Posts filed under: ‘பப்பு-ரூம்‘




ப்ராஜக்ட் பப்பு – I

பப்புவிற்காக வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன். அவளது அறையென்று சொல்ல முடியாமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், அவளது ஆக்டிவிட்டிஸ்-க்காக ஒரு இடம் தேவை, மேலும் பழக்கங்களில் ஒரு ஒழுங்கினை ப்ராக்டிஸ் செய்யவும்!! நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்!!;-)

சுவாரசியமாக்குவதற்காகவும், அந்த இடத்தை பப்புவிற்கு பிடித்தமானதாக்குவதற்காகவும்(she is into wilflife nowadays!!) சில ஐடியாக்கள்!!

முதல் கட்டமாக, அறையின் ஒரு பக்க சுவரில் இரண்டு மூலைகளிலும் இரு மரங்களை வரைந்திருக்கிறேன், பொந்து உட்பட! இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன்!! (நன்றி : இணையம்! )

முதலில் பென்சிலால் இந்த மரங்களை வரைந்துக்கொண்டேன். 15-20 நிமிட வேலை!!

நன்றி டூ ஏசியன் பெயிண்ட்ஸின் சின்ன டப்பா!! இது இரண்டாவது நாள். 45-55 நிமிடங்களானது!!

இது மூன்றாம் நாள். இலைகள் வண்ணம் தீட்டும்போது கொஞ்சம் ஒழுகிவிட்டிருக்கிறது.
சரி செய்யும் வேலை பாக்கி. இதுவும் ஒரு மணி நேர வேலை!! (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) !!)

மரங்கள் ரெடி, இப்போது அவள் மரங்களின் கீழே உறங்கலாம், கதைகள் படிக்கலாம்…மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு அவளது நண்பர்களோடு பேசி விளையாடலாம்!!

அடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை!! மீதி அடுத்தப் பாகத்தில்!!

உதவிய உபகரணங்கள்:

Advertisements

Add a comment ஜனவரி 18, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Posts by Month

Posts by Category