Posts filed under: ‘அறிவுரை‘
குழந்தையின் வயிற்று வலிஅழுகையை நிறுத்த வழி?
எங்கள் அனன்யா ஒன்றரை மாத குழந்தை. அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு அழுகிறாள். வயிற்றில் கேஸ் தொந்தரவினாலும் கூட, டாய்லெட் போகும் போதும் கூட கஷ்டப்படுகிறாள் என தோன்றுகிறது. பால் கொடுத்துவிட்டு முடிந்த வரை ஏப்பம் விட முயற்சி செய்வேன், சில சமயம் வரும் பல சமயம் ஏப்பம் வருவதில்லை. மூச்சா போகும் போது கூட சில சமயம் கஷ்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன், தூங்கும் போது அழுகையுடன் எழுந்து, கொஞ்ச நேரம் அழுது விட்டு மூச்சா போகிறாள்.
எனக்கு தெரிந்த வைத்தியமாக வயிற்றில் விளக்கெண்ணய் வைத்து தேய்த்து விடுகிறேன், ஓமத்தை இடித்த சாறை தாய்பாலில் கலந்து கொடுக்கின்றேன், தினமும் அல்ல, வாரத்தில் இரண்டு நாட்கள், அல்லது அழும் நாட்களில்… கிரைப் வாட்டர் ஏதும் கொடுக்கவில்லை இது வரைக்கும். காலிக் பெயின் மருந்து ஏதேனும் கொடுத்தால் பலன் இருக்குமா?
சுலபமாக ஜீரணம் ஆவதற்க்கும், வயிற்றில் இருக்கும் கேஸ்ஸை வெளியேற்றவும் வேறு ஏதேனும் வைத்தியம் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்களேன்.
ஜெயா.
9 பின்னூட்டங்கள் நவம்பர் 17, 2009
