Posts filed under: ‘தமிழ்மணம்‘
நன்றிகளுடன்..

கடந்த வாரத்தில் என்னையும் என் பதிவுகளையும் பொறுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!! பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய நல்ல இதயங்களுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்!!

தீவிரவாதம் மறைந்து மனிதம் துளிர்க்க பிரார்த்தனைகளோடு விடைபெறுகிறேன்!!

தொடர்ந்து சந்திப்போம்!!

Advertisements

Add a comment ஜூலை 27, 2008

a ப்பார் ஆப்பிள்

நன்றி சர்வேசன்! நல்ல முயற்சி!
இதோ நான் அடிக்கடி செல்லும் இணையப்பக்கங்கள்!!

alibaba – எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் தேடலாம், நுகர்வோர்களுக்கானது!!

babycenter – குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு இன்ன பிற!!

CHETANA – என் SIL- க்கு வேலை தேடும் முயற்சியில்!

esnips – இந்த புத்தகமோ,பாடலோ, இங்கு கிடைக்கும், யராவது வலையேற்றியிருந்தால்!!

google – அறிமுகம் தேவையில்லை

ibnlive – செய்திகளுக்காக

joelonsoftware – இது சாப்ட்வேர் பற்றி!!

kiddiesdayout – சென்னையில் குழந்தைகளுக்கான ஆக்டிவிடிஸ், எது எங்கு இருக்கிறதென அறிய!!

media-convert – ஒரு கோப்பிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்ற! வீடியோவிலிருந்து, எம்பி3 க்கு மாற்ற!

mouthshut – எந்த பொருளைப் பற்றிய விமர்சங்களுக்கும்

orkut– அறிமுகம் தேவையில்லை

qaiindia– இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக

raaga – பாடல்களுக்கு

softwarecertifications – இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக

thatstamil – லோக்கல் செய்திகளுக்காக

vanillaplace – வாரயிறுதியில் என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ள

womenone – இது டிப்ஸ், பேஷன்,சமையல் இன்னபிற!!

நான் அழைக்க விரும்பும் மூவர் :

கயல்விழி முத்துலெட்சுமி
காட்டாறு
மங்களூர் சிவா

வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம்,
என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.

Add a comment ஜூலை 24, 2008

பதிவுலகத்திற்கு…

வணக்கம்,

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா…
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” – இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” – இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை…! 2004-ல “ஹனி டியூ’ ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!

நம்ம ஓமப்பொடியார் சுதர்சனின் வலைப்பூவின் வழியாக நான் வந்து இறங்கிய இடம் தமிழ்மணம், தேன்கூடு!. ஃப்ரீயா இருக்கும்போது படிக்கலாம்னு புக்மார்க்கிட்டு, அப்பப்ப படிச்சிகிட்டிருந்தது போய், பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!

என்னோட சிறு வயது நினைவுகள்,நிகழ்வுகளை பதிந்து வைத்துக்கொள்வதற்காக ஆரம்பித்த வலைபதிவு இப்போது என் மகள் பப்புவின் குறும்புகளையும், மழலை பேச்சுகளையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் படம் பிடிக்கிறது!வளர்ந்தப்பின், அவள் ஒரு நாள் இதை படிக்கையில், அவள் எவ்வள்வு சுவாரசியமானவளாயிருந்திருக்கிறாளென்பதை
அவளுக்கு உணர்த்தக்கூடும், இந்த வலைப்பூ! (போதுமா முன்கதை சுருக்கம்!!)

ம்ம்..திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! எனக்கு அது ஒரு த்ரில்!!
அநேகமா, நிறைய பேரு அப்படிதான்னு நினைக்கிறேன்…

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!

பொறுமை காத்து ஆதரவு அளிக்கவும்!!

Add a comment ஜூலை 18, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category