Posts filed under: ‘அமிர்தவர்ஷினி அம்மா‘
Good Habits for your child-Start Early

சஞ்சனாவிற்காக (அமித்துவின் பெரியப்பா மகள்) நல்ல பழக்கங்கள் சார்ட்டினை நெட்டில் தேடும் போது, கண்ணில் பட்டது. உங்களின் பார்வைக்காக இங்கே.

Dr. Radha Rajagopalan
HOD-Pediatrics, Apollo Hospitals, Chennai.

1. Well, we all want to see our children growing up with good habits. That’s why it is very important to start early. The younger the child, the more unquestioning their minds will be and thus easier to inculcate good habits in them. Some of the really important habits that should be taught early are:

2. Brush before bedtime- We all teach our kids to brush their teeth before eating or drinking anything in the morning. In fact it becomes a part of our lives. But how many of us insist that our children brush before going to bed? This is a very essential habit that is extremely difficult to teach later on. In fact it is very difficult to learn later on too. If you don’t brush before going to bed, this is a good time to start and pass it on to your child as well. Its important.

3. Oil Bath-In olden days, it was said that boys should have an oil bath on Wednesdays and Saturdays while girls should have it on Tuesdays and Fridays. Well, the days could have been kept that way for convenience but the point, yes, our grandmothers were right. Oil bath twice a week is good for children and the young age is great time to start.

4. Wash hands before eating- As kids, they tend to indulge into food as soon as they see it. Thus if this habit is not insisted every single time, they soon tend to forget it. Hands are the major carriers of germs and eating with dirty hands can easily put your child through illness. The simple answer is to make them wash hands before putting anything in their mouths. So even if it is for a snack, take your kid to wash hands before eating. And soon it will become a habit for them. Of course when they are old enough to understand, you should stress the importance of hygiene and infection.

5. Cut nails once a week- Even today many of us do not cut our nails. We simply bite them off. And I don’t think we wash our nails before biting them so the risk of infection is high. And please do not underestimate this risk. So as kids cut their nails once a week so that there is no opportunity for them to bite them. And when they are older, you can teach them to cut their nails. But maintain the trimming to once a week as that how long it takes for the nail to grow big enough to bite it!

6. Exercises- Teach the kids the importance of exercise at an early age. Take them for a walk and teach them simple exercises. If you have a pet dog, you can train the kids to take them for a walk. Of course if you need to exercise yourself, take this hint. You should start too and that way you can have a healthy life to devote to your kids.

7. Sleep- Well, this is a very important thing to teach your kids. Make sure they are in bed by 830 or 9 PM and wake them up by 6 in the morning. Those of you who believe your kids do not sleep early, wake them up at 6 AM whatever time they sleep. You will notice that in a few days, they will get to bed early too as they will be tired out. Its your duty to teach them the ‘Early to bed, early to rise’ principle.

8. Variety in food- Just because your kid likes one type of vegetable, do not cook the same for him everyday. Introduce a variety of foods for your child and get them acquainted to different food types. This way you child will be able to adapt to different foods.

Its very important to teach them to respect elders. Especially in nuclear families where the scope to interact with elders is very low, it is important to emphasize the aspect of respect.

So these are some of the important habits to inculcate into your child that will make them less prone to infection, give them healthier teeth, keep them healthy and save you a whole lot of trouble and money. More importantly, they will make your kids better people when they grow up. Good luck!

Thanks : http://www.babycareindia.com/good+habits

Advertisements

7 பின்னூட்டங்கள் ஒக்ரோபர் 7, 2009

ப்ளாஸ்டிக் – ஒரு சிறிய பகிர்வு

1. ஒரு சின்ன ஆனா முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்குவோமா???

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.

2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?

நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 – 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.

3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 – 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).

4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
1 – 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.

தோழிகளே பிளாஸ்டிக்கில் கவனம் தேவை !!!

