Posts filed under: ‘தீஷு‘
குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்

எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும் க‌தை கேட்கும் ஆர்வ‌ம் உண்டு. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாம் ந‌ம் க‌ற்ப‌னையில் உதித்த‌ க‌தைக‌ள் சொன்னாலும், சில‌ நேர‌ங்க‌ளில் தெரிந்த‌ க‌தைக‌ளும் கை கொடுக்க‌த்தான் செய்கின்ற‌ன‌.

அவ்வ‌கையில் முக்கிய‌மான‌ க‌தைக‌ளும் புத்த‌க‌ங்க‌ளும் கீழே உள்ள‌ லிங்குக‌ளில் உள்ள‌ன‌,

1. http://www.mainlesson.com/displaybooksbytitle.php
2. http://www.mainlesson.com/displaystoriesbytitle.php
3. http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

Advertisements

3 பின்னூட்டங்கள் ஓகஸ்ட் 11, 2009

தந்தைக்கு

காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் காலம் இது. அதனால் நமக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுக்கும் பரிசு பொருட்கள் காசு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் செலவழித்து செய்ததாக இருந்தால், நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் என்பது என் நம்பிக்கை. வரயிருக்கும் தந்தையர் தினத்திற்கு குட்டீஸ் தன் தந்தைக்குப் பரிசு அளிக்க சில பெயிண்டிங் செயல்முறைகள்.

1. Bubble wrap painting :

தேவையான பொருட்கள் :

1. Bubble wrap
2. பெயிண்ட்
3. காகிதம்

Bubble wrap மீது குழந்தைகள் பெயிண்ட் செய்ய வேண்டும். அவர்கள் திருப்தி அடைந்தவுடன், காகிதத்தை பெயிண்ட செய்யப்பட்ட Bubble wrap மீது வைத்து மெதுவாக அழுத்த சொல்லவும். காகிதத்தில் பெயிண்ட் அழகாக ஒட்டியிருக்கும்ம். காய வைக்க வேண்டும்.

2. Marble painting:

தேவையான பொருட்கள் :

1. கோலி குண்டு
2. பெயிண்ட்
3. காகிதம்
4. செருப்பு டப்பா

கோலி குண்டை பெயிண்ட்டில் போட்டு, முழுவதும் பெயிண்ட் இருப்பது போல் உருட்ட வேண்டும். செருப்பு டப்பாவில் காகிதத்தை வைத்து, குண்டை காகிதத்தின் மேல் போட்டு டப்பாவை லேசாக ஆட்ட வேண்டும். குண்டு உருளும் இடத்தில் பெயிண்டால் கோடுகள் வரைந்து கொண்டே போகும்.

3. உப்பு/மண் பெயிண்டிங் :

தேவையான பொருட்கள் :

1. கோந்து
2. பெயிண்ட்
3. உப்பு அல்லது மண்
4. காகிதம்

கோந்தால் காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அதன் மேல் உப்பு அல்லது மண்ணைத் தூவவும். ஈரம் காயும் முன் பெயிண்ட்டால் அதன் மேல் ஒற்றி எடுக்கவும்.காய வைக்கவும்.

4. Monoprint :

தேவையான பொருட்கள் :

1. பாலீத்தின் காகிதம்
2. பெயிண்ட்
3. காகிதம்

குழந்தையை பாலீத்தின் அல்லது பெயிண்ட் ஒட்டாத காகிதத்தில் பெயிண்ட் பண்ண வேண்டும். முடித்தவுடன் அதன் மேல் வெள்ளை காகிதம் போட்டு, லேசாக அழுத்த வேண்டும். காகிதத்தைக் காய வைக்கவும்.

