Posts filed under: ‘பொது‘
சித்திரக்கூடம் இப்போ வொர்க்கிங்!

பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க…ஏற்கெனவே “தேன்கிண்ணம்” பதிவு காணாம திரும்ப மீட்ட அனுபவஸ்தர் ராம்கிட்டே கேளுங்கன்னு! ராம் சொன்னார், ப்லாக்கர் சப்போர்ட்-க்கு மெயிலிடுங்க, மறக்காம தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருங்கன்னு! அப்படியே செய்தேன்! இன்னைக்கு காலையில் முகில்தான் நினைவு படுத்தினார் (ப்லாக் இருந்தா தனக்கு தொந்தரவு வராதுன்ற நினைப்போ?!!), ‘எதுக்கும் அந்த ரிஸ்டோரை இன்னொரு தடவை செக் பண்ணு’ன்னு! அதுலே வெர்ட் வெரிஃபிகேஷன் வந்திருந்தது. அதை சரியா சொன்னதும் 30 நிமிடத்தில் மடல் வந்தது, ப்லாக்கரிடமிருந்து! பதிவும் திரும்ப கிடைத்திருந்தது!

பதிவை காணாமல் தேடியவர்களுக்கும், தொடர்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும், உதவிய முத்து, ராம், ஆயில்ஸ், தமிழ்பிரியன், ப்லாக்கர் சப்போர்ட் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கடமையை சரிவர செய்த முகிலுக்கு நன்றி!

Advertisements

Add a comment திசெம்பர் 9, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்…:-)

Add a comment நவம்பர் 26, 2009

ஆயாத்துவங்கள்!!

நம்பிக்கைகள்தானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன! கீழே இருப்பவை சிறுவயதிலிருந்து நேற்றுவரை என் ஆயாவிடம் பல்வேறு தருணங்களில் நான் கேட்டவை. ஓவர் டூ ஆயா’ஸ்!

பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் போடும்போது : பாத்திரத்தைக் காய விடக்கூடாது…தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!

ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது:
சாப்பிடும் போது அஞ்சு விரலும் குவிச்சு வைச்சுதான் சாப்பிடணும் – இல்லாட்டி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய்டும்!!

ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! (ஆனா, தலை குளிச்சாத்தானே பஃப்-னு அழகா இருக்கும் என்ற பிடிவாதத்திற்குப்பின் சீயக்காய் வைத்து தலைகுளிக்க வேண்டாம், ஷாம்பூ உபயோகப்படுத்தலாமென்று தளர்த்தப்பட்டது!)

வீடு இன்னைக்கு துடைக்க வேண்டாம் – ஊருக்குப் போய் இருக்காங்க, வந்தப்புறம் துடைச்சுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை வெளியாட்களுக்கு காசு கொடுக்க வேண்டாம். (அவங்க சம்பளப் பணம்தான்!)

புது ட்ரெஸ் புதன்கிழமை போடணும். (புதன்கிழமையெல்லாம் புதுட்ரெஸ்தான் போடணும்னு சொன்னா எப்படி இருக்கும்!!)

நகத்தைக் கடிக்காதே – தரித்திரம்.

வேலைக்காரம்மாவுக்கு சாப்பாடு முதலில் வைக்கக் கூடாது. ஒரு நாலு சாதம் எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு அப்புறம் கொடு.

வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! கஷ்டம் வந்து சேரும். (‘இதுக்கும்மேலயா?!!)

உப்பு கொட்டினியா, துப்பை கொட்டினியா? – (உப்பை கொட்டும்போது கண்டிப்பாக இதை சொல்லிவிட வேண்டும். சோ, துப்பைக் கொட்டியதாக ஆகாது!)

இருட்டினப்புறம் நகம் வெட்டாதே!

ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!

ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.

கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.

சாதத்தை வேஸ்ட் பண்ணா பிற்காலத்துலே சாப்பாடு கிடைக்காது. (அந்த பிற்காலம் எனக்கு 20 வயசுலேயே ஆரம்பிக்கும்னு தெரியாது!)

சாயங்காலத்துலே தூங்கக் கூடாது..படிப்பு வராது.

சாயங்காலத்துலே சாதம் சாப்பிடக் கூடாது…படிப்பு வராது. (நொறுக்குத்தீனி சாப்பிடலாம்)

அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!

யாருக்காவது காசு கொடுக்கும்போது வாசல்படிலே நின்னுக்கிட்டு கொடுக்காதே. ஒன்னு அவங்களை உள்ளே கூப்பிட்டு கொடு, இல்லேன்னா நீ வெளிலே போய் கொடு!

