மார்ச் 2007 க்கான தொகுப்பு
நான் ரசித்த சில காட்சிகள் – பருத்திவீரனிலிருந்து!!

திரைப்படங்களுக்குரிய எவ்வித பிரம்மாண்டங்களும் இல்லாமல் இயல்பாக நகரும் கதை, அதைவிட இயல்பான நடிப்பு மற்றும் பாத்திர தேர்வு, மனதை கவரும் இசை என எல்லாவித்திலும் என்னை ரசிக்க வைத்த படம். மிகவும் ரசித்த சில காட்சிகளை பதிந்துவைக்க நினைத்தேன்!!

இதோ..

திருவிழாவில் குஸ்தி வாத்தியாரை குத்திவிட்டதற்காக பருத்திவீரனையும், செவ்வாழையையும் ஜெயிலில் வத்திருப்பார்கள்.பருத்திவீரன் ஜெயிலில் கம்பி வழியாக கையைவிட்டு தேடி, ஒளித்துவத்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுப்பான்.
ஜெயில் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடமென காட்ட அந்த ஒரு காட்சி போதும்.

பருத்திவீரனை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் முத்தழகை அவள் தாய் திட்டிக்கொண்டிருப்பாள். அப்போது, பொன்வண்ணனும் வருவார். “ஏன் சத்தம் போடற ?” என்றதும், “வீட்டுல ஒரு வேலயும் செய்யமாட்டேங்குது, சொன்ன பேச்சையும் கேக்கமாட்டேங்குது..துணி துவைக்கரதிலேருந்து தண்ணீ எடுக்கற வரக்கும் நானே செய்ய
வேண்டியிருக்குது” என்று மகளை தந்தையிடம் மறைக்கும் காட்சி!!

போலீஸ்காரனை கட்டிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் செவ்வாழை,
போலீஸின் டி.வி.ஸ் 50 யில் மேலும் கீழும் ரவுண்ட் வரும் குட்டிசாக்கு!

பச்சைக் குத்திகொண்டு, முத்தழகுவிடம் காட்டும்போது, “சாஞ்சிக்கலாமில்ல” என்று சொல்லும்
காட்சி !!

இவையெல்லாவற்றையும்விட, பின்னனி இசை…

அதுவும் மனதையுருக்கும் இந்த மெல்லிய இசை..

அடுத்ததாக, பருத்திவீரனின் ‘நாசூக்கான’ குரலில்..

படம் பார்த்து இரண்டு நாட்களான பின்னும், முத்தழகையும் வீரனையும்,பருத்தியூரையும் விட்டு வெளியே வரமுடியாதபடி செய்துவிட்டது.

(உண்மைக்கதை என்று அமீரின் பேட்டியில் படித்த ஞாபகம். ஆனால் அந்த க்ளைமாக்ஸ் மட்டும்
உண்மையாயிருக்கக் கூடாது என்று அடித்துக்கொள்கிறது மனம். )

Advertisements

Add a comment மார்ச் 28, 2007

நினைவுகள் : கும்பிட போன தெய்வம்…

தெருவில் நிற்கும் கழுதைகளை பார்த்து கொண்டு திண்ணையில் நிற்பதாலோ, அல்லது தெருமுனையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை வேடிக்கை பார்ப்பதாலோ, இல்லை….கடைக்கு செல்லும் போது காக்கைகளை எண்ணி கொண்டு நடந்து வருவதலோ என்னவோ, நான் என் பாட்டியிடம் “பேக்கு மாதிரி இருக்காதே” என்ற அறிவுரையை கேட்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். நான் என்னதான் சமத்தாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலும் “பேக்கு” என்ற பெயரே அந்நாட்களில் எனக்கு மிஞ்சியது….! (இப்பமட்டும் என்ன..என்று முகில் கேட்பது காதில் விழுகிறது.ம்ம்ம்!!)

புத்தகத்தில் சுவரொட்டி என்ற வார்த்தையை புதிதாக படித்துவிட்டிருந்தேன்.அது ஏன் சுவரொட்டி என்ற பெயர் வந்தது என்று நாங்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.. அது சுவரில் ஒட்டபடுவதாலும், கழுதைகள் சாப்பிடும் “ரொட்டி” என்பதாலும், அதற்கு அந்த பெயர் என்று
நான் விளக்கியிருக்கிறேன். அதாவது “சுவ”ரில் ஒட்டப்படும் “ரொட்டி”!!

