ஜனவரி 2008 க்கான தொகுப்பு
எனக்கு பிடித்த பதிவு – காட்டாறுக்காக

எழுதியதிலேயே எனக்கு பிடித்த பதிவைப் பற்றி எழுத என்னை அழைத்த
காட்டாறுக்கு நன்றி!

எழுதியது 50+ பதிவுகள்..அதிலே சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் எழுதல..
மொக்கை, மொக்கை மேலும் மொக்கையை தவிர!!
எல்லாரோடையும் பகிர்ந்துக்கரதுக்கு நிறய இருக்குன்னாலும், எழுதி
வைக்க தோணறது இல்ல..ம்ம்..சோம்பேறித்தனமும் காரணமா இருக்கலாம்.
இருக்கலாம் இல்ல..சோம்பேறித்தனம் தான். எழுதற நேரத்தில நாலு பதிவாவது
படிச்சிட்டு போய்டலாமேன்னு நினைக்கறதும் ஒரு காரணமா இருக்கலாம்.

ஓக்கே ஓக்கே!! நான் எழுதியதெல்லாமே பிடிச்சதுதான் என்றாலும்,
அனுபவிச்சி எழுதினது “நினைவுகள்” தான். எழுத பிடிச்சதும் அதுதான்!!

நினைவுகள்…: மயிலிறகே…மயிலிறகே..

நினைவுகள் : கும்பிட போன தெய்வம்…

நினைவுகள் : தூங்காய்…கண்..தூங்காய்

நினைவுகள் : வாராய்..நீ…வாராய்

நினைவுகள் : திருநெல்வேலி அல்வாடா….

நான் எழுதினதுல எனக்குப் பிடிச்சது சொல்றதோட, மத்தவங்க எழுதுனதுல எனக்கு பிடிச்சது/பாதிச்சது சொல்லலாம்னு நினைக்கறேன்.
அதுல, காட்டாறு எழுதின கவிதைகள் மறக்க முடியாது. அதுவும், என் இரண்டு வயது பெண் குழந்தை யார்கிட்டேயாவது போகும்போது இந்த கவிதை சட்டென்று ப்ளாஷ் ஆகும்.

இன்னொரு கவிதை

கடைசியா, அந்த “தோழியின் மரணம்” பதிவும் என்னை கலங்க வச்சது!!

Advertisements

Add a comment ஜனவரி 25, 2008

சந்தனக்காடு – வீரப்பன் தொடர்நாடகப் பாடல்

சந்தனக்காடு – வீரப்பன் தொடர்நாடக பாடல்

ஏ..வேலாயி..வேலாயி!!
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா

ஒனக்கொரு மகன் பொறப்பான்
அவன்கதய சொல்லிவையி
புலியாக மாறிடுவான்
……

கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம் பொறந்ததடி
ஈச்சந்தோப்பு மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி!

ஏ காட்டுக்குள்ளே மறைஞ்சிருந்தும்
உலகத்துகெல்லாம்
தெரிஞ்சிருந்தான்!!
….
ஆதரிக்கும் தெய்வமடி
ஆத்திரம் வந்தா
மிருகமடி..
நல்ல மிருகமடி

தொண்டக்குழில இருந்த சோத்த
எடுத்து வந்தவன்டி
யாரும் நாடி வந்தா
இருந்ததெல்லாம் பங்கு வச்சவன்டி!

இவன நம்பி லட்சம் வீட்டில் ஒல கொதிச்சதடி..
கோட்ட இவன் தலைக்கு கோடி கணக்கில் வெலய வச்சதடி!

காட்டயெல்லாம் கட்டிக் காத்த வீரனாருதான்..
இவன் அள்ளி தந்து சாஞ்சி போன அய்யனாருதான்!!

பெத்த தமிழ் மேலே ஒரு பாசம் வச்சவன்டி
அதுக்கு பாதகம்தான் நேர்ந்துபுட்டா வெடிய வச்சவன்டி

கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம் பொறந்ததடி..

மானத்துக்கு அவன் காவல்காரன்
மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி
………
……..

ஏ..பேய் நடுங்கும்..புயல் நடுங்கும்
உள்ள வந்தா முனி நடுங்கும்..
சாமி கூட இங்க வந்த சத்தியமா கொல நடுங்கும்!!
முள்ளவேலங்காட்டுக்குள்ள 36 வருசங்களா
ஓடி ஓடி அலஞ்சப்பறம்
ஓஞ்ச எடம் இந்த எடம்..
பூச்சொரியும் நந்தவனம்!

Digicam-ல் ரெக்கார்ட் செய்தது. பப்பு பின்னால் கத்திக்கொண்டிருந்ததை தவிர்க்க முடியவில்லை!
வார்த்தைகள் புரியாத இடங்களையெல்லாம் …. நிரப்பியிருக்கிறேன்.

இந்த வீரம், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும்…
ஒரு நூற்றாண்டுக்கு முன்பென்றால் ஆங்கிலேயனை ஓட ஓட துரத்தியிருக்கும்!!

Add a comment ஜனவரி 9, 2008

அது ஒரு கதைக் காலம்

காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்…
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!

Add a comment ஜனவரி 8, 2008

முதல் இரவு

ஒரே கலக்கம்…தயக்கம்!!
மனம் நிறைய குழப்பங்கள்!!
ஆனால் ஆசை ஒருபக்கம்!! வேறு வழியில்லை!!

உள்ளே போய் அழ நேர்ந்தால்..! வேறு வழியில்லை..வெளியே வந்துவிடத்தான் வேண்டும்.
ஆனாலும், குடிக்க தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும் அவன் எடுத்து வைத்திருப்பான்.

நான் செய்வது சரியா..தவறா? யார் தான் சொல்ல முடியும்..?
எனக்கு முன்பும் பல பேர் செய்திருக்கிறார்கள்..இனிமேலும் செய்யத்தான் போகிறார்கள்!!
துணிந்து விட வேண்டியதுதான்…ம்ம்..

வருவது வரட்டும்..என் அம்மா, பாட்டி செய்யாததையா நான் செய்துவிட போகிறேன்..
பலவித எண்ணங்களுக்குப் பிறகு….போய் சேர்ந்தோம்..சத்யம் தியேட்டர் வாசலில் என்
குட்டிப்பெண் பப்புவோடு…முதல் முறையாக..நைட் ஷோ பில்லா 2008 பார்க்க!!

எதிர்பார்த்தபடி பிரச்சினை ஏதும் செய்யாமல் சமர்த்தாய் தூங்கிவிட்டாள்!!!

Add a comment ஜனவரி 7, 2008

மழைக்கால நினைவுகள்

ஒவ்வொரு மழைக்காலமும்
கடந்து செல்கிறது…
என் நினைவுக்கூட்டில்
புதைந்திருக்கும்
உன் படிமங்களை
விடுவித்தபடி!!

Add a comment ஜனவரி 4, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2008
தி செ பு விய வெ ஞா
« அக்   பிப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category