மே 2009 க்கான தொகுப்பு
மூடியை திருடிய குள்ளநரி!!

ஊருக்கு உபதேசம்! இதைப் பார்த்து முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க,ட்ரெஸ்-ல்லாம் பொம்மைங்களுக்கு மட்டுந்தான்!!

பப்பு, gum-மோட மூடி எங்கே?

எனக்குத் தெரியாது..

நீதானே வச்சிருந்தே இப்போ? எங்கே இருக்கு பாரு…

நான் நாளையிலேருந்து தொலைக்க மாட்டேன் ஆச்சி!

இப்போ எடுத்துக் கொடு, இங்கேதான் இருக்கும் நல்லா பாரு..

இல்ல, ஆச்சி, அதுவே எங்கேயோ போய்டுச்சி,

கீழே இருக்கா, பாரு..

ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!

!!!

பப்புவிற்கு பேப்பரைக் கத்தரிக்க உதவினேன்.

“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”

வீட்டில் பேப்பரை கத்தரிப்பதற்கு ஆயாவிடமும், பெரிம்மாவிடமும் வாங்கிய திட்டுகள் நினைவிற்கு வந்தது!

Advertisements

Add a comment மே 31, 2009

ஜமதக்னி

ஜமதக்னி – தாஸ் கேபிடலை தமிழில் மொழி பெயர்த்தவர். ஹிக்கின்பாதம்ஸ்-ல் டிஸ்பிளே பகுதியில் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்வார் பெரிம்மா, சென்னை சென்றுத் திரும்பும் தினங்களில்! என் ஆயாவின் சகோதரி லீலாவதியின் கணவர் – ஜம்தக்னி! இவரைப் பற்றிய சுவாரசியக் குறிப்பொன்று – ஆயாவின் தந்தை, விடுதலைப்போராட்டதில் கைதாகி ஜெயிலில் இருந்தபோது அதே ஜெயிலில் இருந்தவர் ஜம்தக்னி. ஜம்தக்னி பெரிய படிப்பாளி/ பட்டதாரி என்பதால் வேறு கிளாஸும், ஆயாவின் தந்தை C கிளாசிலும் இருந்திருக்கிறார்கள். உணவும் வேறு வேறு போல. C கிளாசில் இருப்பவர்களுக்கு சோளக்கஞ்சி/சோளக்களி. தாத்தாவிற்கு அது ஒவ்வாததினால், ஜமதக்னி தனது அரிசி உணவை தாத்தாவிற்குக் கொடுத்துவிட்டு, தாத்தாவின் உணவை எடுத்துக் கொள்வாராம். அப்போது லீலாவதி அம்மையார், 9 வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அவரை தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு தாத்தாவிடம் உறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். விடுதலையான பின்பு அவ்வாறே திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்!!

அவரது நாட்டுடமையாக்கப் பட்ட எழுத்துகளைப் பற்றிய பதிவினை RV-யின் தளத்தில் பார்த்தேன். பதிந்து வைக்கத் தோன்றியது!

பொதுவாக, இந்தத் தியாகிகளுக்கு இருந்த வேட்கையும், விழிப்பும் அவர்களது அடுத்தத் தலைமுறைக்கு இருந்ததா என்றால் சந்தேகமே! எங்கே தோல்வியுறுகிறார்கள் இவர்கள்?தமது அறிவைக் கடத்துவதிலும், தொலைநோக்கு சிந்தனை இல்லாமையும், கல்வியறிவுக் குறித்த சிந்தனையற்றிருப்பதும்?!(சுயநலமாக இருக்கத் தவறியதன் விளைவு என்றும் கொள்ளலாம்!) பெரும்பாலான தியாகிகளின் குடும்பங்களில் இந்தநிலையைக் காணலாம். தூத்துகுடியில் சாலையோரத்தில் வசித்துவந்த கப்பலோட்டிய தமிழனின் வாரிசுகள் – அனைவருக்கும் தெரிந்த உதாரணம். வாழ்வாதாரங்களுக்காகவும், தகவமைத்துக் கொள்வதுமே பெரும் சவாலாக இருக்கிறது பல தியாகிகளின் வாரிசுகளுக்கு! சில தியாகிகளின் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!