குறிப்பு: இதெல்லாம், எங்க ஆயாவுடைய ‘நம்பிக்கைகள்’ இல்லேன்னா ‘வாழ்க்கை அனுபவங்கள்’ இல்லேன்னா ‘இந்திய பண்பாடு’ இல்லேன்னா ‘இந்திய கலாச்சாரம்’ இப்படி எதுவேனா வச்சுக்கலாம்!இதேபோல, உங்கள் ஆயாவும் உங்களுக்குச் சொல்லியிருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் – பின்னூட்டமாகவோ, பதிவாகவோ!!

அடுத்த இடுகையில் ”ஆயாவின் அட்டகாசங்கள்” !!! ;-)))

Add a comment நவம்பர் 6, 2009

கோணலா இருந்தாலும்….

பப்புவோடதாக்கும்!!

இடம் : ஆயாவின் கை

உபயம் : சொல்லனுமா என்ன?டிசைன் யுவர் கேப்

வெற்று பேப்பரில் தொப்பிகளை ஸ்டேப்ளர் பின் கொண்டு செய்து வைத்திருந்தேன். பார்ட்டியில் ஆர்ட் ஆக்டிவிட்டியாக செய்வதற்காக. ஆனால், குட்டீஸ் எல்லோரும் பஸில்கள், மற்ற விளையாட்டுகளில் மூழ்கிவிட்டதால் செய்ய முடியவில்லை. போரடித்த பொழுதொன்றில் பப்பு டிசைன் செய்தது – இது!

சக்கரத்தின் தடங்களும், ஆரஞ்சு வண்ண ஆக்டோபஸூம்!

(பழைய படங்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள், ஆர்ட் ஆக்டிவிக்ட்டிகள் செய்து கனநாட்களாகின்றன. இனி மெதுவாக தொடங்குவோமென்று எண்ணுகிறேன்!)

Add a comment நவம்பர் 5, 2009

பன்றிக்காய்ச்சல், வேளச்சேரி,பள்ளிகள் மற்றும் பெற்றோர்…

அமெரிக்கா, மெக்ஸிகோ என்றுக் கேள்விப்பட்டு கடைசியில் இந்த பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டது எங்கள் வீட்டுக்கருகில். நான்காவது Hop-இல் தெரிந்த ஒருவருக்கு பாஸிடிவ். நேற்றுக்காலை வரை எந்தக்கேள்வியுமில்லாமல்தான் அவரவர் பணியிடத்திற்குச் சென்றுக்கொண்டிருந்தோம். பப்புவை பள்ளிக்கு அனுப்புவதிலும் எந்தக் கேள்வியுமில்லாமல். அந்தச் சிறுவனின் மரணம், உடனே பரவிய முன்னெச்சரிக்கை பற்றிய மின்மடல்கள், மாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், சம்பாஷணைகள் என்று நேற்று மதியத்திற்குள் நீக்கமற நிறைந்திருந்தது பன்றிக்காய்ச்சல் கவலைகள்.

மதியத்திற்குள் அலுவலக நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி விடுமுறையை அறிவித்திருந்தது. அதைக்கேட்டு முடிப்பதற்குள், வேளச்சேரியில் பத்து பள்ளிகளில் விடுமுறை என்றச் செய்தியும் சேர்ந்திருந்தது. பப்புவின் பள்ளிக்குத் தொடர்புக் கொண்டபோது, அவர்கள், இதைக்குறித்து அரசு அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும், விடுமுறை அறிவிக்க அரசு ஆணை எதுவும் அந்தப்பகுதிக்கு இல்லாததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினர்.

பப்புவுக்கு வேறு நேற்றிலிருந்து மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது. அந்த மின்மடல்களைப் படித்து படித்து எனக்கும் அதிலிருந்த அறிகுறிகள் இருப்பதாகவே ஒரு மாயை. சொல்லவா வேண்டும்…கவலைப் படுவதுதான் கை வந்த கலையாயிற்றே!! மூன்று மணிக்கு பப்பு வீட்டிற்கு வந்துவிட்டாள். டைரியில் நோட் : அரசு ஆணை வரும் வரை பள்ளி இயங்கும் என்றும் குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் இருந்தால் அனுப்ப வேண்டாமென்றும் இருந்தது. இந்தவாரம் முழுவதும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று இப்போது முடிவு செய்துள்ளோம்.