2 பின்னூட்டங்கள் ஜூன் 19, 2009

எரிமலை

இதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்குப் புரியாது என்று நினைப்பதையெல்லாம் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிறு உதாரணம், பால் பொங்கி வரும் பொழுது என் அருகில் நின்று கொண்டிருந்த என் மூன்று வயது மகள் என்னிடம், “ஏன் பொங்கின பால் கீழ வருது?” என்றாள். வெப்பம், கொதிநிலை போன்ற விளக்கங்கள் அளித்து முடித்தவுடன் நான் உரையாடலைத் தொடருவதற்காக “ஏன் தூக்கிப் போட்ட பால்(Ball) கீழ வருது தெரியுமா?” என்றேன். தெரியாது என்றவுடன் gravity என்று சிறு விளக்கங்களும் கொடுத்தேன். சிறுது நேரத்தில் பார்க் சென்றோம். மேகத்திலிருந்து மழை வருகிறது என்று தெரிந்த அவள், வானத்தைப் பார்த்துக் கொண்டே என்னிடம் “மேகத்திலிருந்து மழை வருவது கூட gravity தானா ?” என்றாள். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. நாம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பஞ்சு போல் உறிஞ்சி கொண்டேயிருக்கிறார்கள்.

சொந்த கதைக்கான காரணம், குழந்தைகளுக்கு எரிமலைப் பற்றி சொன்னா என்ன புரியும் என்ற கேள்வியைத் தவிர்க்கத்தான். ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் அதன் அர்த்தங்களையும் அவர்கள் பதிய வைக்கிறார்கள் என்று கூறத்தான். எரிமலையை வீட்டில் செய்வதற்கான வழிமுறையை வலையில் தேடிய பொழுது கிடைத்தது. அதைப் பகிரவே இந்த பதிவு. பதியும் ஐடியா கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி 🙂

தேவையான பொருட்கள் :

1. Baking soda – 2 tsp

2. Vinegar – 2 tsp

3. Food colouring (optional)

ஒரு கிண்ணத்தில் Baking soda போட்டு, அதில் red food colouring சேர்த்துக் கொள்ளவும். அதில் vinegar ஊற்றினால், பொங்கிக் கொண்டு வந்து கொட்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப மாவில் மலை போல் கிண்ணத்தில் சுற்று வைத்தால், அவர்கள் ஆர்வத்தைத் தூண்டிவது போல் இருக்கும். இதன் மூலம் volcano போன்ற vocabulary முதல் நிறைய தெரிந்து கொள்ளவர். பின் நான் http://video.google.com/videoplay?docid=5138291898525259472போன்ற வீடியோக்கள் காண்பித்தேன். சற்று பெரிய குழந்தைகளிடம் படம் வரைய சொல்லலாம். இது எரிமலையைப் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

9 பின்னூட்டங்கள் ஜூன் 9, 2009

நாமே செய்யலாமே

நம் குழந்தையை அழைத்துக் கொண்டு, பிற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்குச் செல்வது வழக்கமானது தான். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் பொழுது அவர்களுக்குப் பல பாடங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குழந்தைகளும் அடுத்தவர்களின் பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தி விட்டு கொடுத்து விட வேண்டும், யார் பொருட்கள் ஆயினும் பகிர்தல் வேண்டும் போன்றவை கற்கின்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்களை அடுத்தவர் வீட்டில் எடுத்த இடத்தில் வைக்கச் சொல்கிறோமா?

முன்பு தீஷு பெரிய பெரிய விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாண்டதால் பிரச்சனைத் தெரியவிலை. ஆனால் இப்பொழுது பஸில் போன்றவை சிறு சிறு பகுதிகள் கொண்டவை. ஒன்று தொலைந்தாலும் விளையாட முடியாது. அதேப் போல் ஒன்றுக்கு ஒன்று மாறினாலும் ஒவ்வொரு டப்பாவாக தேட வேண்டும். ஒரு குழந்தை விளையாண்டு விட்டு போனால், அனைத்தையும் அதற்குரிய டப்பாவில் வைத்து, எடுத்த இடத்தில் வைப்பதற்குக் குறைந்தது அரை மணி நேரமாகிறது. குழந்தையுடன் வரும் அம்மாக்கள் ஒன்றை முடித்தவுடன் எடுத்து வைத்து விட்டு தான் மற்றொன்றை எடுக்க வேண்டும் என்று கூறினால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இப்பொழுது நாங்கள் யார் வீட்டிற்குச் சென்றாலும் எடுத்து வைத்து விட்டு வருவதற்குப் பழகியிருக்கிறோம். இதனால் அவர்களுக்கும் சிரமம் குறையும், நம் குழந்தையும் கற்றுக் கொள்ளும்.

