Posts filed under: ‘கதை‘
சகுனத்திற்குப் பின் ”உலகம்”

சினிமாவில் காட்சி முடியும் நேரம்.சீனிவாசனும் அவரது நண்பர் பரந்தாமனும் பார்த்துக் கொண்டிருந்தனர். கதாநாயகியை அவளது தந்தை அடித்துக்கொண்டிருந்தார், அவள் காதலித்தக் குற்றத்திற்காக. சீனிவாசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அழுதுழுது கண்கள் வீங்கிப் போயிருந்தன.

கதாநாயகனை, கதாநாயகியின் தந்தை ஆள் வைத்து அடிக்கும் காட்சி. அதற்கும் கண்கலங்கினார் சீனிவாசன். கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டபின் கூறினார், “பாவம் அந்த சின்னஞ்சிறுசுக, என்ன தப்பு பண்ணுச்சுங்க? இப்படிக் கொடுமைப் படுத்தறானுங்களே! இவன மாதிரி அப்பாவையெல்லாம் நிக்கவைச்சு சுடணும்” என்றார்.

சினிமா முடிந்தது. முடிவு…நாயகனும், நாயகியும் தங்கள் கதையை முடித்துக் கொள்கின்றனர். வரும் வழியில் பரந்தாமனிடம், “பாவம்டா, அதுங்க இப்படியா வக்கையை முடிச்சுக்கணும், எங்கேயாவது ஓடிப் போய் இருக்கலாமில்ல” என்று புலம்பிக்கொண்டே வந்தார். வீடு வந்து சேர்ந்தார்.

சாப்பாடு போடும் போது அவ்ரது மனைவி சொன்னார், “என்னங்க, நம்ப பொண்ணு யாரையோ லவ் பண்றாளாம், ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததா வேலைக்காரி சொன்னா”.

எங்கே அவ, கூப்பிடு”

வந்து நின்றவளைப் பார்த்து “என்ன அம்மா என்னவோ சொல்றாளே, உண்மையா”?

”ஆமாப்பா”

“எனண்டி, என்னையே எதிர்த்து பேசறியா(எங்கே எதிர்த்து பேசினாங்கன்னு கேட்கப்பிடாது!!!ஏதோ அப்போ எழுதிட்டேன்)நாளையிலேர்ந்து நீ எங்கயும் போக வேணாம். வீட்டிலேயே இரு. மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடறேன். காதலாம், கத்தரிக்காயாம்” (யப்பா என்னா வசனம்!!) என்றார், சினிமாவில் மட்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தந்தை!!

குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! 🙂

Advertisements

Add a comment ஜனவரி 20, 2009

பழசும் புதுசும்!

இது புதுசு :

அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!

இது பழசு: சகுனம்

”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!

நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!

ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!

என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!

Add a comment ஜனவரி 9, 2009

நானும் மனிதர்களும்

(உபயம் : பள்ளிக்காலத்து கதை நோட்டு)

மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? (ஒரு சில வாக்கியங்கள் எனது மற்றும் என் கிளாஸ் தோழிகளின் அனுபவங்கள். )

நான் மாடியில் இயற்கையின் மடியில் போதையுற்று இருந்தேன். நான இலைகளின் இனிய கீதத்தில் மயங்கியிருந்தேன். கீழே, காற்றில் ஓடும் சருகுகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். மேகப்பட்டாடையை கிழித்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் நிலவின் குறும்பை ரசித்து மெய் சிலிர்த்தேன்.

கீழே, வீட்டில் சலசலப்பு. இன்று சன் டீவியில் “நீங்கள் கேட்ட பாடலாம்.”

ஓ, சொல்ல மறந்துவிட்டேனல்லவா!
நான் 16 வயதுடைய இளம்பெண்.

கீழேயிருந்து அம்மா கூப்பிட்டாள்.

”கேட்ட பாடல்”கூட கேட்காம என்ன பண்றா, மாடியில” – பக்கத்து வீட்டு பெண்ணின் சந்தேகம்.

