Posts filed under: ‘சினிமா‘
Jungle Book


(Thanks – Image : google)

அண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது! யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை!கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! 😉

பப்பு முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், பார்த்ததையே திரும்பத் திரும்ப பார்க்க விரும்பினாள். அடுத்து என்ன வரும் என்று சொல்லுமளவிற்கு! பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை! 🙂

இப்படத்திலிருக்கும் அருமையான பாடலின் நான் ரசிக்கும் வரிகள்..

Look for the bare necessities
The simple bare necessities
Forget about your worries and your strife
I mean the bare necessities
Old Mother Nature’s recipes
That brings the bare necessities of life .

And don’t spend your time lookin’ around
For something you want that can’t be found

When you find out you can live without it
And go along not thinkin’ about it
I’ll tell you something true

The bare necessities of life will come to you

வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??!

(Thanks: youtube)

Advertisements

Add a comment ஏப்ரல் 12, 2009

பப்பு 2009

புது வருடம் பற்றியொன்றும் பெரிதாக புரிதலில்லையென்றாலும், பப்புவிற்கு அது ஏதோ ஒரு
சிறப்பான நாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. “ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள். தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு.

முழுதாக படங்கள் பார்த்ததில்லை இதுவரை, ரைம்ஸ் சிடிகள், கதை சிடிகள் நீங்கலாக! அதனால், படங்களை, குழந்தைகளுக்கான படங்களை பப்புவிற்கு அறிமுகப்படுத்த விரும்பினோம், புதுவருட பரிசாக என்றும் கூட கொள்ளலாம்! ஜங்கிள் புக் டிவிடி-தான் வாங்குவதாகதான் பிளான், ”george of the jungle”-ஐ பார்க்கும் வரை! (அவள் கண்டிப்பாக இதை ரசிப்பாள் என்று அனுமானம் பொய்க்கவில்லை.) கெட் ஒன் ஆஃபர் இருந்ததால், “thomas and friends” -யை தேர்வு செய்தேன். அவளது ட்ரெய்ன் விளையாட்டுக்கு உதவலாமென்று!!(movies + chocolate – Not a bad idea to spoil a kid, huh!)அந்த யம்மி ப்ளம் கேக், எங்கள் பக்கத்துவீட்டு ஆன்ட்டியின் கைமணம்! Thanks, Eva aunty!

இரண்டுமே ஹிட்!! முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், கடைசிவரை பார்த்தாள். ஜார்ஜின் காட்டுப்பகுதி-தான் இஷ்டம்! பேசும் குரங்கு, தாவும் மனிதன், சிங்கத்துடன் சண்டை, மரவீடு, நாயாக தன்னைக் கருதிக்கொண்டிருக்கும் யானை என்று முதல் பகுதிதான் அடிக்கடி பார்க்கிறாள்! தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!!

சென்ற வருடம், apple tree ரைம்ஸ் சிடிகளும், பெபிள்ஸ் சிடிகளும், ஜாதகா டேல்ஸ் (நன்றி வல்லியம்மா!)-மாக ஓடியது. அனிமேஷன் கதாபாத்திரங்களிலிருந்து இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு!

Add a comment ஜனவரி 4, 2009

சினிமா சினிமா…..என்னோட ரெண்டு பைசா!!

சினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி!
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.

அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)

மை டியர்…க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!

ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!

ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.

அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி மன்னிப்பு கேட்டது!!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!

தமிழ் சினிமா இசை?

இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது…மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை… :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை…ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!

அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!

அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா

Add a comment ஒக்ரோபர் 14, 2008

SRK

முன்பதின்மங்களில் எனை மிகவும் ஈர்த்த பாடல்!!
what a die-hard fan of SRK I was!!

நானும் என் தம்பியும் உபயோகித்த பிரம்பு நாற்காலியை பப்புவிற்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என் பெரிம்மா, அதோடு நினைவுகளையும்!!
அதான், கொஞ்சம் நாஸ்டால்ஜிக்!!