9 பின்னூட்டங்கள் மே 19, 2009

பபில்ஸ்


Grow up reading with Bubbles

வயது வரம்பு : 2 முதல் 6 வரை
மொழி : ஆங்கிலம்

அதிலுள்ள ஆறு கதைகள் :

1. Bubbles goes to School
2. Bubbles The Artist
3. Bubbles Plays with Fire
4. Bubbles Has a Toothache
5. Bubbles The Litterbug
6. Bubbles Is Selfish

கதைகள் என்பதை விட ஆறு சிறு நிகழ்வுகள். Bubbles என்னும் குட்டிக் குரங்கு கதாநாயகன். பள்ளி என்றால் என்ன?, சுவரில் வரையாமல் பேப்பரில் வரை, தீயில் விளையாடக் கூடாது, நிறைய மிட்டாய் சாப்பிடக்கூடாது, குப்பைக்கூடையில் தான் குப்பை போட வேண்டும், பகிர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆறு கதைகளின் சாராம்சம்.

படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எழுத்துக்களுக்கும் மிகவும் பெரிதாக இருக்கின்றன. நாம் வாசித்துக் காட்டுவதற்கும், வாசிக்கப் பழகும் குழந்தைகளும் உபயோகப்படுத்தும் படியுள்ளது.

வாசிக்கும் பொழுதே தன்னை Bubblesஉடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டாள். நான் மிட்டாய் நிறைய சாப்பிட மாட்டேன், நான் முந்தி தான் சுவத்தில வரஞ்சேன் போன்றவை. ஒரு முறை படித்துக் காட்டிய உடன் படங்களைப் பார்த்தே கதை சொல்லிவிடலாம்.

கதைகள் சிறார்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும் படி இருக்கின்றன. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட பத்து முறையேனும் வாசித்து இருப்போம். பயனுள்ளப் புத்தகம்.

6 பின்னூட்டங்கள் மே 15, 2009

அன்னையர் தின வரலாறு

உலகமெங்கும் அன்னையர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்னையர் தின வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கூகுளில் தேடியதில் எனக்குக் கிடைத்தத் தகவல்கள் அனைவருக்காகவும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் கடவுளின் அன்னையான ர்கியாவை அன்னையர் தினதில் போற்றினர். பின்னர் கிறிஸ்தவர்கள் அன்னை மரியின் பெருமையைப் போற்ற ஈஸ்தர் ஞாயிறுக்கு முன்னால் இருக்கும் மூன்றாம் ஞாயிற்றை அன்னையர் தினமாகக் கொண்டாடினர். பின்பு அது எல்லா அன்னைகளுக்குமாக மாறி மதரிங் சண்டே(Mothering Sunday) என்று அழைக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவில் குடிப்பெயர்ந்த ஆங்கிலேயர்களால் மதரிங் சண்டே கை விடப்பட்டது.

நாம் இப்பொழுது கொண்டாடும் அன்னையர் தினம் 1907யில் ஆனா ஜர்விஸ் (Anna M Jarvis) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தன் அன்னையை கெளரவிக்க தேசிய அன்னையர் தினம் கொண்டாடினார். முதல் அன்னையர் தினத்தில் அவர் தன் தாயின் விருப்பமான மலர்களை அனைவருக்கும் வழங்கினார். அது தூய்மைக்கும், பொருமைக்கும், இனிமைக்கும் குறியாகும். அன்னத்து அன்னையர்களையும் கெளரவிக்கும் பொருட்டு, 1914லாம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வில்ஷனால் மே மாத இரண்டாவது ஞாயிறு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அன்னையர்கள் தினம் பிரபலம் அடைந்தது அடுத்து, பரிசு கொடுப்பது அதிகரிக்கப்பட்டது. அன்னையர் தினத்தின் தூய்மை இந்த வியாபாரமயமாக்கலால் கெட்டுவிட்டது என ஜர்விஸ் வருந்தினார். ஆயினும் அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு இன்று உலகமெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