மூலம்: அறுசுவை.காம்

16 பின்னூட்டங்கள் செப்ரெம்பர் 15, 2009

படித்ததில் பிடித்தது

நான் அடிக்கடி எழுத்தாளர். திரு. எஸ். ராமகிருஷ்ணணின் வலைப்பக்கத்தை மேய்வதுண்டு.
அப்படி இன்று பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் வலைப்பக்கத்தில் இருந்த இந்த கற்கத்தவறிய பாடம்” என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதற்கான சுட்டி இங்கே: கற்கத்தவறிய பாடம்

பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

4 பின்னூட்டங்கள் ஜூலை 15, 2009

மீ த பர்ஸ்ட்

இந்த “முதல்” என்ற வார்த்தை பெரியவர்களிடம் எப்படியொரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ அதை விட அதிகமாய் சிறார்களிடம் உண்டு செய்கிறது.

உதாரணத்துக்கு நீ தான் பர்ஸ்ட் அப்படின்னு சொல்லிப்பாருங்க, அடுத்து அவஙக் எவ்வளோ குதிச்சு குதிச்சு விளையாடுவாங்க
சில சமயம் சொன்னத கேட்பாங்க, ஒழுங்கா சாப்பிடக் கூட செய்வாங்க. சாக்லேட் என்ற மகுடிக்கு மயங்காத பாம்புகள் கூட இந்த நீ தான் பர்ஸ்ட் என்ற வார்த்தைக்கு மயங்கும்.

இந்த பர்ஸ்ட் என்பதின் எல்லை ஒரு வரையறை வரை இருத்தல் நலம். இல்லையெனில் நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நான்கு குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடும் போதோ இல்லை நம் வீட்டினில் அனைவரும் சாப்பிடும் போதோ, நம் குழந்தை சாப்பிட வேண்டும், சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதை
கருத்தில் கொண்டு பெரியவர்கள் குழந்தையின் பெயர் சொல்லி அவன் தான் பர்ஸ்ட் என்பார்கள். உதாரணத்திற்கு ராம் தான்ப்பா பர்ஸ்ட்டு, நாங்கள்லாம் செகண்டு தாம்ப்பா என்றாலே போதுமே அது அவசர அவசரமாக உணவை விழுங்கும்.

அதே போல படிப்பிலும், எங்க பையன் தான் எப்பவும் பர்ஸ்ட்டு வருவான் இல்லப்பா, நல்லா படிப்பானே, ஏ. பி. சி. டி யெல்லாம் நல்லா எழுதுவானே, ரைம்ஸ் எல்லாம் சமத்தா சொல்லுவானே என்று நீட்டி முழக்கி எல்லார் முன்னிலையிலும் அந்தக் குழந்தையையே முதலாக்குவார்கள். ஊக்கப்படுத்துகிறார்களாம்.

இது போன்ற சொற்களின் விளைவுகளை குழந்தைகளின் முன்னால் கொண்டு செல்லும் போது அந்தக் குழந்தைகள் என்னவாக இருக்கும் என்பதை கண்கூடாக கண்டேன்.

என் நாத்தனாருக்கு ஒரே மகன். பெயர் ஹரி, படிப்பில், விளையாட்டில் எல்லாம் சுட்டி. 6 வருடங்கள் கழித்து பிறந்தவன் ஆதலால் அப்பா, அம்மாவிற்கு செல்லம். அவன் அம்மா எல்லாவற்றையுமே நன்றாகத் தான் சொல்லித்தந்தார்கள். கதை சொல்வது, அப்புறம் சின்ன சின்ன ஆக்டிவிட்டிஸ் என, ஆனால் எங்கே கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை, இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தை அவனுக்கு மந்திரமாகிவிட்டது. ஆரம்பத்தில் அது நன்றாகப் போக இப்போது அவனுக்கு வயது 5, அதுவே நெகட்டிவ் ஆகப்போய்க் கொண்டிருக்கிறது.

