ஜூலை 2nd, 2008 க்கான தொகுப்பு




யாருக்கேனும் ஞாபகமிருக்கிறதா இந்த விளையாட்டு?!

மூன்றாம்/நான்காம் வகுப்பு படிக்கும் போதும்,அதற்கு பின்னும் கூட இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம்.இது சிறுமிகளின் பிரத்யேக விளையாட்டு!! இருவர் எதிரெதிரில் அமர்ந்துக் கொண்டு பாடலுக்கேற்ப கைகளை தட்டவேண்டும்.
சிலசமயம் இருமுறை, மேலும் கீழும், கிராஸாக…ஆனாலும் வேகமாக! இதற்கு, இருவரும் sync-லிருப்பது அவசியம்!! நிறைய பாடல்களுண்டு!!

இப்போதெல்லாம், இதை சிறுமிகள் விளையாடுகிறார்களா அல்லது,
தொல்பொருள் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை!!

ஆனால், 80/90 களில் வளர்ந்தவர்கள் இதை விளையாடாமலிருந்திருக்க முடியாது!!

eena meena macaracca, rare i dominacca,
yucapacca,
cheekapacca,
rom pom push

இன்னும் பெரிய பாடல்கள் இருக்கின்றன!! அதில், “லாலிபாப் ஐஸ்கிரிம் ஆன் த டாப்” என்று வரும்!! யாருக்காவது ஞாபகமிருந்தால், பகிர்ந்துக் கொள்ளலாம்!!

அர்த்தமில்லதா வார்த்தைகள்தான்..ஆனால் பாடிக்கொண்டே கிளாப் செய்து முடித்திருக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியும், சிரிப்புமாய்…ஸ்கூல் டேஸ்னா ஸ்கூல் டேஸ்தான்!!

Add a comment ஜூலை 2, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category