Add a comment ஓகஸ்ட் 16, 2008

"அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும்.
த்ரிஷாவையும்!! “அக்கம்-பக்கம் அக்கா” என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.

akkam_pakkkam-1.mp3 –

பப்பு குரலில் “அக்கம் பக்கம்” !!

ஃப்ளாஷ்பாக்

சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில் பார்க்கும்போது…ம்ம்..
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!! (பிடித்த நடிகையை மார்க்கெட் போனபிறகு சீரியலில் பார்ப்பது போல) Dar படத்தில் இந்தப் பாடலில் ஜூஹியை எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம்.

எதிர்காலத்தில் த்ரிஷாவும் குர்-குரேயை விளம்பரப்படுத்தலாம், யார் கண்டது!!

Add a comment ஜூலை 1, 2008

"பார்த்த முதல் நாளே" வின் கடைசி நாள்!!

கமலின் “பார்த்த முதல் நாளே” பாடல் வந்த நாளிலிருந்து பப்புவுக்கு மிகவும் இஷ்டம்.
அவளுக்காகவே நாங்கள் சன் மியுசிக் சானலில் டீவியை வைத்திருப்போம்.அந்த பாடல் இசைக்க ஆரம்பித்த உடன் தலையை ஆட்டி ரசிப்பாள். இது ஒரு ஒன்றேகால் வயதிலிருந்து தொடர்ந்தது. பாடலில் அவர்கள் இருவரும் தண்ணீரில் குதிக்கும்போது,பாட்டு முடிய போது என்பாள், அந்த இசையை வைத்து!

யாராவது சானலை மாற்றிக்கொண்டிருக்கும்போது அந்த பாடல் வந்துவிட்டால், ஒரு மைக்ரோ செகண்ட் கேட்டால் கூட பாடலை வைக்க சொல்லுவாள். நாங்களும், அந்த பாடல் வரும்போது, அவள் வெளியில் இருந்தால் கூப்பிட்டுவிடுவோம். இது ஒரு இரண்டு வயது வரை தொடர்ந்தது!!
ஒரு நாள், அந்தபாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது,

“மாமா அக்காவ ஏன் தூக்கறாங்க”
“மாமா அக்காவ ஏன் தொரத்தறாங்க?”
“மாமா அக்காவ ஏன் தண்ணில தூக்கிப்போடாறங்க”

என்று கேட்க ஆரம்பித்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தோம், அந்த பாடலுக்கு சென்சார் !!!

சின்னசிறு கேள்விகள்தான்..ஆனால் பப்புவின் வளர்ச்சிப்படிகளை எப்படி உணர்த்திவிடுகின்றன!!!

Add a comment ஜூன் 19, 2008

கற்றது கம்ப்யூட்டர்… II

பாகம் I படிக்க..

கற்றது கம்ப்யூட்டர்… I

மக்கள் கொந்தளிக்கிறார்கள். கருத்து கணிப்பு, பேட்டிகள் நடக்கின்றன..
சாப்ட்வேர் சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகிறார்…