பி.கு : இப்படியாக கணினிக் கற்றுக் கொண்ட பெரிம்மா, இப்போது பின்னூட்டம் போடுமளவிற்கு
வந்திருக்கிறார்கள்! 😉

Add a comment மே 29, 2009

வாழ்த்துகள் : வீணா !!

வீணா மற்றும் சிவாவிற்கு வாழ்த்துகள் –
குட்டி தேவதைக்கு மே 26 அன்று பெற்றோராகியிருக்கிறார்கள்!!

அம்மாக்கள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகள், Happy Motherhood Veena!

14 பின்னூட்டங்கள் மே 28, 2009

நான் வளர்கிறேனா மம்மி???!!!

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் விவரம்
தெரிந்தவர்கள் கேட்கும் கேள்வி
“குழந்தையின் எடை என்ன?”

இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா?
இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள உதவும்.

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை
குழந்தை மருத்துவ நிபுணரிடம் குழந்தையைக் காட்டி
எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா
என்று சரி பார்த்துக்கொள்வோம். (மிகச்சிறந்த
குழந்தை மருத்துவர் குழந்தையின் தலையின்
அளவைக்கூட குறித்துக்கொள்வார்)

பிறகு குழந்தை வளர வளர் உடல் நிலை ஏதும்
சரியில்லை என்றால் தான் மருத்துவரிடம் செல்வோம்
என்பதால் பல விடயங்கள் நமக்குத் தெரியாமலேயே
போய்விடுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் சரிவிகித
உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. (சாப்பிட
வைப்பதே பெரும்பாடாக இருக்கும் பொழுது
சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா?)

ஆனால் கவலைப்பட வேண்டும். அப்போதுதான்
நாம் நம் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.

குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய
பங்கு வகிக்கிறது.

அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய
எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ ஆபத்தானது.
கொழுக் மொழுக்கென இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம்
என்பது அபத்தம். உயரத்துக்கான எடை இருந்தாலே அவர்கள்
ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தம்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள்
சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது
சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, குறைவான
உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான
காரணங்கள். இதை தெரிந்து கொண்டு சரிசெய்தால்
குழந்தைகளை சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:
இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல.
உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக
இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட
முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல்
போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில்
பாதிப்பைத் தரும்.

இன்னொரு வகை பிரச்சனையும் இருக்கிறது.
குடும்ப வாகு, உடல்வாகு போன்ற காரணத்தால்
சில குழந்தைகள் அதிக உயரம்(வயதுக்கு மீறிய
உயரம்) இருப்பார்கள். இதனால் ஒல்லியாக
தெரிவார்கள். 12 வயதுக்கு 147 செ.மீ இருக்க
வேண்டிய பையன் 153இருந்தால் அதிக உயரம்.

(வயதுக்குத் தகுந்த எடை இருந்தாலும்)
அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை
இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும்
எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு
உள்ளாவான்.

நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக்
கண்காணித்து வரவேண்டும்.

HEIGHT / WEIGHT CHART
மேலே தரப்பட்டுள்ள லிங்கில் நம் இந்தியக்குழந்தையின்
உயரம்/எடை அளவு தரப்பட்டுள்ளது.

உயரம்/எடை அளவு ஆண்குழந்தைக்கு
வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு
என்பதை நாம் மறக்கக்கூடாது.

சரியாக கவனித்து முறையாக வளர
நாம்தான் உதவ வேண்டும்.

ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம்.
அவர் நலன் காப்போம்

9 பின்னூட்டங்கள் மே 26, 2009

பப்பு நினைக்கிறாள்….

