ஜூலை 2007 க்கான தொகுப்பு
ஆசிரியர்களுக்காக….

மவுசை இப்படி பிடிங்க…
ஐயோ..இந்த விரல் பட்டன் மேல இருக்கனும்!! – மிரட்டலான தொனியில் நான்.

அந்த விரலால க்ளிக் பண்ணுங்க…
இல்ல…முதல்ல ஒழுங்கா மவுசை பிடிங்க..ம்ம்..இதோ..இப்படி.. – குரலை உயர்த்துகிறேன். அப்பதான் மனசில நிக்கும்.

ம்ஹம்..மேல..மானிட்டரை பாருங்க..மவுசை பிடிச்சுகிட்டே அந்த அம்பு எங்க இருக்குன்னு பாருங்க…எத்தனைதடவை சொல்லிகொடுத்தேன்..மறந்து மறந்து போயிடறீங்க! – சலிப்போடு!!

இப்போ.. ஈ ன்னு இருக்கு பாருங்க..அதை ரெண்டு தடவை க்ளிக் பண்ண்ணுங்க..

ம்ம்..உடனே உடனே பண்ணனும்..அப்பதான் ஓப்பன் ஆகும்!!

இல்ல..இருங்க..உங்க கைய பிடிச்சி நான் பண்றேன்..ப்பா..இது புரியலயா உங்களுக்கு!!
ம்ம்ஹீம்..ப்பா..உங்களுக்கு சொல்லி குடுக்கறதுக்குள்ள…சரி..இப்ப நீங்களே ஓப்பன் பண்ணுங்க..பார்க்கலாம். – மீண்டும் சலித்துக் கொள்கிறேன்.
பின்னே..ஒரு முறையா..இரு முறையா..!!

ம்ம்..ரெண்டு தடவை டக்டக்க்ன்னு க்ளிக் பண்ணாதான்..ஓப்பன் ஆகும்..எத்தனை தடவை சொல்றது??

ம்ம்..அப்பாடா..இதுதான் இன்டர்நெட் எகஸ்ப்ளோரர்….இதுலதான் வெப்சைட்-ல்லாம் ஓப்பன் ஆகும். இதோ..இங்க அந்த அம்புக்குறியை வைங்க பார்க்கலாம்..

ஹையோ..இப்பதானே சொல்லிகுடுத்தேன்..எனக்குத் தெரியாது..நீங்களே பண்ணுங்க..

சரி..இதான் கடைசி..இனிமே மவுசை எப்படி நகர்த்தனும்னு சொல்ல மாட்டேன்!! – கோபம் வருகிறது எனக்கு!

ம்ம்..இதுல..டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் யாஹு டாட் காம் ன்னு டைப் பண்ணுங்க..ம்ம்..
(இவ்ளோ மெதுவா அடிச்சா அவ்ளோதான்..)

ஐயோ..அது கமா..டாட் போடனும்..ம்..அதான்!!

சரி..உங்க ஐடி என்ன..சொல்லுங்க..ம்ம்..அதை யூசர் ஐடி ன்னு இருக்கு இல்ல..அங்க டைப் பண்ணுங்க..

ம்ம்..ஓக்கே..பாஸ்வேர்டு டைப் பண்ணுங்க..சொல்லாதீங்க..பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்லக்கூடாது..

ம்ம்….ஹப்பா..என்டர் அழுத்துங்க..ஓக்கே..

உங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்கரதுக்குள்ள..அவ்ளோதான்…

– என் பெரிம்மாவுக்கு சமீபத்தில் கம்ப்யூட்டர் இயக்கக் கற்றுக்கொடுத்தபோது நடந்தது இது.

23 வருடங்களுக்கு முன் அந்த கைகள் எனக்கு அ..ஆ எழுதக் கற்றுக் கொடுத்தன..ஆனால் .அன்போடும்..
பொறுமையோடும் எத்தனையோ முறைகள் நான் தவறாய் எழுதியபோதும்!!

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்!!

Advertisements

Add a comment ஜூலை 30, 2007

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூலை 2007
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   அக் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Posts by Month

Posts by Category