எல்லாரும் சாப்ட்வேர்ல நிறைய சம்பாரிக்கறாங்க, சந்தோஷமா இருக்காங்கன்னுதான நினைக்கறீங்க..ஆனா இல்ல..,எவ்ளோ சம்பாரிச்சாலும், அள்ளி அள்ளி செலவழிக்க எவ்ளோ பெரிய பணக்காரணா இருந்தாலும் ஆசைப்படமாட்டான்.அதுவும் இல்லாம, அவங்களுக்கு, மத்த வேலைல இருக்கற மாதிரி பென்ஷன் கிடையாது..ஜாப் செக்யூரிடியும் கிடையாது..
அமெரிக்கால சந்தை வீழ்ச்சின்னா..பாதிக்க படறது இவங்கதான். எப்போ ஃபயர் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது.அது மட்டுமா..ஒரு நாளைக்கு குறைஞ்சது 12 மணி நேரமாவது வேலை செய்யணும். அதுவும் இல்லாம..மேல் நாட்டு டைம்ல கான்ஃப் கால்ல ஸ்டேட்டஸ் குடுக்கணும். மத்தவங்க மாதிரி 8 மணி நேர வேலை மட்டும் இல்ல. விளைவு..50 வயசுல வரவேண்டிய வியாதில்ல்லாம் 35 வயசுலயே வருது அவங்களுக்கு..அதை பத்தி யாராவது கவலைபபடறீங்களா?!!அதுவும் இல்லாம, அவங்க சம்பளத்தில பாதிய வருமானவரியா கட்டறாங்க. அத நேர்மையா கட்டறதனாலதான்..”இந்தியா ஒளிர்கிறது”. அதனால அவங்களை குற்றம் சொல்றத விட்டுட்டு, எல்லா விலைவாசியையும் கட்டுப்படுத்துங்க..

சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் :

சார்..நான் இந்த வேலைய வாங்க எவ்ளோ கஷ்டபட்டேன் எனக்குத்தான் தெரியும் சார். 2001 recession-ல என் வேலை போச்சு..அப்போ இவங்க என்ன சார் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அதுவும் இல்லாம நான் வருஷாவருஷம் புதுசா
வர்ற டெக்னாலஜிய படிச்சு என்னை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு..இந்த கஷ்டம் வேற ஃபீல்டுல இருக்கா சார்.

இன்னொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :

சார்..நான் mca படிச்சிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செஞ்சேன்.இப்ப வரைக்கும் எந்த வாய்ப்பும் எனக்கும் வரல சார்..கம்ப்யூட்டர் மட்டும் இல்ல..வேற என்ன துறையில இளங்கலை படிச்சிருந்தாலும், ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகிடமுடியுதே..அதை யாரும் தடுக்கலையே!! மொத்ததுல இது ஒரு அட்வாண்டேஜ்!

மற்றொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :

சார்..10ஆயிரம்/15 ஆயிரம் வீட்டு வாடகை எதுக்கு கொடுக்கணும்..அதை பேங்க்குக்கு குடுத்தா
கொஞ்ச நாள் கழிச்சு வீடாவது நாக்கு சொந்தமாகும்ன்னு ஒரு நப்பாசையில் வீடு வாங்குறோம்!!
ஆனா…வட்டி உயர்ந்து உயர்ந்து இப்ப..மொத்த சம்பளத்தையும் இல்ல EMI கட்ட வேண்டியிருக்கு! இதுக்கு பேங்க் காரணமா..இல்ல நாங்க காரணமா??

இன்னொரு சமூக ஆர்வலர் :

சாப்ட்வேர்-ல அதிகம் சம்பாரிக்கறான்னா, அவங்கள உருவாக்கிற ஆசிரியைகளுக்கும் அவங்க அளவுக்கு சம்பளத்தை normalise பண்ணு!! அவங்களை உருவாக்கின 5ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இன்னும் 10ஆயிரம்தான் வாங்கறான்னா..அதுல சாப்ட்வேர் மக்களோட தப்பு என்ன?

போலீஸ் அவர்களைத் தேடவில்லை….ஏன்னா இது spoof…

“நாம இந்த கம்ப்யூட்டரை படிச்சதுக்கு ஆர்குட்-ஐயும், தமிழ்மணத்தையும் effective-ஆ
உபயோகிக்க கத்துகிட்டதுதான் ஒரே பயன்னு” சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரும் பதிவு எழுத/படிக்க போய்டறாங்க..
வாங்க..நாமளும் போவோம்!!

Add a comment ஒக்ரோபர் 16, 2007

கற்றது கம்ப்யூட்டர்…

நான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்னா…கஸ்டமர் முன்னாடி என் மானம் போச்சு..சொன்ன டெட் லைன்ல முடிக்க முடியல..அதானால என்ன.மானமே போச்சுன்னாலும், அடுத்த ப்ராஜ்கட்ட பார்க்க, ஆன்சைட் போறேன்.
இன்னும் நாலு வருஷத்தில, இந்த மெயில் நீ படிக்க நேர்ந்தா..பதில் போடு!