நாம் எல்லா அன்னைகளுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். பரிசு வழங்க விருப்பப்பட்டால், அன்னைக்குப் பிடித்தப் பொருளை நம் கையால் செய்து கொடுப்போம். இது ஜர்விஸின் வருத்தை சற்றுக் குறைக்கலாம்.

அன்னையர் தின வாழ்த்துகள்.

நன்றி :
http://en.wikipedia.org/wiki/Mother’s_Day
http://www.dayformothers.com/mothers-day-history/

4 பின்னூட்டங்கள் மே 6, 2009

மாண்டிசோரி புத்தகம்

சந்தனமுல்லையின் கூற்றுக்கிணங்க, மாண்டிசோரி புத்தகம் “A montessori mother” by Dorothy Canfield Fisher download செய்வது பற்றிய தகவல் இங்குள்ளது.

3 பின்னூட்டங்கள் ஏப்ரல் 9, 2009

டான்கிராம் (Tangram)

Floor puzzle, peg puzzle மாதிரி இல்லாமல் புது வகையான பஸில் தேடிய பொழுது என் கவனத்திற்கு வந்தது டான்கிராம். பல பேருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு புதிதாக இருந்ததால், என்னைப் போல் தெரிந்திராத பெற்றோருக்குத் தெரிவிக்கவே இப்பதிவு.டான்கிராம் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்லாது கணிதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. It is good for problem solving and pattern design skills.

இந்தப்பழமையான விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெறும் ஏழு பீஸுகள் மட்டுமே உள்ளன. அதை வைத்து ஆயிரத்திற்க்கும் மேல் உருவங்கள் உருவாக்கலாம். இதன் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. ஏழையும் உபயோகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பீஸும் அடுத்ததைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக்கூடாது. அதில் உருவான உருவங்களைக் காண வியப்பாக இருக்கிறது. பார்க்க எளிதாகத் தோன்றினாலும் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

இதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரடாக்ஸ்(Paradox). A paradox is a statement of conclusion that seems self-contradictory but is really true. பாரடாக்ஸுக்கு ஒரு பிரபலமான உதாரணம் “I always lie”. பொய் சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த வாக்கியம் மூலம் உண்மையைக் கூறுவதால் contradictory. டான்கிராமில் நிறைய paradox உருவாக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று.

இரண்டு சதுரமும் ஒரே அளவிலான ஏழு டான்கிராம் பீஸுகளால் ஆனது என்றால், ஏன் இரண்டாவது சதுரத்தில் இரண்டு செவ்வகங்களில் இல்லை?

சற்றே பெரிய குழந்தைகளுக்கு (ஏழு வயதிற்கு மேல்)அறிமுகப்படுத்தலாம்.

டான்கிராம் பீஸுகள் செய்யும் முறை
http://tangrams.ca/inner/foldtan.htm

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த
http://www.enchantedlearning.com/crafts/chinesenewyear/tangram/

குழந்தைகள் ஆன்லைனில் விளையாட
http://pbskids.org/cyberchase/games/area/tangram.html

6 பின்னூட்டங்கள் ஏப்ரல் 8, 2009

நான் எழுதுகிறேனே மம்மி

ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழகுவது முக்கியமான ஒரு கட்டமாகும். எழுதுவது, வாசிப்பது போன்றவை பேசுவது போல் இயற்கையாக வருவதில்லை. நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த வயதில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. சிறு வயதிலே எழுதப் பழக்குகிறார்கள் என்ற காரணத்தால் சில தோழிகள் சில பள்ளிகளை நிராகரித்திருக்கிறார்கள்.

