Posts filed under: ‘பப்பு‘
ஏக் தோ தீன்…

சில நாணயங்களை எடுத்துக்கொண்டோம். பப்புவுக்கு ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டும் நன்றாகத் தெரிகிறது. அவளுக்கு எல்லா ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய். நாணயங்களில் ஒன்று மற்றும் இரண்டு ரூபாயை அடையாளம் காண தெரிந்திருக்கிறது. தலை, பூ-வை பார்த்தபின், நாணயங்களை நோட்டில் வைத்து ட்ரேஸ் எடுத்தோம். பப்பு, க்ரேயானை நன்றாக அழுத்தி வண்ணமடித்துவிட்டதால் அடையாளம் காண முடியவில்லை.இங்கிலீஷ் கார்னர்:

முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தோம்…

” பாய் கட் பண்ணிடுங்க” என்றேன்.

நோ பாய்கட்..கேர்ல் கட்தான்…இல்ல..ஹேர் கட்..எனக்கு ஹேர்கட்தான் வேணும்!! – பப்புதான்!

aaya will பூட்டு! – ஆயா கதவை பூட்டியிருப்பார்கள் என்பதற்கு!

i will close the door and தாப்பா(தாழ்ப்பாள்)!

Advertisements

Add a comment திசெம்பர் 1, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்…:-)

Add a comment நவம்பர் 26, 2009

சனி-ஞாயிறு

சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். ‘இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு’!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.

‘வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா’ என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல், “நீ பெரிய பொண்ணாகி ஏரோபிளேன்லே எங்கெல்லாம் போவே” என்று பேச்சை மாற்றினேன். ஒருமுறை அவள் ‘பெரியவளாகி சன் கிட்டே போய் ஏரோபிளேன் ஓட்டுவேன்’ என்று சொல்லியிருந்தாள்.

இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”

Add a comment நவம்பர் 23, 2009

ஸ்டைலு ஸ்டைலுதான்…

பப்புவிற்கு மழலை போய்விட்டது என்றாலும் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டும் இன்னும் மாறவில்லை.

அம்போது – ஒன்பது

ஒளைச்சு வச்சிருக்கேன் – ஒளிச்சு வைச்சிருக்கேன்

நான் அமக்கறேன் – அமுக்கறேன் (ஆயாவிற்கு கால் அமுக்கினால் போட்டிக்கு வருவாள்)

அமதியா இருங்க – அமைதியா இருங்க (அவள் பேசுவதை கவனிக்காமல் யாராவது பேசினால்)

கல்யாணி – கல்யாணம்

வத்தலம் – வத்தல், அப்பளம்!

Add a comment நவம்பர் 21, 2009

பப்பு டைம்ஸ்

”நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள். நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்,

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! :-))

ஆச்சி, நான் வயித்துக்குள்ளே என்னெல்லாம் பண்ணேன்?

இது ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி போல..பத்து நிமிடத்திற்கு ஓடும்! அதே போல, நான் பேபியா இருக்கும்போது என்னெல்லாம் பண்ணேன்(?) என்றும்!

மேலும், அவள் குட்டிக்குழந்தையாக இருந்து ஃப்ர்ஸ்ட் பர்த்டே, செகண்ட் பர்த்டேவெல்லாம் கொண்டாடியதை கேட்டுக்கொள்வாள்.

இதெல்லாம் தினமும் நடக்கும் கதைதான் இப்போதெல்லாம் என்றாலும் இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்.

“நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?”

காலையில் குளிக்கும்போது முகத்தில் சோப்பு போடுவதுதான் போராட்டமாக இருக்கிறது. சோப்பை அவளது கையில் குழைத்து போட வைப்பேன். முதலிரண்டு நாட்கள் வரை நன்றாக போய் கொண்டிருந்தது! அதன்பிறகு சுணக்கம். இப்படி ஏற்படும் நேரங்களில், கண்ணை மூடிக்கொண்டு திறப்பதற்குள் செய்து முடிப்பது அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவது என்ற வழிவகைகளை கடைப்பிடிப்போம்.

என் கண்களை மூடிக்கொள்ளவேண்டுமென்றும், திறப்பதற்குள் அவள் முகத்தில் போட்டு முடிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று! நானும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன், கை துவாரங்களின் வழியே பார்த்தவாறு! போடுவது போல தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்து, ‘நீ போடவேயில்லை பப்பு, இப்ப நாந்தான் போடப்போறேன்’ என்றேன். டக்கென்று வந்தது பதில்,

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!!

Add a comment நவம்பர் 19, 2009

பப்பு மணி மாலை…

தெர்மோகோல் மணிமாலை. மாலை மாதிரி வரைந்து தந்ததும் கோந்தை தடவி பப்பு ஒட்டினாள்.

பழக்கூடை – வரைந்து_வண்ணமடித்து_வெட்டி_ஒட்டியது! அதிலிருப்பது, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் பச்சை ஆப்பிள். ( யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது…!!!) சிலசமயங்களில் படங்களுக்கு விதவித வண்ணம் தீட்டுவாள். சிலசமயங்களில் எல்லாம் ஒரே வண்ணமாக இருக்கும்..முழு படத்திற்கும் பிரவுன், சிவப்பு, மஞ்சள் என்று – சிலசமயங்களில் எ.கா.படத்திலிருப்பது போலவே தீட்டப்பட்டிருக்கும்! என்ன இருக்குமோ…அவள் மனதில்! கூடை என் கை வண்ணம்..ஹிஹி!

கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! 🙂

Add a comment நவம்பர் 17, 2009

Made in Madipakkam

குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

Add a comment நவம்பர் 14, 2009

பசங்க!!!

இப்போ பயமெல்லாம் இல்லை..கேட்டால் ‘பாட்டுலே அப்டிதான் வருது’ என விளக்கம் வேறு! அவளுக்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது!

kanda.mp3

பள்ளியில் கற்றுக்கொண்டால் போலிருக்கிறது – ஏதோ ஒரு பூரியைத்தான் சொல்கிறாளென்று நினைத்துக்கொண்டேன் முதலில் கேட்டபோது! பிறகே அந்த வாய்ஸ் மாடுலேஹனில் புரிந்தது அது…இதுவென!!

eppuri.mp3

Add a comment நவம்பர் 12, 2009

கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்


”ஒருநாளைக்கு ஒரு சாக்லேட்தான் சாப்பிடனும்,
நிறைய சாக்லேட் சாப்பிட்டா காலையிலே
எழுந்திருக்கும்போது
பல் கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

Add a comment நவம்பர் 10, 2009

talk in English : Walk in English

வெகுநாட்களுக்கு முன் அவளுக்குத் தெரியாமல் எடுத்தது – ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம்! ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம்! :)) No, pink tower, long rod, ok -தான் எனக்கு புரிந்தது!!

தற்போது உதிர்க்கும் ஆங்கில முத்துகள் சில

see here..out will not come – வெளிலே வராது பாரு என்பது அர்த்தம். (பெயிண்ட் ட்யூபை அழுத்தச் சொன்னபோது!)

hereonly you go – இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் – (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது!)

i no your friend – நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்!

Add a comment நவம்பர் 9, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category