Posts filed under: ‘அலுவலகம்‘
வேலைக்கு நடுவே….

ட்ரெயினிங்கில் ஒரு பகுதி கவனித்தல், அதாவது மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பது பற்றி!! பாதி பேர் வெளியிலும், மீதிபேர் உள்ளேயும் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். வெளியில் இருந்து வரும் ஒருவர், உள்ளே இருப்பவரின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து அவரிடம் 3 பேச வேண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு சொல்லப்பட்டது, நீங்கள் அவர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும், ஆனால் உங்கள் நடவடிக்கைகள் அப்படி இருக்கக்கூடாது, அதாவது பேனாவை ஆட்டிக்கொண்டோ, வேறு எங்காவது பார்த்துகொண்டோ அல்லது
சம்பந்தமில்லாத வேறு கேள்விகள் கேட்டுக்கொண்டோ இருக்கலாம்.

ஒரு ஜோடி A & B!!

நிகழ்ச்சி நடத்துபவர், A(பேசுபவர்) & B( கேட்பவர் ) யிடம் என்ன நடந்தது என்ன கேட்டபொழுது, B சொன்னார் “A stopped talking after sometime!”

நடத்துனர் Bயிடம். “what made you to stop?”

A வெகு சீரியசாக, “when I was talking he was doing something on his mobile.
So, I thought he is recording my talk”!!!

!!!!!!!!!!

(And they were all asked to talk what they are passionate about!)

Advertisements

Add a comment ஓகஸ்ட் 28, 2008

வேலைக்கு நடுவே….

இரண்டு நாட்களாக ஒரு ட்ரெயினிங்!!
சரியான நேரத்தில் வராதவர்கள் ஏதாவது பாட்டு பாட வேண்டும் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாயிருந்தது!A வந்தது லேட். சிறிது யோசித்த A, ”நான் பாட்டு பாடறேன், சூரியன் படத்துல பிரபுதேவா பாடும் பாட்டு!
நீங்க எல்லாரும் ஐலசான்னு கோரஸ் குடுக்கணூம்” என்று சொல்லிவிட்டு,
ஆரம்ப வரிகளை பாடத்துவங்கினார்

அப்தலா ..!!

ஐலசா!

…..

ஐலசா!

ஏ மரமும் பொளக்கும்!!

ஐலசா!

தமிழ் தெரியாத H, மெதுவாக பக்கத்திலிருப்பவரிடம்

மச்சா, சான்ஸ்கிரிட் words??

சிரிப்பில் அதிர்ந்தது ரூம்!!

Add a comment ஓகஸ்ட் 28, 2008

மகளிர் மட்டும்!!

எப்போதும் ஆண்கள் டீ சர்ட்தான் கிடைக்கும், ரிலீஸ் முடிஞ்சாலும் சரி, இல்ல ஆனுவல் ஃபங்ஷன்னாலும் சரி!!அதுவும் நம்ம சைசுக்கு இருக்காது. உள்ள நாலு பேர் புகுந்துக்கலாம் போல இருக்கும்.என்ன பண்றது..அத வாங்கி ரங்கமணிக்கோ, தம்பிக்கோ குடுக்க வேண்டியதுதான்!

போன தடவை தாங்க முடியாம கம்பெளெய்ன் பண்ணினதோட பலன் இப்போ WestSide-லேர்ந்து சல்வார் டாப்ஸ்.இதுவும் நாங்களே போய் செலக்ட் செஞ்சதுதான். மூணு ஷேட்ஸ்…பிஞ்க், பச்சை மற்றும் வெந்தயக் கலர். அதுல,ஸ்லீவ்-ல கம்பெனி லோகோ போட்டிருக்கு. (ஒரு தடவை உடுத்திக்கிட்டு, மெகா ஸ்லீவ்ஸ் ஆக்கிடலாமான்னு ஒரு யோசனை ;-)!!)

ஒரே மாதிரி எங்க கிடைக்கும்னு பார்த்தா, இந்த மூணுதான் தேறுச்சு.
1. Fabindia
2. Westside
3. Anokhi

Fabindia-ல ஒரே மாதிரி உடனே கிடைக்காது. ஆனா, டைம் கொடுத்தா (மினிமம் 2 வாரம்), நம்ம measurementக்கேத்தமாதிரி கிடைக்கும். இது வுட்ஸ் ரோடு கிளைல விசாரித்தபோது தெரிந்தது. அடுத்தவருடம் கண்டிப்பா இங்கதான். (கம்பெனி இருந்தா!!)
ம்ம்..பட்டு டாப்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது!! எல்லாமே பொதுவாக பார்ட்டி வேர் மாதிரி. தனியா ஒரு படையெடுப்பு நடத்தனும்!!

Westside-ல (Spencer Plaza) புது ஸ்டாக் வந்தாதான் தெரியும்னு சொன்னாங்க. கண்டிப்பா 20க்கு மேல வேறவேற சைஸ்களிலும் கிடைக்கும்னும் சொன்னாங்க. ஆனா ரெண்டு நாளாகும். ஓக்கே..ரெண்டுநாள்-னா பொறுத்துக்கலாம்.

Anokhi – இது ஆழ்வார்பேட்டைல இருக்கும் பொட்டிக். ஆனா, எல்லாம் பிரிண்டட் மாடல். plain fabric-ல இல்ல.

ஒதுக்கப்பட்ட நிதி – 600 ரூபாய் ஒருவருக்கு.
ஆனால், ரூ 499க்கு WestSide-லே கிடைத்துவிட்டது.

Add a comment ஜூன் 5, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

நவம்பர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Posts by Month

Posts by Category