச்சிக்கிட்டே இருங்க எல்லாரும் கடைசி வரைக்கும்

இதுவரை நடந்த சோகங்கள் இனியும் தொடராமல், இனிவரும் வருடங்கள் எல்லாரும் சுபிட்சமாக இருக்க ஒரு குழந்தையின் வேண்டுதலும், புத்தாண்டு வாழ்த்தும்.

எல்லார்க்கும் என்னோட ஹாப்பி நியூ இயர், எல்லாரும் சமர்த்தா இருக்கணும் சரியா.
BYE BYE 2008
WELCOME 2009

8 பின்னூட்டங்கள் திசெம்பர் 31, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category