1. நாங்கள் கடந்துச் செல்லும் எந்த பிரிட்ஜ்-உம் லண்டன் பிரிட்ஜ் என்று!
அவள் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சைக்கலாஜிக்கல் ட்ராமா – எதைக் கொண்டு கட்டி இருப்பார்களோ- எப்போது இடிந்து விழுமோ!

2. தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் !

பள்ளிக்கூடம் போகலாம் என்ற பேச்செடுத்தாலே, எனக்கு ஸ்கூல் முடிஞ்சுடுச்சு என்கிறாள். சமயங்களில், அலுவலகத்திற்குத்தான் செல்லப் போவதாகவும் கூறுகிறாள். அப்படி ஒரு அலுவலகம் இருக்கிறதா?

3. எதிர்படும் வேகத்தடைகளை மலைகளென்றும்!
இது
டோரா விளைவு!!

Add a comment மே 25, 2009

பிரசவ அனுபவம்

என் due date மே 25th. இதுவரை எனக்கு வலி வரவில்லை. என் மருத்துவர் இன்று ( திங்கள் இரவு) வரை பார்த்து விட்டு , ஊசி மூலம் வலி வர செய்யலாம் , மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.
யாருக்கும் , இந்த முறையில் பிரசவம் நடந்து இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்த்து கொள்ளுங்களேன். நான் கொஞ்சம் பயந்து போய் தான் உள்ளேன்.( Very Much Expected Normal Delivery 😦 )

13 பின்னூட்டங்கள் மே 25, 2009

ஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்கு!

குழந்தைகள் பிறந்தது முதலே ஆரோக்கியமான உணவு முறை மூலம் ஆரோக்கியமான சந்ததிக்கு வித்திடுகிறோம்!

அதிலும் பருவமடைந்ததும் ஆண்/பெண் இரு பாலரின் உணவு முறையிலும் அதிக கவனம் தேவை!
அதிலும் பெண்கள் கருவை சுமக்கும் அளவிற்கு திடகாத்திரமாக இருப்பது அவசியம்!
11வயது முதல் உணவு முறையில், பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருதல் நலம்; அது பற்றியே இப்பதிவு!

இதில் உள்ள அனைத்து குறிப்புகளும் மருத்துவர் மூலமும், பிறர் அனுபவத்திலும், என் சொந்த அனுபவத்திலும் அறிந்தவை… உங்களுக்கும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க உதவுமே என்று கூறுகிறேன்!
ஏதேனும் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் வேறு சில உணவுகளையும், பழக்கங்களையும் சேர்க்கலாம் எனில் அதையும் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

முதலில் உணவினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்களுக்கான உணவு 11வயது முதல்:

பச்சைக் காய்கறி சாலட்
தக்காளி ஜூஸ்/தக்காளி உணவு
வெங்காயம்
பூண்டு
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
முட்டை

இந்த உணவுப் பொருட்கள் தினசரி உணவில் இருப்பது நலம்.
வயிற்றில் கல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தக்காளியைத் தவிர்க்கலாம்!

பெண்களுக்கு:

பச்சைக் காய்கறி சாலட்
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
வெந்தயக் களி
உளுந்து களி
முட்டை
மீன்
நல்லெண்ணெய்
பப்பாளி

இவை அனைத்து இரத்தவிருத்தி, இரத்தசுத்தி, கர்ப்பப்பை வலுவூட்ட, தேக ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு போன்றவற்றிற்கு பயன்படும் தலை சிறந்த உணவுகள்.

பழக்கவழக்கங்கள்:(பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கடமை)

குழந்தை தானாக குளிக்கத் தொடங்கியதிலிருந்து உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என தாய் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்;

இதில் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் மட்டுமின்றி நோயற்ற சந்ததியினருக்கான வாய்ப்பும் அடங்கியுள்ளது!