“என்ன செய்றா மாடில் இவ்வளவு நேரம்”? – ஒரு அம்மாவின் கேள்வி.

“இந்த நேரத்தில என்ன வேல, மாடில? காலங் கெட்டுக் கிடக்கு, பொண்ணுங்களை அப்படியே
சுசந்திரமா விட்டுட முடியாது” – ஓசி டீவி பார்க்க வந்த ஒருவரின் லெக்சர்.

ஓ, உங்களுக்குத் தெரியுமா? தென்றலின் தீண்டுதலின் சுகம்? நீங்கள் அறிவீர்களா பிறைநிலவின் புன்சிரிப்பை?

பிறைநிலவு எனை நோக்கிச் சிரித்தது என்று நான் சொல்வேனாகில் நீங்கள் பக்கத்து விட்டு சந்திரன் உன்னை பார்த்து ஜொள்ளுவிட்டானா என்பீர்களே?

பறவைகளின் மோகனராக கொஞ்சலில் என மறந்தேன் என்றால் மோகன் உனைப் பார்த்து சீழ்க்கையடித்தது என் காதில் எபப்டி விழாமல் போயிற்று என்று கேட்பவராயிற்றே நீங்கள்?

பக்கத்துவீட்டு சரளா ஓடிப்போனதையும், அம்புஜத்தின வீட்டுக்காரன் சின்ன வீடு வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி பேசும் உங்களிடம் நான் என் ரசனைகளை எப்படி பகிர்ந்துக் கொள்வேன்?

சினிமாவிலே வாழ்ந்து, கனவிலே சஞ்சரித்துவிடும் உங்களிடம் என்னை எப்படி அறிமுகப் படுத்திக்கொள்வேன்?

என் வயதொத்த சக மாணவனுடன் பேசினாலும் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் உங்களுக்கு எங்கள் நட்பை எப்படி புரிய வைப்பேன்?

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தேன்.வராண்டாவில் மோகன் மாமா. உள்ளே நுழைகிறேன். அவர் பேசியது என் காதில் பாய்ந்தது, வஜ்ரமாக.

“உங்க பெண்ணை நான் கடைத்தெருவில் ஒரு பையனுடன் பார்த்தேன், காலங் கெட்டுக் கிடக்கு, என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணு. அடுத்த நிமிஷம் என்ன செய்வான்னு யாருக்கு என்னத் தெரியும்? நம்ப மானம் காத்தில பறக்கறதுக்கு முன்னாடி கண்டிச்சு வையுங்க”.

அப்பாவிற்கு கோபம் மூக்கின் மேல் வந்தது. “மாமா சொல்றாரே, உண்மையா”?

ஒருமுறை இருவரையும் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “மாமா, உங்க பெண்ண இப்பதான் அருண் ஐஸ்கிரீம் வாசலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதுக்கும் கண்டிச்சு வையுங்க, ஏதாவது தப்பு நடக்கற்துக்குள்ளே. உங்க தங்கச்சி காய்கறி காரன்கிட்டே கலகலன்னு அப்படி என பேசுவா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஏடாகூடாம நடக்கறதுக்கு முன்னாடி” – என்றபடி செருப்பை காலிலிருந்து வீசியெறிந்துவிட்டு, மாடியில் சென்று கதவை படீரென சாத்திவிட்டு அழ ஆரம்பிக்கிறேன் நான்!!

தமிழ்பிரியன் அண்ணா, உங்க குழலோவியத்தில் இந்த கதையை கொஞ்சம் பரிந்துரைப்பீர்களா?:-))

Add a comment திசெம்பர் 22, 2008

வா ஓடி போகலாம்

மு.கு: இது அடுத்தக் கதை. திகில் கதையாக்கும்!!ஓக்கே..ஸ்டார்ட்!!

அவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தனர். அவர்கள் என்பது ஒரு பெண்னும், ஒரு ஆணும். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடந்தனர்.

அவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.

அவர்களிருவம் பயத்தினால் கையை கெட்டியாக பற்றிக் கொண்டு ஓடத் துவங்கினர். கௌரி கூறினாள், “என்னால் இனிமே முடியாது, மெதுவாப் போலாம்”.

அவன் கூறினான், “அதோ தெரியுதே, அதுகிட்ட போயிட்டா ஒண்ணுமே தெரியாது. வா, போலாம். அப்புறம் ஜாலிதான்.”

அவர்கள் அன்கே போனதும் “ஹோ” எனக் கத்தியபடி, “கௌரியும் சங்கரும் வந்தாச்சு, வாங்க விளையாடலாம்” என்றபடி விளையாடத் துவங்கியது அந்தச் சிறுவர் கூட்டம்!!

Add a comment திசெம்பர் 15, 2008

திருந்திய மனம்

பள்ளி படிக்கும் வயதில், கதைகளும் ஜோக் என்ற பெயரில் ஒரு சில அறுவைகளும் எழுதியிருக்கிறேன், கவிதைகளோடுகூட! அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே எனது கஸின்ஸின் பெயர்கள்! நல்லவேளை, அப்போ அவங்கள்ளாம் இதை படிச்சிருந்தா என்னை பின்னியெடுத்திருப்பாங்க!! ஓக்கே..ஒன்னொன்னா ரிலீஸ் பண்றேன்..இது எழுதினப்போ நான் 11வது படிச்சிக்கிட்டிருந்தேன்னு என்னோட நோட்டு சொல்லுது!!

Photobucket

திருந்திய மனம்

கயல்விழி படித்துக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணியாகிக் இருந்தது. இன்று அவளுக்குப் பரிட்சை! பத்தாம் வகுப்புத் தேர்வு!பிளாஸ்க்கிலிருந்து ஊற்றப்பட்ட காபி ஆறிப் போய்விட்டிருந்தது. திடீரென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

அவள் மனம் திக் என்றது.இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்றெண்ணியவாறு நாற்காலியிலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்தபோது அங்கு அமுதமொழி நின்றிருந்தாள்.

கயல்விழி அவளை வரவேற்று என்னவென்று விசாரித்தாள். அமுதமொழி தன் கையிலிருந்த தாளைக் காட்டி ‘ “கயல்விழி, இதோ சயன்ஸ் கொசின் பேப்பர். அவுட்டாயிடுச்சி, அவா, நாம் ரெண்டு பேரும் படிக்கலாம். ஒரு கொசின்பேப்பர் 50 ரூபாய்னு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கற கடையில வித்தாங்க. அதான் இப்ப வாங்கிட்டு நேரா இங்க வந்தேன்”.

கயல்விழி ஒன்றும் பேசாமல் மௌனித்தாள். பின்னர் அமுதாவிடமிருந்தது வினாத்தாளை வாங்கிக் கிழித்துப் போட்டாள். சொன்னாள்,” அமுதா, நாம் எப்பவும் நேரான வழியிலதன் போணும். குறுக்கு வழியில போகக் கூடாது. நாம உழைச்சதுக்கேற்ற பலன் கிடைக்கும். நநாம இப்ப இதைப் படிச்சு எழுதினா நம்ம உழைப்புக்கே, ஏன் நம்ம படிப்புக்கே மதிப்பில்லாம போய்டும். நேர்மையா படிச்ச பசங்கள்ளாம் எப்படி வேதனைப்படுவாங்க. நாம படிச்சதுக்கேற்ப மார்க் கிடைக்கும். வா, நாம ரெண்டு பேருமே படிக்கலாம்”, என்று இருவரும் படிக்கத் தொடங்கினர்.

(கயல்விழி, அமுதமொழி இருவரும் என் பெரிய மாமா, சின்ன மாமா பெண்கள். இருவருமே இப்போதைக்கு இதைப் படிக்க நோ சான்ஸ்! இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!!)

Add a comment திசெம்பர் 5, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category