Posts filed under: ‘இந்தி‘
Mixed Bag!

‘கா’ உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை – சிறியவர் உலகம்!
‘கா’ இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை – பெரியவர் உலகம்!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின்!! இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory!!

Advertisements

Add a comment செப்ரெம்பர் 15, 2009

Euphoria – Dhoom pichak தூம்

Add a comment மார்ச் 16, 2009

பப்பு டாக் & ali haider song!!

பப்பு கத்திரிக்கோல் எங்கே?

தெரியலயே..

நேத்து கட் பண்ணிட்டு இங்கேதானே வச்சேன்? பார்த்தியா?

இல்ல நான் பாக்கல!

சிறிதுநேரத்தில் ஆயாவின் அலமாரியிலிருந்துக் கிடைக்கப் பெற்றது!!

இருக்கு பப்பு, ஆயாகிட்டே இருந்துச்சு!!

நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்…சாரி ஆச்சி!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!!

பப்பு சீக்கிரம் சாக்ஸ் போடு!

……

போட்டுட்டியா?!

……

ஆயா : இதோ, நான் வந்துப் போட்டுக்கறேன், என்னைக் கூப்டுக்கிட்டு போ!

பப்பு: ஆச்சி யாரோட அம்மா?

(சிலசமயங்களில், ஆச்சி உங்க அம்மாவா? என்றும் மாறும்! ஆச்சி பப்புவின் அம்மா, ஆயாவின் அம்மா இல்லை, அதனால் ஆச்சி சொல்வதெல்லாம் பப்புவிடமே..(அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!)..மேலும் ஆச்சியோடு செல்லும் உரிமை பப்புவிற்கு மட்டுமே என்பது உள்ளர்த்தம்!)

90களில் உங்கள் பதின்மங்களைக் தொலைத்திருப்பீர்களேயானால், இந்தப் இந்திப் பாப்பாடலை கண்டிப்பாக ரசித்திருப்பீர்கள்! அலி ஹெய்தரின் மற்றப் பாடல்கள் பிறிதொரு பதிவில்! அதுவரை, இப்பாடலைக் கேளுங்கள்!!

Add a comment பிப்ரவரி 6, 2009

O Sanam…teri yadoon ki kasam – லக்கி அலி!!

லக்கி அலி!1996-ல் வெளிவந்த சுனோ (Sunoh) தான் இவரது முதல் ஆல்பம். இவரது ஆல்பங்களில் தெரிந்த தனித்துவமும், பாடும் விதத்தில் இருந்த ஸ்டைலும்..இவரது அடையாளம். அடுத்து முக்கியமாக சொல்லவேண்டியது அவரது பாடல்கள் காட்சியமைக்கப் படும் விதம்! ஒருவித wanderness, தனிமை..எதையோ தேடியலையும் நாடோடித்தனம்…இந்தமாதிரி தான் தீம்! சுனோ-வில் என் மனம் கவர்ந்த.. எனக்கு மட்டுமல்ல..அப்போது V-channel-ல் எப்போதும் போடும் பாடல், O sanam!
பிரமிடுகளிடையே தேடியலையும் காட்சிகள்..ஒரு பெரிய வளையத்துடனான சாவி..ஹஸ்க்கி வாய்ஸில் பாடல்..இதுதான் ஓ சனம்!எனது பெரும்பான்மையான் சாயங்கால/பின்னிரவுப் பொழுதுகளை நிரப்பியது இப்பாடலே! சொல்வதைவிட, கேட்டலே நன்று!!

Get this widget | Track details | eSnips Social DNA

ஓ சனம் பாடலில் வரும் புர்க்கா அணிந்தப் பெண் இவரது மனைவி! லக்கி அலியின் தந்தை ஹிந்தி படவுலகில் முக்கியமானவ்ர். விக்கிபீடியாவில் தேடினால் மேற்செய்திகள் கிடைக்கலாம்! ஹிந்திப்படங்களிலும் பின்னனி பாடியிருக்கிறார். கஹோ நா பியார் ஹே – ஹ்ரித்திக்-கின் படமென்று நினைக்கிறேன்!

எனது டாப் 10 பாப் பாடல் பட்டியலில் ஓ சனம் என்றும் இடம் பெற்றிருக்கும்!! More on Lucky Ali later!

Add a comment ஜனவரி 23, 2009

ஒரு சோனி வாக்மேனும் சில சென்டிமென்ட்-களும்

ஸ்கூல் படிக்கும்போது எங்களிடம் ஒரு வாக்மேன் இருந்தது. எங்களிடம் என்றால் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து!வீடீயோகான் என்று நினைக்கிறேன். அதை எந்தளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்தளவுக்கு தேய்த்தாயிற்று. காலேஜ்-க்கு ஹாஸ்டலுக்கு போகும்போது கண்டிப்பாக அதை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், நான் வாங்கியிருந்த கேஸ்ட்-டுகளை எடுத்து பெட்டியில் போட்டுக் கொண்டேன். (என்ன ஒரு நல்லெண்ணம் பாருங்க, என் தம்பி கேட்டுடக் கூடாதாம், என்னோட கேஸ்ட்-களை!)

