மே 2008 க்கான தொகுப்பு
கோலங்கள்.. கோலங்கள்!!

அலுவலகத்தில் நடந்த ரங்கோலி போட்டிக்கு theme என்று ஒன்றும் வேண்டாம் என்பதே எங்களின் தீர்மானமாக இருந்தது. பெரும்பாலனவர்களுக்கு,கோலம் போடுவது முதல் முறை..(ம்ம்..என்னைத்தான் சொல்கிறேன்!!).அதனால், அவரவருக்கு எது எளிதாக போட வருகிறதோ அதை போடலாம் என்று முடிவு செய்தோம்.

ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து பேர் என நான்கு டீம். ஒரு டீம் லீடர்.
சில பல rangoli brain storming sessions – கு பின் ஒரு நாள் ட்ரையல் வேறு. என்ன வரைய போறோமா..அது மட்டும் ரகசியம்..! எல்லாருக்கும் ஒவ்வொரு பொறுப்பு..வரைவது, வண்ணபுபொடி நிரப்புவது என. வண்ணங்களை கலந்து தருவது என் பொறுப்பில். (ஹப்பா…உங்க தலஎழுத்த யாரால மாத்த முடியும்..!!)

அப்புறம் எல்லாரும் வரைய ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது..எல்லாரும் ஏதாவது ஒரு
concept-ஓடுதான் இருக்கிறார்கள் என. (நாங்களும் கான்செப்ட் வைச்சிருக்கோமே!!)

இது, conceptual லெவெல்-ல!!

இது, implementation லெவெல்-ல!!

இது டீம் B

அம்மா என்றால் அன்பு!!

டீம் C

டீம் D


அமைதி…அமைதி…அமைதி!!

பரிசா..முதல் பரிசு global warming-க்கு, இரண்டாம் பரிசு child labour-க்கு!

Advertisements

Add a comment மே 30, 2008

ஹா ஹா ஹாசினி type கிறுக்குத்தனங்கள்..

முட்டினா கொம்பு வரும் மாதிரியான நம்பிக்கைகள் பள்ளியிலிருந்து கல்லூரி வரை தொடர்ந்திருக்கிறது. ஆனா, அது எங்கள் மெச்சூரிட்டிக்கு ஏத்தமாதிரி மாறிக்கிட்டேயிருக்கும்.

3ஆம் வகுப்பு

* முட்டினா கொம்பு முளைக்கும். முளைக்காம இருக்கனும்னா, ரெண்டாவது வாட்டி முட்டனும்.
*பொய் சொன்னா வாலு முளைக்கும்
*ப்ளம்ஸ்/இலந்தைப் பழம்/பேரிச்சம் போன்ற கொட்டைகள் முழுங்கினால், வயிற்றுக்குள்ளிருந்து (வாய் வழியாக) மரம் வளரும்.
*மயிலிறகு குட்டி போடும்.

7ஆம் வகுப்பு

*நகத்தில் பூ விழுந்தால், புது டிரெஸ் கிடைக்கும்
*புறா பறப்பதை பார்த்தால், இரு கைவிரல் நகங்களையும் உரசிக்கொண்டு, “புறா புறா பூ போடு” என்று சொன்னால்
நகத்தில் பூ விழும்.

10ஆம் வகுப்பு

*எத்தனை குருவிகளை பார்த்தோமோ, அதை வைத்து,
one for sorrow, two for joy etc.

* புது ட்ரெஸ் போட்டுட்டு வந்தா, new pinch கொடுப்பது. (சிலருக்கு இந்த் பழக்கம் வாழ்நாள் முழுதும் தொடரும்!!)
*காக்கா எச்சமிட்டால், நீங்க ரொம்ப லக்கி!! (?)

கல்லூரி இறுதி வருடம்

* கடைசி வாய் சாபபிடறவங்களுக்கு நல்ல husband!
(ஒரு தோசை/ஸ்நாக்ஸ் எல்லரும் சேர்ந்து சாப்பிடறோம்னா, கடைசியா இருக்கும் portion. யார் எடுத்துக்கறதுன்னு
மீதியாவதை தடுக்க இப்படி ஒரு யோசனை.அடிச்சி பிடிச்சி எடுக்க ஓடி வருவாங்க!)

* ட்ரெஸ்/ஸ்லிப் திருப்பி போட்டுக்கிட்டோம்னா, புது ட்ரெஸ் கிடைக்கும்.

* பேனா, கைக்குட்டை பரிசளித்தால், நட்பு முறிந்துவிடும்.

அலுவலகத்தில் சேர்ந்த பின்

* தலையில் வைத்த பூ மாலை வரை வாடாமலிருந்தால், மாமியார் ரொம்ப நாள் உயிரோட இருப்பாங்க!!(சந்தோஷமா துக்கமா!!).

கனவில் சாவு வந்தால், கல்யாணம் என்று என் ஆயா நம்புவதையும், கனவில் குரங்கு வந்தால் ஆஞ்சநேயருக்கு வடை மாலையும், காகம் வந்தால்கோவிலில் விளக்கும் ஏற்றும் அம்மாவின் நம்பிக்கைகளையும் எதில் சேர்ப்பது?

Add a comment மே 29, 2008

சித்திரம் பேசுதடி…

பப்புவின் கை வண்ணத்தில்…

இதை வரைந்தபின் சொன்னாள் “ஆயா, பாரு நான் பல்லி வரைஞ்சிட்டேன், வாலு பாரு ஆயா!!”.

தேதி/பெயர் உபயம் : பப்பு அம்மாவின் அம்மா

Add a comment மே 27, 2008

நான் வளர்கிறேனே..மம்மி!!

பப்பு சாப்பிட/பால் குடிக்க அடம் பிடிக்கும்போது, ஆதி என்கிற பொம்மைக்கு
கொடுக்க போவதாக பாவ்லா காட்டுவேன். பப்பு “ஆதிக்கு குடுக்காதே, நான் குடிக்கறேன்” என்று உடனே வாங்கி சாப்பிட்டு விடுவாள்.

சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்) அவள் அடம் பிடித்தபோது, ஆதிக்கு கொடுக்க போவதாக சொல்லி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டேன். “ஆதி குடிடா… டேஸ்டா இருக்கா?” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ம்ம்ஹூம்..ஒன்றும் வேலை ஆகவில்லை. பப்புவிடமிருந்து நோ ரியாக்ஷன்!!

என்னையே பார்த்துக் கொண்டிருந்த பப்பு கேட்டாள் “ஆதி குடிக்கமாட்டேங்கறானா?” !!

(ம்ம்..இனிமே இந்த ஐடியா வேலைக்கு ஆகாது!! )

Add a comment மே 26, 2008

எண்களும் அளவுகளும்

அம்மா புடிக்குமா உனக்கு??

..புடிக்கும்!

எவ்ளோ புடிக்கும்?

அஞ்ஞ்சு புடிக்கும்..!!

பப்பு குறிப்பு: பப்பு எண்களை கற்றுக் கொள்கிறாள். And she thinks five is the maximum!! குழந்தைகள் உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது!!

Add a comment மே 23, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2008
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category