Posts filed under: ‘வரவேற்பு‘
நமது முதல் சிறப்பு விருந்தினர் – Super Mom!!!

“பார்வைகள்” கவிதா! அறிமுகம் தேவையா என யோசிக்கிறேன்! புகைப்படம், பாடல், கதை, சுவையான சமையல் குறிப்புகள் (பத்மாஸ் கிட்சன்) மற்றும் மகுடமாக கேப்பங்கஞ்சி என்று பல அவதாரங்கள் எடுப்பவர்! அணிலு, பீட்டர் தாத்ஸ் என்று பன்முகம் கொண்டவர்!நமது “அம்மாக்கள் வலைப்பூ”க்களில் சிறப்பு விருந்தினராக குழந்தை வளர்ப்பு மற்றும் அம்மாக்கள் உலகோடு சம்பந்தப் பட்டதாக பதிவுகள் எழுத ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. வாங்க கவிதா அவர்களே…உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்!! ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!!

பி.கு: அம்மாக்கள் வலைப்பூவில் விருந்தினர் இடுகை எழுத விரும்புவோர் தனிமடலிடவும்.
பரிந்துரைக்க விரும்புவோரும் கொடுக்கப் பட்டுள்ள இ-மெயில் ஐடி-க்கு மடலிடலாம்! பொருள் பெற்றோர் மற்றும் குழந்தை சம்பந்தப் பட்டதாக மட்டுமே இருத்தல் வேண்டும்!

Advertisements

5 பின்னூட்டங்கள் ஏப்ரல் 22, 2009

அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!

இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!

என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?

இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!

நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!

3 பின்னூட்டங்கள் நவம்பர் 29, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

நவம்பர் 2017
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Posts by Month

Posts by Category