அனுப்பிவிட்டு பயந்துக்கொண்டிருப்பதை விட இது மேல் என்றுத் தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு நாளைக்கு?!! I am paranoid. அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது!
முன்பு ஆந்தராக்ஸ் பயம் பரவியபோது இப்படி இல்லவே இல்லை, நான்!! எனது அச்சம், கவலை, நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் – பப்பு!! (கடவுளுக்கு நன்றி!)

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி….எல்லாம் ஒரு வைரஸினால்! அந்தச்சிறுவனின் தந்தை சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார், அச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா என்று எத்தனையோக் காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! 😦

Add a comment ஓகஸ்ட் 11, 2009

Attachment parenting

அன்பு நெஞ்சங்களே ,
அம்மாக்களின் பகிர்வுகளில் என்னுடைய முதல் பகிர்வு. இது ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். என்னுடைய நான்கு மாத குட்டிய வச்சிக்கிட்டு தமிழ்ல எழுத சிரமமா இருக்கு. நண்பர்கள் மன்னிபீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த பகிர்வு சமீபத்தில் நான் ஒரு நாளேட்டில் படித்தது.

This writting is going to be about Attachment Parenting. Let me explain about attachment parenting in simple terms : Attachment parenting is a style of caring for your infant that brings out the best in the baby and the best in the parents.

To learn your ideal level of Attachment parenting, choose the number between 1 and 10 that most accurately rates your parenting goals and abilities in each category in the following link. when you are done, add up those numbers and read your corresponding Attachment profile.

http://spreadsheets.google.com/ccc?key=tFUFz0bOyPQvjdiUmJs1yrw

Your Attachment parenting profile :

7 ~ 29 : What worked for your mother will work just fine for you. you have been carrying baby around 40 weeks and thats just plenty, thank you very much

30 ~ 49 : All things in moderation. After all, breastfeeding is free and these days baby carriers are convenient as all get out. There is nothing wrong with a little together time.

50 ~ 70 : Having a baby was not a casual decision for you, and you are set on doing this motherhood thing right. A happy baby means a happy mommy….

4 பின்னூட்டங்கள் ஜூலை 7, 2009

‘மயில்’ விஜிராமின் ஐடியா!

“ஒரு ஆப்பிளுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியும். ஆனா, ஒரு ஆப்பிள் விதைக்குள்ளே எத்தனை ஆப்பிள்கள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியுமா?” – எப்போதோ படித்தது இது. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே எத்தனையோ ஐடியாக்களும், நம்மை நோக்கி பல வாய்ப்புகளும் வருகின்றன. ஆனா அதையெல்லாம் நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? நமக்குள் ஆர்வம் இருந்தாலும், நமக்கேத் தெரியாமல் உள்ளே இருக்கும் ஒரு மெத்தனத்தினால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

எனது அத்தை, அதிகம் படித்ததில்லை. அந்தக் காலத்து பியூசி. அவர் ஊருக்குச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்குத் தேவையான யாவற்றையும் திட்டமிட்டு அவர் இல்லாவிட்டாலும் இங்கே வீட்டில் எல்லா வேலைகளும் நடக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்வார். தோட்டத்திற்கு நீருற்றுவதிலிருந்து, மாடுகளுக்கு உணவு வைப்பது, கூண்டிலிருக்கும் பறவைகளுக்கு கவனிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டிலிருப்பவர்களுக்கு இன்ஸ்டண்ட் சாப்பாடுகளும்! அவர் மட்டும் கார்ப்பரேட் பக்கம் வந்திருந்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பார் என்று வியப்பதுண்டு. அவ்வளவு ஏன்?நமது எல்லோர் குடும்பங்களிலேயும் எடுத்துக் கொள்ளுங்களேன். சரியான திட்டமிடல், உரிய நேரத்திற்கு செய்து முடிக்கும் பாங்கு, எந்த காரியம் நடக்க யாரை அணுகுவது என்று அசத்தினாலும் அவர்களது குடும்பத்தைத் தாண்டி இந்தத் திறமைகள் வெளியே வருவதில்லை.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேனென்றால், ‘மயில்’ விஜிராம் ஒரு நல்ல ஐடியாவுடன் வந்திருக்கிறார். அம்மாக்கள் வலைப்பூவில் சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்!

”பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in – பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.”

Add a comment ஜூலை 6, 2009

தந்தையர் தினம் – அறிவிப்பு!