இந்த மெயில அனுப்பிட்டு, தூதரகத்துக்கு போலாம்னு கிளம்பறேன்…எங்க டேமெஜர் கூப்பிடறார்..என்னனு பார்த்தா, அந்த ப்ராஜ்கட் ஊத்தி மூடிட்டாங்களாம்..ஏன்னா, அமெரிக்கானோட வேலையெல்லாம் இந்தியனுக்குதான் போகுதுன்னு மக்கள் கலவரம் பண்றாங்களாம்..அதனால் அமெரிக்க அதிபர் H1B விசா-வை கட்டுப்ப்டுத்தி வச்சிருக்காராம்..ம்ம்..இந்த மாதிரி நேரத்தில நான் ஆன்சைட் கிளம்புனது..வேற என்ன..
என்னோட துரதிருஷடம்..!!

சரி..அதாவது போச்சுன்னு இன்னொரு ப்ராஜக்ட்-ல தூக்கி போட்டாங்க..2 வருஷம்…ஜப்பான் கஸ்டமர்….சரின்னு அங்க போனா..அவன்..ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்றானாம்..4 மணிநேரம் தான் தூக்கம்..அதுவும் lab-லயே படுத்து!! பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னு!!அது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-ல!!நான் அனுப்பின மெயில் உனக்கு கிடைச்சதான்..இல்ல..எனக்கே திரும்ப ஃபார்வ்ர்டு ஆகிடுச்சான்னும் தெரியல!!
அவன் மொழியும் புரியாம, சாப்பாடும் கிடைக்காம, அந்த ப்ராஜ்க்ட முடிச்சேன்! அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசை வச்சு இங்க செட்டில் ஆகலாம்னு, கிடைச்ச ஏர்பஸ்-சை பிடிச்சி இங்க வந்தா….

முதல்ல ஒரு வாடகை வீட்ட பார்த்து குடியேறலாம்னு வீடு பார்க்கப் போனேன்..தெரியாம வீட்டு புரோக்கர் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது எப்ப்டை அவனுங்களுக்கு நம்ம மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சுடும் போல..என்ன…சாப்ட்வேர் எஞ்சினியரான்னான்.
ஆமான்னேன். எங்க வேலை பார்க்கற…TCS-ஆ…CTS-ஆ..விப்ரோ-வா..சத்யமா ன்னு கேட்டான். இவன் ஏன் இதையெல்லாம் கேட்கறான்னு மனசுல நெனச்சிகிட்டு..விப்ரோன்னு சொன்னேன். அப்போ ஒரு 30/35 வாங்குவியா..சரி..இந்த வீடுதான்..15ஆயிரம்
வாடகை..10மாசம் அட்வான்ஸ் ன்னு சொன்னான். இயோ..15ஆயிரமா…2 பெட்ரூம் வீடுதானே..ஏன் இவ்ளோன்னு 10 மாசம் அட்வான்ஸ் -ல்லம் அதிகம்ங்க..ன்னேன்.
யோவ்..35ஆயிரம் வாங்கறே..15ஆயிரம் வாடகை கொடுக்க மாட்டியான்னான் அவன்.
நான் எப்பங்க 35ஆயிரம் வாங்கறேன்ன்னு சொன்னேன்..என் சம்பளம் 25ஆயிரம்ரூபாதாங்க, எதுவாயிருந்தாலும் அவ்ளோ வாடகை கஷ்டங்கனேன்.இப்படி வீடு தேடி அலைஞ்சப்பதான் புரிஞ்சது..சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பேர்ல, மத்தவங்க எல்லாம் குளிர் காயரது..அதனால..எல்லா ரியல் எஸ்டேட்காரனையும் போட்டேன்.
அப்புறம்..பார்த்தா..departmant store..உளுந்து ஒரு கிலோ 30 ரூபான்னு வாங்கினது போய்..இப்போ கிலோ 98 ரூபா. அபுறம்..பால்..எலலா விலயும் ரெண்டு பங்கா இருக்கு! இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா..?சொல்லு..சொல்லு!!