1. வீட்டில் அவனும், அவன் அப்பாவும் சாப்பிடும் போது, அவன் அப்பா முதலில் சாப்பிட்டு எழுந்துவிட்டால், இவன் கோபித்துக்கொண்டு, முகத்தை உர் ரென்றும் வைத்துக்கொண்டு அதற்கப்புறம் சாப்பிட மாட்டானாம்.இப்போதெல்லாம் அவன் அப்பா சாப்பிட்டு முடித்தபின் ஒரு கவளத்தை இவன் சாப்பிட்டு எழும் வரை தன் தட்டில் வைத்துக்கொண்டிருக்கிறாராம்.

2. அவன் ஸ்கூலில் (எய்ம்ஸ், செய்யாறு) எல்.கே.ஜிக்கே ஸ்கூல் ஆண்டு விழாவில் முதல் வந்த குழந்தைக்கு மெடலெல்லாம் போட்டு கான்வொகேஷன் நடத்தி இருக்கிறார்கள். இவன் நன்றாகப் படிக்கும் பையன் தான். என்ன காரணத்தினாலோ மூன்றாவதோ, நான்காவதோ வந்திருக்கிறான். போச்சு, அங்கேயே அழுகை ஆரம்பிக்க வீட்டுக்கு வரும் வரைக்கும் அடங்கவில்லையாம், கூடவே நான் இப்பவே அந்த மெடலை போட்டுக்கனும் என்று அடம் வேறு. சரி முதல் வந்த குழந்தை இவன் ப்ரெண்ட் தானே என்று அந்தக் குழந்தையின் அப்பா, ம்மா, கொஞ்சம் அந்த மெடலை ஹரி போட்டுக்கட்டும் குடும்மா என்றதற்கு அது தராமல் போகவே, இன்னும் ஆர்ப்பாட்டம் கூடியிருக்கிறது.

3. லீவிற்காக சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தபோதும் இதே கதைதான். அமித்துவிற்கு எதையாவது விட்டுத்தந்தாலும், அவள் எதையாவது முதலில் எடுத்துவிட்டாளோ, செய்து விட்டாளோ அவ்ளோதான் எல்லாம் போயே போச். சார் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்து விடுவார். மீறி ஏதாவது கேட்டால் அழுகை வெடிக்கும், நான் தான் மொதல்ல எடுப்பேன்னு சொன்னேன்ல , பின்ன ஏன் அவ எடுத்தா என்பது மாதிரியான டயலாக்ஸ்.

4. அவனின் இந்தப் போக்கை குறித்து என்னை மிகவும் பாதித்த ஒரு விஷ்யம்: ஒரு பேப்பரில் நிறைய யானைகள் கும்பலாகவும், ஒன்றன் பின் ஒன்றாகவும் போய்க்கொண்டு இருப்பது போன்ற படம் இருந்தது. நான் அமித்துவிடம் த்தோ, பாரு யானை, குட்டியானை, பெரிய யானை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவளும் பார்த்துக்கொண்டிருந்தாள். அமித்துவும் த்தோ த்தோ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தக் குட்டியானை தான் வர்ஷினியாம் என்றும் சொன்னேன்.அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவன், அதை விடுத்து, பேப்பரிடம் வந்து, மாமி எது வர்ஷினின்னு சொன்னீங்க என்றான், த்தோ இதுதாண்டா குட்டியா இருக்குப் பாரு என்றேன் நடுவில் இருந்த யானையை காண்பித்து, உடனே இவன் இது வர்ஷினி, அதற்கு முன்னர் இருந்த யானை சஞ்சு (அவனை விடப் பெரிய அவனின் மாமா மகள்), அதற்கும் முன்னர் முதலில் இருந்த யானை தான் எனவும் கூறினான். அதற்கு நானோ, சஞ்சு உன்னோட பெரியவடா, அப்ப அது அவள் தானே என்றேன். இல்ல இல்ல அதான் நானு, எனக்குப் பின்னாடி தான் சஞ்சு என்றான். எனக்கு நான் சொன்னது தவறா, இல்லை அவனுக்கு நான் எப்படி சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் புரியவில்லை.