ஹாய் அம்மாஸ்,
அன்னையர் தினத்தை கருத்தாகக் கொண்டு மிக அருமையான படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கும், அம்மாக்கள் வலைப்பூ வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரின் இடுகையும் மிகச் சிறப்பான பகிர்வாக இருந்தது! இந்தமாதம், தந்தையர் தினத்தைக் கொண்டு வருகிறது. அப்பாக்களுக்கும் நமது வாழ்வில் சரிபங்கு இருக்கிறது அம்மாவைப் போல! பள்ளிக்கும் ஹாஸ்டலுக்கும் கொண்டுவந்து விட்டு அழைத்துச் செல்வது முதல், யாராவது திட்டிவிட்டால் பரிந்துக்கொண்டு வந்து பாதுகாப்பது, நாம் கேட்பதற்கு முன்னரே நமக்கு பிடித்ததை வாங்கி அசத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது/எடுக்க உதவுவது என்று அப்பாக்கள் நமது வாழ்வில் நிறைந்து இருக்கிறார்கள்.
அதனால் இம்மாதம், நாம் தந்தையரைக் கொண்டாடுவோம்!

அன்னையர்தின அறிவிப்புஇடுகையில் சொல்லப் பட்ட guidelines-ஐ தொடர்வோம், இப்போதும்! அப்பாவிற்கு கடிதமோ, அல்லது புதிதாக அப்பாவாகி இருப்பவர்களுக்கு டிப்ஸோ அல்லது உங்கள் நினைவுகளையோ, உங்கள் குழந்தையின் அப்பாவிற்கு சொல்லவிரும்புவதையோ….உங்கள் கற்பனைகளே எல்லை! அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களுக்கும் அதே! லேபிள்: உங்கள் பெயர் மற்றும் ஃபாதர்ஸ் டே 09.

கோடை தணிந்து விடுமுறையும் முடிந்திருக்கும் இந்தமாதத்தில், வலைப்பூ உறுப்பினர் அம்மாக்கள், விடுமுறை சுவாரசியமான பயண அனுபவங்களை/சுற்றுலாதல குறிப்புகளை நமது வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளலாம். அதாவது, நமது அனுபவங்களில் பிறருக்கு உபயோகமாகயிருக்கும் என்று நினைப்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள், டிப்ஸ் போன்றவற்றை நமது வலைபூவில் பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், தந்தையர்தின இடுகைகள் மூலம்! 🙂

7 பின்னூட்டங்கள் ஜூன் 1, 2009

அம்மாக்கள் தினம் – அறிவிப்பு!


(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,

மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!

ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!

அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.

நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! 🙂

Happy Mother’s day!

6 பின்னூட்டங்கள் மே 1, 2009

அ ஃபார் ….


ஃபார் அவ்வ்வ்வ்வ்!

அவ்வ்வ்வ் என்பது பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் என்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது!
🙂 ஆனால், அது என்னைப் பொறுத்த வரை அழுவது மாதிரி மட்டுமல்ல! அதிர்ச்சி அல்லது
ஜெர்க்கான ப்லீங்சை பிரதிபலிக்கவும்தான்! இன்று நான் சந்தித்த சில அவ்வ்வ்வ் தருணங்கள்!

தருணம் 1 :

காலையில் எழுந்தவுடனே பப்பு கதை சொல்லு என்றாள், பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து!

உனக்கேத் தெரியுமே, நீ சொல்லு பப்பு!

நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல! இன்னொரு வாட்டி சொல்லு!

அவ்வ்வ்வ்!

தருணம் 2 :

தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.

சமையல் செய்வீங்களா?

ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!

அவ்வ்வ்வ்வ்வ்!

முன்பு வேலை செய்த இடத்தில் இரு நாய்க்குட்டிகளை கவனித்துக் கொண்டார்களாம்,அந்த நாய்க்குட்டிகளுக்கு் சாப்பாடு செய்ததைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்! I dropped the idea!

அ ஃபார் …

இது புதிதாக தோன்றிய ஐடியா,பப்புவிடமிருந்துதான்! அவள் எதற்கோ அப்படி சொல்லப் போக என்னையும் தொத்திக்கொண்டது. அ, ஆ, இ, ஈ என்று தொடங்கும் எழுத்துகளில் தோன்றுவதைப் பதிவிடலாமென்று. தினமும் போடுவேனென்று சொல்ல முடியாது, ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!

Add a comment ஏப்ரல் 20, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category