புது வாக்மேன் வேண்டுமெனக் கேட்டதற்கு, படிக்கத்தானேப் போறே, அப்புறம் வாங்கிக்கலாம் என்று வீட்டிலிருந்து பதில். நானும் ஓக்கே என்று ஒரு சோக முகத்தை காட்டிவிட்டு, பேக் செய்த காசெட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு சென்றேன், ஒரே ஒரு கேசட்டைத் தவிர.அது Khamoshi. ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் மதியம் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை வார்டன் வந்து பார்த்துட்டு போ என்று சொன்னபோது வழக்கம் போல் கடிதம் என்று நினைத்துப் போனவளை வரவேற்றது நீட்டாக துணியின் ஓரங்கள் தைக்கப்பட்ட ஒரு பார்சல். வாவ்! பெரிம்மாவிடமிருந்து! பிரித்த போது வந்து விழுந்தது, பேரிச்சம் பழ பேக்கட்டுகளும், காய்ந்த திராட்சையும், ஒரு சோனி வாக்மேனும், என் பேவரிட் கேசட்டுகளும் மற்றும் ஒரு லெட்டரும்.

dedicating this song to my perimma,The wonderful personality I have by myside!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

பி.கு. அந்த வாக்மேன் இப்போது உபயோகிப்பாரற்று, பெட்டியிலிருந்தது ஹெட்போன்கள் பழுதடைந்து!. அதைப் பார்த்தபோது நினைவுக்கு வந்த கொசுவத்தி!

Add a comment திசெம்பர் 8, 2008

அனைடா(Anaida)- Nazuk Nazuk லட்கி


அனைடா (Anaida) – இன்னொரு பாப் இளவரசி!
இவரும் 90-சில் அறிமுகமாகி ஒரு ரவுண்ட் வந்தவர். ஐந்து அல்லது ஆறு ஆல்பங்களும், படங்களில் பின்னணியும் பாடியவர். என்ன சிறப்பென்றால், தனியாக ஆல்பங்கள் செய்தார். அலிஷாவுக்கு ஒரு பித்து(Biddu) கிடைத்தது போல!! அவ்வளவாக அவரது இசை என்னை இம்பெரஸ் செய்யா விட்டாலும், ஒரு சில பாட்டுகளை விட்டுவிட முடியாது! ஷூக்ரி (Shukri) எனும் அரேபிய பாடகருடன் ஒரு அராபிக் ஆல்பத்தை வெளியிட்டார்.(didi பாடிய காலித்-ஐ மறக்க முடியுமா!)

பாபா சேகலுடன், லயன் கிங் படத்துக்கு ஒரு பாடலை பாடினார். அந்த இரண்டை தவிர ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு பாடல் மட்டுமே என்னை ஈர்த்தது. மிகவும் மைல்டான லுக்..gentle and innocent பார்ப்பதற்கு! Love Today Hai Nahi Aasaa – முதல் பாடல்.
அடுத்த ஆல்பத்தில், Nazuk Nazuk main ladki.

oova oova பாடலும் நன்றாக இருக்கும்.

ஷூக்ரியுடன் o malu malu,

அரபியின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது! How sweet the language is!!

Funky பாபாவுடன் Hakuna Matata,

Hakuna Matata.mp3

Add a comment நவம்பர் 5, 2008

SRK

முன்பதின்மங்களில் எனை மிகவும் ஈர்த்த பாடல்!!
what a die-hard fan of SRK I was!!

நானும் என் தம்பியும் உபயோகித்த பிரம்பு நாற்காலியை பப்புவிற்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என் பெரிம்மா, அதோடு நினைவுகளையும்!!
அதான், கொஞ்சம் நாஸ்டால்ஜிக்!!

Add a comment ஓகஸ்ட் 16, 2008

ஹல்வா வாலா ஆகையா…

நான் முதன்முதலில் பார்த்த இந்திப்படம் என நினைக்கிறேன்.
இந்த பாடல் மட்டுமே மனதில் நின்றது..மிகவும் பிடித்த பாட்டு!
படத்தை ஃபாலோ பண்ணக்கூட தெரியாத வயது!!
கேட்க ஆசை வந்தது திடீரென!!

Halwa Wala Aa Gaya –

Add a comment ஜூலை 14, 2008

"அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும்.
த்ரிஷாவையும்!! “அக்கம்-பக்கம் அக்கா” என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.

akkam_pakkkam-1.mp3 –

பப்பு குரலில் “அக்கம் பக்கம்” !!

ஃப்ளாஷ்பாக்

சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில் பார்க்கும்போது…ம்ம்..
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!! (பிடித்த நடிகையை மார்க்கெட் போனபிறகு சீரியலில் பார்ப்பது போல) Dar படத்தில் இந்தப் பாடலில் ஜூஹியை எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம்.

எதிர்காலத்தில் த்ரிஷாவும் குர்-குரேயை விளம்பரப்படுத்தலாம், யார் கண்டது!!

Add a comment ஜூலை 1, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category