இதை படிக்கும் அம்மாக்கள், இவனுக்கு இருக்கும் இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தையின் தாக்கத்தை எப்படி சொல்லி புரிய வைப்பது என்றும் சொல்லிவிடுங்கள்.

11 பின்னூட்டங்கள் மே 15, 2009

அக்கா என்றாலும் அம்மா

எனக்கும் என் அக்காவிற்கும் சரியாக 16 1/2 வருட இடைவெளி. என் அக்காவின் திருமணத்தின் போது நான் ஒரு வயது முடியாத குழந்தை. நான் பிறந்த தருணத்தில் அம்மாவுக்கு ஜன்னி கண்டுவிட 3 மாதங்கள் அம்மா ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட வேண்டிய நிலை. எனக்கு பால் பவுடர் கரைத்து பால் புகட்ட ஆரம்பித்ததிலிருந்து, என் கல்யாணத்திற்கு பாத பூஜை செய்து கொண்டது வரை என் அக்காதான். இதை எழுதும் போதே என் கண்கள் பனிக்கிறது.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அம்மாவை பார்க்க, எனக்கு அதே ஆஸ்பத்திரியில் ஊசி போட என எல்லாவற்றிற்கும் என்னை அழைத்து போகுமாம் அக்கா. பாவாடை, சட்டை போட்ட ஒரு சின்னப்பொண்ணு, இவ்ளோ சின்னக்குழந்தைய தூக்கிட்டு போதே அப்படின்னு நெறைய பேர் ஆச்சரியமா பார்ப்பாங்களாம் அக்கா. அம்மா வயிற்றில் நான் இருக்கும் போதே தங்கச்சி தான் வேணும்னு சாமி கிட்ட வேண்டிக்குமாம். ஆனா அம்மா ஆண் குழந்தைதான் வேணுமுன்னு லஸ் நவசக்தி விநாயகர் கோவிலுக்கு நடந்து போய் வேண்டிகிட்டு வருவாங்களாம். இன்னும் என் அம்மாவின் இந்த வேண்டுதல் தொடருகிறது, அது எங்களனைவரின் நலன் குறித்தான வேண்டுதல்.

அக்காவுடனான என் நிறைய சின்னப்பிள்ளை நிகழ்வுகள் நிழல் போல ஞாபகத்தில். என் அன்பு மொத்தத்தில் முக்கால் பாகம் என் அக்காவிற்குதான். அக்காவை யாரும் ஒரு சொல் சொல்லக்கூடாது. மாமா அக்காவை ஒரு சொல் கடிந்து பேசினாலும், அவரோடு சரிக்கு சரி மல்லுக்கு நிற்பேன். வளர்ந்த பின் அக்காவை ஒரு வேலை செய்ய விடமாட்டேன். அம்மா எதற்காகவேனும் அக்காவிடம் சண்டை போட்டால் அம்மாவோடு பேசமாட்டேன். அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள் (பெண் ஒன்று, ஆண் ஒன்று) இருந்தாலும், என்னை தன் முதல் பெண் போலதான் வளர்த்தது. எந்தப் பொழுதிலும் என்னை விட்டுக்கொடுத்தது கிடையாது. என்னை மாமா ஏதேனும் சொல்லிவிட்டால், அவரோடு பேசாது. இப்படியாய் நிறைய எனக்கான அக்காவின் தருணங்கள்.