நொறுக்குத் தீனிகளை, எண்ணெய் உணவுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.
குழந்தைப் பருவத்திலேயே இதற்குப் பழக்கிவிட வேண்டும்;

பாலியல் கல்வி கற்பதில் பெற்றோரும், ஆசிரியருமே ஒரு குழந்தைக்கு துணையாக இருந்து நல்ல அறிவியல் வழியில் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்;

திருமண பந்தம் பற்றி பெண் குழந்தைகள் மனதில் தவறான புரிதல்களை விதைத்து விடாதீர்கள்;

புதிய உறவுகள், அடக்கு முறை என்றெல்லாம் அவர்களைக் குழப்பி கணவனைக் கைக்குள் போடுதல் அது இது என்று பிதற்றி உங்கள் பெண்ணின் வாழ்வைக் குலைத்துவிடாதீர்கள்; இது அவர்களை மன ரீதியாக பாதிப்பதோடன்றி மிகவும் தாமதமான மகப்பேறு அல்லது மகப்பேறின்மைக்கு வழிவகுத்துவிடும்;

ஆண் குழந்தையின் தாயும் இது பற்றியெல்லாம் கவனமெடுத்தல் நலம்;

மேலும் கர்ப்பகாலம் பற்றிய புரிதலை ஒரு தாய்தான் மகனுக்கு எடுத்துக் கூற வேண்டும்; அப்போதுதான் மனைவியின் கர்ப்பகாலத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பது ஒரு ஆடவனுக்குப் புரியும்; அவனுக்கும் புதிய விஷயம் தானே!

திருமணத்திற்குப் பின்:

தினமும் இரவு பாதாம் பருப்பும் பாலும் தேனும் சேர்த்தல் அவசியம்;

இரவு உறங்க படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், டாய்லெட் எல்லாம் போய்விட வேண்டும்;

படுக்கும் முன் தண்ணீர் குறைவாகக் குடித்தல் நலம்;

கர்ப்பம் தரிக்கும் சமயம் பெண்களுக்கு முதுகுவலி அறவே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இது கர்ப்பம் தாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை;

தம்பதியர் இருவரும் அன்போடு வெளிப்படையாக ஏதாவது பேசுங்கள் தினமும் இரவு படுக்கும் முன்; ஒருவருக்கொருவர் அன்று நடந்த செய்திகளையும், அன்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள்; இது மன இறுக்கம், கவலை நீக்க உதவும் அருமருந்து!

பெண்கள் ஃபோலிக் அமில உணவுப் பொருளான தர்ப்பூசணி அதிகம் எடுத்துக் கொள்வதோடு, அந்த மாத்திரையையும் கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே எடுக்கத் துவங்கி விடலாம்;

இவற்றை செய்து பாருங்கள்! அருமையான கர்ப்பகாலமும், ஆரோக்கியமான அழகான குழந்தையும் உங்களுக்கே! :))))

2 பின்னூட்டங்கள் மே 22, 2009

மாண்டிசோரி கல்வி

Anyone Have Idea about Venkateshwara Montessory in Chennai? I world like to do Diploma Cource in Montessory. Please suggest some Institutes offeres Postal Course.
http://www.svm.co.in/
Thanks In Advance
Veena Devi

2 பின்னூட்டங்கள் மே 22, 2009

அன்னையர் தினத்துக்காக – " பார்வைகள் " கவிதா

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”பார்வைகள் கவிதா தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கவிதா! ”கன்னத்தில் முத்தமிட்டால்’ என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

“அம்மாக்கள் தினம்” கொண்டாட்டம் !! முல்லை அம்மாக்கள் வலைப்பூக்களில் அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுதச் சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். ஆனால்

கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !

குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..

‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. 🙂

கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. 🙂

எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-

ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்

இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என் அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.

சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா’ வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா’வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது. என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக…. 😦

அம்மா – ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும். பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின் அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். 😦 எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்தற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.

அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு 🙂

உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல், இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை. அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்….

குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா’வாகிவிட முடியாது.!

அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு… பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா…!! யம்மா.. ! ஆத்தா… ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொல்லுங்க முதல்ல…!!

பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.
——————————————-
Take time to read; it is the foundation of wisdom

7 பின்னூட்டங்கள் மே 22, 2009

ஆ ஃபார்…

ஆச்சி…வீட்டில் எனது செல்லப் பெயர்! ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் இந்தப் பெயரில் என்னை யாரும் அழைத்திருக்க வில்லை.ஆனால் மேனிலைப் பள்ளியில் ஆச்சி என்றுதான் பலரும் அறிவர். பெரும்பாலான ஆசிரியர்கள எனது சின்னவயதிலிருந்து அறிந்ததால் இருக்கலாம். ஆனால் வகுப்பறையில் முல்லைதான்! ஆச்சி என்ற இந்தப் பெயர் சிறியவயதில் ஒரு தொல்லையாகவே இருந்தது. அப்போதெல்லாம் திட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் தெரியாதே..பெயரை வைத்துத் தானே திட்டுவோம்!! விஜி பஜ்ஜி, புகழேந்தி..புழு, ராஜா கூஜா, பிரேமா கிரேமா..இப்படி அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, டீ ஆர் பாணியில் !!அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!

கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்து இருக்காது, ஆனால் நமக்கென்று இருக்கும் ஒரு க்ளோஸ்ட் க்ரூப் மட்டும் அறிந்திருக்கும்..ஆனால் ஒரு சில நேரங்களில்தான் இந்தப் பெயர் உபயோகத்துக்கு வரும்.புதிதாகக் கேள்விப்படுபவர்களுக்கு பெயர் விளக்கம் சொல்லனும். தானாகத் தெரியாது, ப்ரெண்ட்சை வீட்டுக் அழைத்துவரும்போது தெரிந்துவிடும்!!
கல்லூரித் தோழிகள் வீட்டுக்கு வந்தால் அப்படியே மாறி விடுவார்கள், நமதுக் குடும்பத்தில் ஒருவரைப் போலவே! ஆச்சியென்றே அழைப்பது, நாம் யாரை என்ன உறவு வைத்துக் கூப்பிடுகிறோமோ அவ்வாறே அவர்களும் அழைப்பது!! கொஞ்சம் ஓவராத் தான் இருக்கும்! எல்லாம ரொம்ப பவ்யமாக இருப்பதுபோல சீனுக்காகத் தான்! அதில், லதா கொஞ்சம் அதிகமாகப் போய், பெரிம்மா காலில் வேறு விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்! (அசத்துவதாக நினைத்து செய்தாள் என்று நினைக்கிறேன்!அதுவுமில்லாம கால்ல விழுந்தா கண்டிப்பா காசுக் கொடுப்பாங்க வேற!) ஆனால் பெரிம்மா, ”கால்ல விழுந்தாத்தான் எங்க ஆசீர்வாதம்னு இல்லம்மா, எப்போவும் உங்களுக்கு எங்க ஆசீர்வாதம் இருக்கும்னு ”சொல்லிட்டாங்க! (ஹிஹி..நோ காசு!)அதுவும் இல்லாம க்ளோஸ் ப்ரெண்ட்சை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வர்றது பெரிய சந்தோஷம். ஒரு தடவை கூப்பிட்டுப் போனா போதும், எல்லா லெட்டர்லேயும் இவங்களை அவங்க நலம் விசாரிப்பாங்க,அவங்க இவங்களை நலம் விசாரிப்பாங்க, நமக்கு நாம யாரோட குடும்பம்னு ஒரு குழப்பமே வந்துடும்! நமக்கு வர்ற போன்கால்ல இவங்க வந்து ரெண்டு வார்த்தை வேற பேசிட்டு போவாங்க!! நமக்கும் அவங்க வீட்டுலேர்ந்து இதே கவனிப்புதான்! இப்படி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறேன்னுதான் திண்டுக்கல், உடுமலைப்பேடை,ராமேஸ்வரம், கோயமுத்தூர்ன்னு சுத்தினதெல்லாம்! இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்! ஹ்ம்ம்….ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!!

அ ஃபார் ….

Add a comment மே 22, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2009
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Posts by Month

Posts by Category