சிறு வயதில் எழுதப் பழக்குவது தவறா? குழந்தை விருப்பமில்லாமல் இருந்தால் தவறு. விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்துவதால் அவர்கள்களுக்கு எழுதுவதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும். எழுதுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு கை, கண், விரல், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். மூளையில் பதிந்துள்ள எழுத்துக்களின் வடிவங்களை விரல்கள் ஒரு இடத்தில் எழுத கையும், கண்ணும் உதவ வேண்டும்.

எப்பொழுது எழுதப் பழக்கலாம்? அது குழந்தைக்கு குழந்தைக்கு மாறுபடும். ஒரு குழந்தை சீக்கிரமாக எழுதுவதால் அறிவாளி என்றோ, எழுதாததால் மக்கு (சாரி, வேறு வார்த்தை தெரியவில்லை) என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தையின் வளரும் சூழலுக்கு ஏற்ப அதன் எழுதத் தொடங்கும் வயது மாறுபடும். பெற்றோர்கள் அதிகம் புத்திகங்கள் வாசித்தாலோ, எழுதினாலோ குழந்தைகளும் எழுத விருப்பப்படுவார்கள். சிறு வயதிலிருந்தே (பிறந்ததிலிருந்தே) புத்தகங்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டினால், அவர்கள் வேகமாக எழுதப் பழகுவார்கள்.

எழுதப் பழக்குவதற்கு முன்

1. எழுத்துக்களைக் கண்டுபிடிக்கப் (identify letters) பழக்குங்கள்.
2. பேப்பர், பேனா, மார்க்கர், crayons போன்றவற்றை எப்பொழுதும் குழந்தைக்கு எடுக்க வசதியாக இருக்கும் இடத்தில் வைத்திருங்கள். கிறுக்கவும், வரையவும் பழக்குங்கள்.
3. குழந்தைகளுக்கு பலவித வடிவங்கள் வரைய கற்றுக் கொடுங்கள். புள்ளி புள்ளியாக வடிவங்கள் வரைந்து புள்ளிகளை இணைக்கச் சொல்லுங்கள்.
4. பெயரை எழுதப் பழக்குங்கள். கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பொழுது அவர்கள் பெயரை அவர்களே எழுத சொல்லுங்கள்.

ஆதாரங்கள் :

http://www.everyday-education.com/articles/teachtowrite.shtml
http://www.ed.gov
http://www.zerotothree.org
http://children.webmd.com/features/when-should-kids-learn-read-write-math

5 பின்னூட்டங்கள் பிப்ரவரி 11, 2009

கலரிங்

நான் Anti-colouring புத்தங்கள் படித்திருக்கிறேன். கலரிங் மட்டும் பண்ணுவதால், குழந்தைகளில் கற்பனைத் திறன் குறைந்து போகும், அவர்களை வரைய விட்டால் கற்பனைத் திறன் வளரும் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் சமீபத்தில் கலரிங் ஏன் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதற்கு, ஏதோ இணையத்தளத்தில் படித்தேன். எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் படித்தது இது தான்.

1. Accepting Boundaries – இந்த இடத்திற்குள் தான் கலர் பண்ண வேண்டும் எனும் பொழுது Boundaries கற்றுக் கொள்கிறார்கள். இது பின்னால் அவர்கள் எழுதப் பழகும் பொழுது, மிகவும் உபயோகமாக இருக்கும்.

2. Focus – அவர்கள் விருப்பட்டுச் செய்யும் பொழுது அதில் கவனம் அதிகரிக்கிறது.

3. Grip – பேனா, பென்சில் பிடிக்கப் பழகுகிறார்கள்.

4. Motor skills – கலரிங் பண்ணும் பொழுது விரல்கள், கை போன்றவற்றிக்கு நல்ல வேலைக் கொடுக்கப்படுகிறது.

5. Co-ordination – கை-கண் ஒருங்கினைப்புக்கு நல்லது.

6. Colour recognition – கலர்களைக் கற்றுக் கொள்வர்.

6 பின்னூட்டங்கள் திசெம்பர் 15, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category