தருணங்களின் தருணமாக. அமித்து பிறந்த மறுநாள் இரவு ஆஸ்பத்திரியில், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எழ முடியவில்லை, உட்கார, நிமிர என்று எதுவும் முடியவில்லை, ஜூரம் வேறு.
ஆப்பரேஷனின் முன்னர் எனிமா கொடுக்காததால், குழந்தை பின்னர் வயிறு உப்புசமாகவே இருக்க, வயிறு க்ளின் ஆக வேண்டுமென்று ஏதோ மாத்திரை கொடுக்க, அது பேதியில் முடிந்தது. ஹைய்யோ வயிறு புரட்டி புரட்டி பேதியாகிக்கொண்டிருந்தது எனக்கு. எழவே முடியவில்லை, இதில் எழுந்து எங்கு பாத்ரூம் வரை போவது. அப்போது என் அக்கா, எத்தனை முறை எனக்கு பெட் பேன் வைத்து எடுத்திருக்கும் என்று சொல்ல முடியாது. இன்னொரு பக்கம் குழந்தை எழும் போதெல்லாம் அதனை சமாதானப்படுத்தும் வேலை வேறு. பாவம் அக்கா. அந்த சூழலிலும் எனக்கு என் அக்காவை கஷ்டப்படுத்துகிறோமே என்றுதான் கண்ணீர் வருகிறது.

அக்கா, பிறப்பில் நீ எனக்கு அக்காவாக இருந்தாலும், வளர்ப்பில் நீ தான் எனக்கு அம்மா. அமித்துவிடம் நீ பெரிம்மா என்று சொல்லி கூப்பிட சொல்லும்போதெல்லாம் நான் உன்னை அம்மா என்று கூப்பிட நினைத்த ஆசையை தீர்த்துக்கொள்கிறேன்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா…………. மற்றும் அம்மாவுக்கும்.

11 பின்னூட்டங்கள் மே 6, 2009

அம்மா

(தாய்மையைப் பற்றி பகிர்வதற்கு நல்லதொரு யோசனையை முன் வைத்த சந்தனமுல்லைக்கு நன்றிகள்.)

ஒரு மழை நாளின் பொழுது எழுதி ஏற்கனவே பதிவிட்ட, என் அம்மாவிற்கு சமர்ப்பித்த ஒரு கவிதை இதோ மீண்டும் இங்கே.

மழையாய் நீ, மண்ணாய் நான்

வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்…

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க……….

(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

4 பின்னூட்டங்கள் மே 4, 2009

குட் டச், பேட் டச் – கருத்தரங்கம்

தீபாவின் குட் டச், பேட் டச் என்ற பதிவே இதற்கு ஆரம்பம் என்றும் சொல்லலாம். இந்த குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களான நாம் மேலும் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும் ஒரு கருத்தரங்கை மேற்கொண்டால் எத்தனை பெற்றோர்கள் வருவீர்கள் என்று பின்னூட்டம் இடுங்கள்.

கருத்தரங்கு சென்னையில்தான் இருக்கும். உங்களின் வருகையை பின்னூட்டத்தில் சொன்னீர்களேயானால், மேற்கொண்டு இது குறித்து விரிவாக பதிவிடப்படும்.

