செப்ரெம்பர் 2008 க்கான தொகுப்பு
இந்த அக்டோபரை மகிழ்ச்சியோடு…

நான் எதிர்நோக்குவதற்கான மூன்று காரணங்கள்!!

வாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்
ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக
மாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்

அனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

Advertisements

Add a comment செப்ரெம்பர் 29, 2008

பாலும் தெளிதேனும் – இன் பப்புஸ் வாய்ஸ்!!

Get this widget | Track details | eSnips Social DNA

ரெக்கார்ட் செய்ததை தவிர என் பங்கு இதில் ஒன்றுமில்லை.
அம்மாவுக்கு நன்றிகள்!!

Add a comment செப்ரெம்பர் 29, 2008

பப்பு அப்டேட்

பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)…

பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்

நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!!

கதைப்புத்தகங்கள் – சில டிப்ஸ்

புத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்…அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது!! ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்களை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.
இதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்!!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,

புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.

சத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை!!), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு!

கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்! ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!

இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!

Add a comment செப்ரெம்பர் 28, 2008

பப்பு பேச்சு கேட்க வா(ங்க)!!

1. Fan மாய்ஞ்சு மாய்ஞ்சு சுத்துது, பாருங்க!!

2. சிறிது நேரம் தூக்கியபின், “போது பப்பு கீழே இறங்கு” என்றபோது மாட்டேன் என்றாள்.
” கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு” என்றபோது, “உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!”!

3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, “நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு! குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க!” என்றபோது,
“நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!”

4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?

“அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!

5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு?

நீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்!!

(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்!!)

பிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு

ஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு!!

எங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது!!

நியூஸ் :

வனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது!!

3ஆம் வகுப்பு – 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது!!

Add a comment செப்ரெம்பர் 26, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

மளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே…
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!

Add a comment செப்ரெம்பர் 25, 2008

தமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு

தரையில பெயிண்டை சிந்தினா உனக்கு இனிமே பெயிண்ட் பாக்ஸ் கெடையாது, பப்பு!!

கெடையும்..எனக்குக் கெடையும்!!

Add a comment செப்ரெம்பர் 24, 2008

பப்பு டைம் பாஸ்

Activity புத்தகங்கள்

3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.
(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)
வழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.

ஸ்டிக்கர் புத்தகங்கள்

இதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்
தூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்!
நன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு!!

வண்ணம் தீட்டுதல்

மாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.
Not so happy as with free hand!!

Add a comment செப்ரெம்பர் 23, 2008

திண்ணை நினைவுகள்

திண்ணை நினைவுகள் பற்றி எழுத டேக் செய்த பிரேம்குமாருக்கு நன்றி.

இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
அந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.
இருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.
இடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.
வீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,
பெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.

திண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.
கீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு
வீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.
ஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).
ஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.

அப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்
வாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்!

நான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு!! அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு!!

யோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.
அங்கு திண்ணை இல்லை…ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். 😉 ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்
பேப்பரில் இருக்கும்.மறந்துப் போய்விட்டது!!)

இப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! 😦

பிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை(!) எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.

Add a comment செப்ரெம்பர் 21, 2008

பப்பு டைம்ஸ்

அரசியல்

“ராஸ்கல்” சொல்லு – பப்பு என்னிடம்.

“ராஸ்கல்”

ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!

ம்ம்ம்…!
(aaya is tour moral police @ home. Pappu is aaya’s lil helper now!!)

Lateral thinking

பப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை
வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்
அவள்தான் திருப்புவாள்.

அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,

பப்பு, திருப்பு..

புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!

கேள்வி கார்னர்:

இது என்னா? – பப்பு

இது புருவம். சொல்லு..புருவம்.

ப(பு)ருவம்….இது ஏன் இங்க இல்ல? (என் மூக்குக்குக் கீழ் காட்டி)
ஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)

புருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.
blah…blah..

முடி ஏன் கருப்பா இருக்கு?

முடி கருப்பாதான் இருக்கும், பப்பு.
இந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.

ஏன் தலைல கருப்பா இருக்கு?

கூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி!!

Add a comment செப்ரெம்பர் 17, 2008

குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்

3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன்.
தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏராளமான புத்தகங்கள் தமிழில் உண்டு.

நியூ ஹாரிஜன் மீடியாவின் ப்ராடிஜி புத்தகங்கள் என்னுடைய ஆதங்கத்தை தணித்தது. பப்புவுக்கு வாங்கியது இந்தப் புத்தகம்.புத்தகங்கள் 5 வயதினருக்குரியது போலிருந்தாலும் பப்பு வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.தெளிவான பெரிய படங்களுடன் ஒன்றிரண்டு வாக்கியங்களில் கேரக்டர்கள் பேசுவதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. புத்தகத்திலிருப்பதைப் படித்துக் காட்டினாலே சிறு குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

விலையும் குறைவுதான். மற்ற சில டாபிக்குக்ளையும் டிரை செய்யலாமென்றிருக்கிறோம்.

Add a comment செப்ரெம்பர் 17, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

செப்ரெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Posts by Month

Posts by Category