ம்ம்..இல்ல சார்..- கருணாஸ் பயந்துகொண்டே!

ஏண்டா..எங்க அப்பா, ஒரு சாதரண கிளார்க். அவரு சம்பளத்துல என்னை +2 வரைக்கும் படிக்க வச்சாரு..கவர்மெண்ட் கோட்டால,BE படிச்சேன்..அதுக்கே அவரு கடன் வாங்கி..PFவாங்கின்னு கஷ்டப்பட்டாரு..எதுக்கு..நல்ல வேலைக்கு போனா, நாலு காசு
சம்பாரிக்கலாமேன்னு! அத முடிச்சு வெளில வந்தா அங்க படிச்ச பேசிக், ஃபோட்ரானு, கோபாலும் எங்கயும் வேலைக்கு ஆகல..நான் compiler design-la செய்ச ப்ராஜக்டயும் எவனும் மதிக்கல..மறுபடியும் ஒரு கோர்ஸ் படிச்சு, வாக்-இன் வாக்-இன்னா
ஏறி இறங்கி..ஒரு வேலைய வாங்குறதுக்குள்ள…தாவு தீர்ந்துடுச்சு!! வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்!இதுகெல்லாம் என்ன காரணம்..சொல்லுடா..?

பே – கருணாஸ்!

இது நடுவில, எவனோ. என் மெயில ஹாக் செஞ்சு, ஆனந்திக்கு மெயில் ஃபார்வர்டு பண்றான்.
அத திரும்ப மீட்டு, நான் அவளை சந்திச்சேன்.அவளும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில HR-ஆ இருக்கா..20ஆயிரம் ரூபா சம்பளத்துல! அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன்.!! சரி..சரி..கேசட்டை குடு..நானே சன் டீ.வி ஆபிசிலே குடுத்திடறேன்.

ஓ..அப்படியா சார்..நீங்க செஞ்சதெல்லாம் கொலையா சார்..டாக்டருங்க சம்பாரிக்கலயா..இல்ல
சினிமாகாரங்கதான் லட்ச லட்சமா சம்பாரிக்கலயா..சாப்ட்வேர்-னாலதான்னு சொல்றது தப்புதான் சார்!! – கருணாஸ்.

டேய்..சொன்னத மட்டும் செய்..அந்த கேசட்ட மட்டும் குடுத்துட்டுக் கிளம்பு!!

கேசட் ஒளிபரப்பப்படுகிறது… மீதி பார்ட் -2இல்!!

இது ஒன் அண்ட் ஒன்லி ஜாலிக்காக!!

Add a comment ஒக்ரோபர் 15, 2007

கற்றது தமிழ்…

பிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.
யுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்…சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்பு…ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..

ஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது….அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது?

தயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.

“என்ன சேரப்போறே?” என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே “ஏன், மார்க் கம்மியா” என்ற கதாநாயகியின் கேள்வி “நச்”.

“தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல!! ” போன்ற கணங்கள்!!

கால் சென்டரில வேலை செய்பவரிடம் “உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி?? என்று கேட்பதும்…

நண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று…”இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்..” என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று…மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா!

ஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி.”நெசமாத்தான் சொல்றியா?” என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்…இவரது அடையாளம்…மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்!

பின்னனி இசை..மற்றும் பாடல்கள்..நன்று!
தேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற… பட்டாம்பூச்சி,
தனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..!!

ஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..!!

தமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா?

இங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்?

– இது எனக்குள் எழுந்த கேள்விகள்!!

Add a comment ஒக்ரோபர் 8, 2007

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category