ஜூலை 28th, 2009 க்கான தொகுப்பு




சின்ன குழந்தைகளுக்கு வேண்டாத சின்ன பொருட்கள்!!

மோதிரம்:

சிறு குழ‌ந்தைகளு‌க்கு ‌நகைகளை மா‌‌ட்டி‌க் கா‌ட்‌சி‌ கூடமா‌க்க வே‌ண்டா‌ம்.கை‌ ‌விர‌லி‌ல் போட‌ப்படு‌ம் மோதிர‌ம் வே‌ண்டவே வே‌ண்டா‌ம். ஏனெ‌னி‌ல் குழ‌ந்தைக‌ள் எ‌ப்போது‌ம் கைகளை ச‌ப்‌பி‌க் கொ‌ண்டே இருக‌்கு‌ம். மோ‌திர‌ம் ‌சில சமய‌ங்க‌ளி‌ல் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விடவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது.
மேலு‌ம், மோ‌திர‌ம் ‌கீழே ‌விழு‌ந்து காணாம‌ல் போ‌ய்‌வி‌ட்டா‌ல் கூட, குழ‌ந்தை முழு‌ங்‌கி‌வி‌ட்டிரு‌க்குமோ எ‌ன்று பய‌ந்து கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌‌ம்

மோ‌திர‌த்‌தி‌ல் க‌ல் வை‌த்து இரு‌க்கு‌ம். அதுவு‌ம் ‌மிகவு‌ம் தவறு. த‌ற்செயலாக அ‌ந்த க‌ல் ம‌ட்டு‌ம் கூட குழ‌ந்தை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விட வா‌ய்‌ப்பு‌ண்டு.மேலு‌ம், மோ‌திர‌த்‌தின அடி‌ப்பாக‌த்‌தி‌ல் அழு‌க்கு சே‌ர்‌‌ந்து ‌விடு‌ம். அ‌ந்த ‌விரலை ச‌ப்பு‌ம் போது குழ‌ந்தை‌க்கு உட‌ல் உபாதைக‌ள் ஏ‌ற்படலா‌ம். எனவே குழ‌ந்தைகளு‌க்கு மோ‌திர‌ம் அ‌ணி‌வி‌க்கா‌தீ‌ர்க‌ள்

ஸ்டிக்கர் பொட்டு:
சின்ன குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க வேண்டாம். சின்ன குழந்தைகளின் அம்மாக்களும்ஸ்டிக்கர் பொட்டு குழந்தைகள் பெரியவராகும் வரை வைக்க வேண்டாம். சில குழந்தைகள் உடன் படுத்து இருக்கும் போது அம்மாவின் முகத்தை தடவி கொண்டுஇருக்கும் போது பொட்டை எடுத்து அதன் வாயில் அல்லது மூக்கில் வைத்து கொண்டு விடும் நமக்கு தெரியாமலே.

ஜிகு ஜிகுனு டால் அடிக்கும் ட்ரெஸ்:
நம்ம சீதோஸ்ஷணத்திற்கு காட்டனே சிறந்தது. ஜிகினாக்கள் அவர்களின் மெல்லிய தோலினை குத்தும்.
கைக்கெட்டும் தூரத்தில் கத்தி, ப்ளேடு போன்ற ஷார்ப்பான பொருள்களை மறந்தும் வைக்க வேண்டாம்.

செல் போன்:தூங்கும் போது செல் போனை படுக்கையில் வைக்க வேண்டாம்.

2 பின்னூட்டங்கள் ஜூலை 28, 2009

ஸ்கூல்..ஸ்கூல்…விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள – வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயதுதான். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

தொடர்ந்து வாசிக்க இங்கே செல்லவும்!

Add a comment ஜூலை 28, 2009

ஸ்கூல்..ஸ்கூல்…விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள – வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே…!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) – அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து – மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

9 பின்னூட்டங்கள் ஜூலை 28, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூலை 2009
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category