15 பின்னூட்டங்கள் மார்ச் 31, 2009

ஆல்ஃபா கிட்ஸ்

என் ஆஃபிஸின் கீழே ஆல்ஃபா கிட்ஸ் என்னும் குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. இன்று அங்கு இருக்கும் குழந்தைகளின் டேலண்ட் மீட் டே. குழந்தைகளின் குதூகலக் குரல் மைக் வழியே மூன்றாவது மாடியில் கேட்டது. ஆர்வத்தை அடக்க முடியாமல், ஆபிஸில் அனுமதி கேட்டுக்கொண்டு கீழே போய் பார்த்தேன்.
யப்பா, குழந்தைகள் குழந்தைகள். விதமான விதமான ட்ரஸ்ஸில். தேவதை மாதிரி ஒன்று, கரடி வேஷம் போட்டு, புலி வேஷம், புடவை கட்டிக்கொண்டு சில வால்கள் இன்னும் ஏகப்பட்ட அலங்காரங்கள். குழந்தைகள் அத்தனையும் மைதா மாவில் பிடித்து வைத்தாற் போல வெள்ளை வெளேரென்றும், செக்கச் செவெலென்றும்.
ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருந்தாலும், மைக் அருகே வந்து ரைம்ஸ் சொல்லும்போது திக்கியது, இரண்டு வரிக்கு மேல் சில குழந்தைகள் பாடவே யில்லை, ஒன்று கணீர் குரலோடு தெள்ளத் தெளிவாக பாடி அசத்தியது. இன்னொன்று வாஷிங்க் டே ரைம்ஸுக்கு, புடவை கட்டிக்கொண்டு, விக் கொண்டை வைத்துக்கொண்டு, ஒரு சின்ன கர்ச்சீப்பை துவைப்பது போல் ஆக்‌ஷன் செய்து கொண்டே பாடியது அபாரம்.ஒரு பையன் ரெயின் ரெயின் ரைம்ஸ் சொல்வதற்காக குடையோடு வந்து, பாவம் ஓவென்று ஒரே அழுகை.கரடி ட்ரஸ்ஸில் இருந்த பையன் அழுது கொண்டே இருந்ததில் கன்னமும், கண்களும் சிவந்து போயின. ப்ளாக் அண்ட் ரெட் காம்பினேஷனோடு இருந்தான் பார்ப்பதற்கு.
வழக்கமான குழந்தைகளின் வால்தனங்களை கேட்டு பார்த்து பழகியிருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு சற்றே புதிதாகத்தான் இருந்தது, அந்தக் குழந்தைகளைப் போலவே.

6 பின்னூட்டங்கள் மார்ச் 6, 2009

விக்ஸ்


இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழமைகளே.

8 பின்னூட்டங்கள் பிப்ரவரி 24, 2009

அம்மாவுக்கு, அப்பா சொன்ன அறிவுரை

தலைப்பு மாதிரி நீளமா இருக்காதுங்க இந்தப் பதிவு.

ரெண்டு நாளைக்கு முன்னே, டேபிளின் மீதிருந்த பொருளை அமித்து தள்ளிவிட்டாள். வழக்கம்போல ! அது கீழே விழுந்துவிட்டது. அருகிலிருந்த நான் உடனே அதை எடுத்து வைத்துக்கொண்டே, அம்மு இது மாதிரியெல்லாம் தள்ளக்கூடாது, அது தப்பு, கீழே விழுந்தா உடைஞ்சிடும்னு அமித்து கிட்ட நீட்டி முழக்கினேன். அமித்துவும் அவளின் ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் எடுத்து வைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த அமித்து அப்பா, அவ தள்ளி விட்டானா, அவளையே எடுத்து வைக்க சொல்லு, அத விட்டுட்டு நீயே அத சரி செஞ்சிட்டு வாயால சொல்றதால அவ எதையும் செய்யக் கத்துக்கமாட்டா.
மறுபடியும் அவ வந்து தள்ளுவா, நீ இதையே செய்வ, அவளுக்கு அது ஒரு விளையாட்டா போய்டும் அப்படின்னு சொல்லிட்டு, மேலே எடுத்து வைத்த அந்தப் பொருளை, மறுபடியும் கீழே வைத்து விட்டு
அமித்துவை கூப்பிட்டு அம்முடா, நீ இதை மேலே எடுத்து வை. பார்க்கலாம். அமித்துவும் அதே ட்ரேட் மார்க் சிரிப்போடு அதை மேலே எடுத்துவைத்தாள்.

ம்ஹூம் என்னத்த சொல்ல, ஒரு ஆச்சர்யத்தோடு அப்பா, மகளை பார்த்துக்கொண்டே திட்டிக்கொண்டேன் என் மடத்தனத்தை (மனசுக்குள்ள தான்).

(இனிமே இது மாதிரி அம்மாக்கள் வலைப்பூக்கள்ல அப்பாக்கள் சொல்ற அட்வைஸையும் எழுதுங்க சகா(கோ)க்களே)

7 பின்னூட்டங்கள் பிப்ரவரி 17, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category