Posts filed under: ‘அறிவிப்பு‘




நமது வலைப்பூ – சில யோசனைகள்!

நமது குழுப்பதிவை மேலும் சுவாரசியமாக்க ஒருசில எளிய யோசனைகள்!

1. இடுகைகளில் லேபிள்கள் relevant-ஆக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே இருக்கும் குறிச்சொற்களையே திரும்ப பயன்படுத்த முயல்வோம். எ.கா – வயது வரம்பு, புத்தகங்கள்,பாடல்கள், கதைகள் என்று இயன்ற வரை பொதுப்படையானதாக, தேடுவதற்கு எளிதானவையாக இருக்கட்டும்.

2. மேலும், இடுகைகளின் குறிச்சொற்களோடு, இடுபவரின் பெயரையும் ஒரு குறிசொல்லாக பயன்படுத்துவோம். (ஆகாயநதி மற்றும் அமித்து அம்மா-வின் இடுகைகள் அவ்வாறே இருக்கக் காணலாம்.) இது சடுதியில் இனம்காண உதவியாயிருக்கும்.

3. நமது இடுகைகள் அம்மாக்கள் பற்றியதும், குழந்தைகள் பற்றியதாய் மட்டும் இருக்கட்டும்.
அது அனுபவங்களாகவோ, விவாதமாகவோ இருக்கலாம். பிற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியாயிருப்பின், சுட்டியை இணைத்து வைப்போம்.

4. தொடர்ந்து எழுதுவதை மனதிற் கொள்வோம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு இடுகையாவது இடவேண்டுமென மனதிற் கொள்வோம். நமக்கு நாமே உதவி செய்துக் கொள்கிறோம், இந்த வலைப்பதிவின் மூலம்…ஒருவரிடமிருந்து மற்றொருவர் என! நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இருக்கிறோம், நாமனைவரும் நண்பர்களே என்று உணர்வோம். தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்போம்!

5. வாழ்த்துகள், அறிவிப்பு பற்றிய இடுகைகளாக இருப்பின், ஏற்கெனவே அதைப் பற்றிய இடுகை இருக்கிறதாவென அறிந்தபின் இடலாம். இதன்மூலம், பல இடுகைகள் ஒரே அறிவிப்பைக் குறித்து இடுவதைத் தவிர்க்கலாம்.

6. நமது குழுப்பதிவின் இடுகைகளைப் பற்றிய முன்னோட்டங்கள்/முன்னுரை அல்லது சுட்டிகளை நமது சொந்த வலைப்பூவிலும் இடலாம். அதனால் இன்னும் பலரை சென்றடைய வாய்ப்புகள் பெருகும்.

மேற்சொன்னவற்றை முன்பாகவே வரையறுத்திருக்கலாமெனினும், குழப்பங்களை தவிர்க்க இது தேவையானதாகப் படுகிறது. இன்னும் சொல்வதற்கு யோசனைகள் இருப்பின் தெரிவிக்கவும். குழுப்பதிவை மேன்மையானதாக்குவோம்! ஒத்துழைப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! ஹூர்ரே..!!

Advertisements

10 பின்னூட்டங்கள் ஏப்ரல் 24, 2009

சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

லிட்டில் தியேட்டர், கிறிஸ்மஸ் மாதத்தை முன்னிட்டு “Robinson Crusoe — Spaced Out” என்ற கருத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை நிகழ்த்தவுள்ளது.

இடம் : மியூஸியம் தியேட்டர், பாந்தியன் சாலை, எழும்பூர்.
தேதி : 12 – 17 வரை, டிசம்பர் 08

Photobucket

அகில உலக கதைசொல்லி ஜீவா-வின் நிகழ்ச்சி ஜூம் கிட்ஸ், கேகே நகரில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் வாரயிறுதி கொண்டாட்டமாக அமைய வாழ்த்துக்கள்!

2 பின்னூட்டங்கள் திசெம்பர் 6, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category