Posts filed under: ‘பப்புஸ் வாய்ஸ்‘
பசங்க!!!

இப்போ பயமெல்லாம் இல்லை..கேட்டால் ‘பாட்டுலே அப்டிதான் வருது’ என விளக்கம் வேறு! அவளுக்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது!

kanda.mp3

பள்ளியில் கற்றுக்கொண்டால் போலிருக்கிறது – ஏதோ ஒரு பூரியைத்தான் சொல்கிறாளென்று நினைத்துக்கொண்டேன் முதலில் கேட்டபோது! பிறகே அந்த வாய்ஸ் மாடுலேஹனில் புரிந்தது அது…இதுவென!!

eppuri.mp3
Advertisements

Add a comment நவம்பர் 12, 2009

அப்பூறம்….

Get this widget | Track details | eSnips Social DNA

புத்தகத்தை வைத்துத் தானாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த பப்புவிற்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது. The very hungry caterpillar கதை.
மெதுவாகச் சொல்ல சொன்னதும், பாதியில் அவளுக்கு ரெக்கார்ட் செய்வது தெரிந்ததுமே அந்தக் குரல் மாற்றத்திற்குக் காரணம்!

Add a comment செப்ரெம்பர் 12, 2009

உன் குத்தமா என் குத்தமா…..;-)

Get this widget | Track details | eSnips Social DNA

‘பெரிய கதை சொல்லு, பப்பு’ என்றதற்கு – அவள் சொன்ன பெரிய்யயய கதை!!

தெளிவில்லாமல் இருந்தால் தெரியப்படுத்தவும்! 🙂

Add a comment ஓகஸ்ட் 7, 2009

பப்புவின் குரலில் ஒரு கதை!

Get this widget | Track details | eSnips Social DNA

“(ஒரு காட்டுலே) ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த சிங்கம் …ஆங்..ஒரு ஒரு அனிமல்ஸா வர சொல்லி சாப்பிட்டிட்டுருந்துதாம். அப்பறம், ஆங்…அப்புறம் வந்து ஒரு நாள் முயல் வந்துதாம். அப்பறம், ஒன்னை மாதிரி ஒரு கிணத்துல சிங்கம் இருக்கு, வா காமிக்கறேன் அப்படி சொல்லுச்சு எங்கே வா பாரு அப்டி சொல்லிட்டவுடனே அப்பபறம் கிணத்துலே போய் காமிச்சுது. அப்பறம் சிங்கம், குதிச்சு, நான் ஒன்னை கொல்றேன்…அப்படி சொல்லுச்சு. கிணத்துக்குள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே…போச்சா…சிங்கம் செத்துபோச்சு!”

பப்பு அவளது அத்தையிடமிருந்து கற்றுக்கொண்டது – இந்தக் கதை!

Add a comment ஜூலை 22, 2009

பப்பு பாடும் பாட்டு!

damara.mp3

அவளது பள்ளியில் கற்றுத் தந்த பாடல்! mp3 வடிவில் தந்த கானாஸுக்கு நன்றிகள்!!

Add a comment மார்ச் 18, 2009

ஒளியும் ஒலியும்

பப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ! கடைசியில் கண்டுகொண்டவள், “கோ” என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்!) “i am tiny seed sleeping” என்ற ரைமுக்கு
அவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்!

இது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா இருக்கிறது! நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள்! இல்லையென்றால், “பாக்ய விதாத”விற்கு பிறகு, ஜனகன என்று தொடங்கிவிடும். ஜனகன மன பாடும் போது எழுந்து அசையாமல் நிற்கவேண்டுமென்று விரைவில் கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கொஞ்சம் தப்பிக்கலாம்!

Get this widget | Track details | eSnips Social DNA

இது என்ன பாடல் என்று சொல்லவும்! சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு “பப்பு சிடி” பரிசு!!;-)))

Get this widget | Track details | eSnips Social DNA

Add a comment ஜனவரி 6, 2009

How are you today, sir?

இந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது! பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகல
எக்சைட்டடாக பார்த்துக் கொண்டிருந்தேன்! முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று
சொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) பின்னர் thumpkin, பட்டர்பிளையாகவும், க்ரோக்கடைலாகவும் மாறியது!!

வரிகள்

Where is Buttterfly?
Where is Butterfly?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
fly away, fly away.

ஒரிஜினல் வீடியோ!

ஒரிஜினல் – வரிகள்

Where is Thumbkin?
Where is Thumbkin?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
Go away, go away.

Add a comment ஜனவரி 2, 2009

ரைம் டைம்

சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து வாயை சிரிப்பது போல் காட்டுவதைப் பார்த்து யோசிக்கிறீர்களா? அந்த அனிமேடட் பாடலில் வரும் பொம்மை பாப்பா சொல்லிவிட்டு அப்படி புன்னகைக்கும். அதுதான் இது!! ( . – இ-திருஷ்டிப் பொட்டு) 😉

Photobucket

”ஆயாம்மா டைனி ” என்று பப்பு பாடும் பாடலைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அது கொஞ்சம் முன்னேறி இதோ இப்படி ஆகியிருக்கிறது!!

Add a comment திசெம்பர் 2, 2008

சின்ன Incy makoda!!

ஆங்கில வெர்ஷன்:

Incy Wincy spider climbing up the spout
Down came the rain and washed the spider out
Out came the sun and dried up all the rain
Now Incy Wincy spider went up the spout again!

தமிழ் வெர்ஷன்;

சின்ன சின்ன சிலந்தி மேலே ஏறிச்சாம்
மழை வந்ததாம்,சிலந்தி கீழே விழுந்ததாம்
வெயில் வந்ததாம்,சிலந்தி மேலே ஏறிச்சாம்.

இந்தி வெர்ஷன்

chota mota makoda oopar chad gaya
Barish bari aaya,makoda gir gaya
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.

பப்பு வெர்ஷன்:

incy wincy spider, climbing up the spout,
Down came the rain and washed the spider out
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.
chota mota makoda oopar chad gaya
மழை வந்ததாம் makoda gir gaya

spider.WAV

(இன்னும் இது போன்ற வித்தியாச வெர்ஷன்கள் கிடைக்கும் இந்தப் பாட்டுக்கு! we have not opted for Hindi in her school though!)

Add a comment திசெம்பர் 1, 2008

ஜிங்கிள்ஸ் ஆஃப் கோழிக்குஞ்சு!!

ஏற்கெனவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தபடி பாடல்கள் மட்டும்!

jingle bells :

jingle bells-1.WAV

Shorter version of கோழிகுஞ்சு பாடல்!
கொஞ்சம் அதிகமாவே மசாலா தடவியிருக்காங்க பப்பு, கண்டுக்காதீங்க! 🙂

kozhi.WAV

Add a comment நவம்பர் 21, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category