நான் படித்த பள்ளியில் ஒரு வினோதமான பழக்கம் மாணவர்களிடையே இருந்தது.(இதை மெயினாக சீனியர் பசங்கள்தான் செய்வார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.) அதாவது, பிறந்த நாளன்று புது உடை அணிந்து வரும் பிள்ளையின் உடையில் பபிள்கம் ஒட்டிவிடுவது.
அதிலிருந்து எப்படி தப்புவது என்றே, அன்றைய நாள் கழிந்துவிடும்.
அதலிருந்து என்னால் மட்டும் தப்ப முடியுமா என்ன?

இதெல்லாம்விட, மறதி என்னும் கலையில் அற்புதமாக நான் தேர்ச்சி பெற்றுவிட்டிருந்தேன்.
இந்த ஆற்றல் என்னிடம் அளவிட முடியாததாய் இருப்பது ஒரு கூடுதல் நட்சத்திர அந்தஸ்து!! இவை எல்லாம் சேர்ந்து “பேக்கு” என்ற பட்டத்தை தக்கவைத்தது என் பாட்டியின் கூற்றை உறுதி செய்யும் விதமாக!!
இதற்கேற்றாற்போல், மற்றொரு நிகழ்ச்சி!!

அது ஒரு திங்கட்கிழ்மை காலை…
பச்சை நிற சீருடை அணிந்து முதுகில் புத்தகமூட்டையை சுமந்தவாறு சென்று கொண்டிருந்தேன்.
பள்ளியின் அருகில் செல்லும்போதுதான் கவனித்தேன்…என்ன..எல்லாரும் கையில் புத்தகம் இல்லாமல் வருகிறார்கள்!! ஸ்போர்ட்ஸ் டே கூட கிடையாதே – யோசித்தவாறே நான்!

சீனியர் பெண்கள் கையில் பரீட்சை அட்டை…

ரைட்டிங் பேட் எடுத்துட்டு வரலயா நீ? -சீனியர் அக்காக்கள் என்னிடம்!

அதில் ஒருவர் இன்னொருவருடைய பேனாவில் இங்க் ஊற்றிக்கொண்டிருந்தார். (இங்க் பேனா 5வது வகுப்புக்கு மட்டும்தான்..நாங்கள் பென்சிலில் மட்டுமே எழுத வேண்டும்!!) சரி..அதை விடுங்கள்!

ஏன் ரைட்டிங் பேட்? – நான்.

“உங்களுக்கு எக்ஸாம் இல்லயா” – என அவர்கள் வினவ, ஐயையோ..இனனைக்கு எக்ஸாமா..?சுத்தமா மற்ந்து போச்சே -மனதிற்குள் நான்!! எக்ஸாம் என்றைக்கு என்றே தெரியாத நான்
எப்படி படித்திருக்க்போகிறேன்?!!

திக்..திக் என்று மனது அடித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி முகப்பை நெருங்குகையில் அங்கே ஒரு சிறுகூட்டம்!!

அருகே சென்று பார்த்தால். ஒரு பெரிய கரும்பலகையில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது.
அது என்னவெனில், எங்கள் பள்ளிக்கட்டடத்தின் உரிமையாளர் வானுலகப்பதவி அடைந்துவிட்டாரென! அதனால் பள்ளி ஒரு வாரம் விடுமுறை. அப்புறம் என்ன..பரிட்சை கிடையாது!! இப்படியாக, கடவுள், என்க்கு அருள் (!)புரிந்து காத்துக்கொண்டார்(!!).
ஆனால், நான் பல்கலைகழகத்தில் மூன்றாவது ரேங்க் எடுப்பேனென்றோ..உயர்நிலை பள்ளியில் முதலாவது தேர்ச்சி பெறுவேனென்றோ சொல்லியிருந்தால் என் பாட்டியென்ன..நானே நம்பியிருக்க மாட்டேன்!!

Add a comment மார்ச் 26, 2007

எட்டாவது அதிசயம் !!!

வாகனங்களுக்கு சக்கரம் இருக்கும்..பார்த்திருக்கோம்!
டூவீலர்..த்ரீவீலர்..ஃபோர்வீலர்..

நாம உட்கார்ற சேருக்குக் கூட வீல் இருக்கு..பார்த்திருக்கோம்.

ஆனா,

வீல் இருக்கற மரத்தை யாராவது பார்த்துருக்கீங்களா????

கீழே இருக்கு பாருங்க!!
.
.

Add a comment மார்ச் 22, 2007

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மார்ச் 2007
தி செ பு விய வெ ஞா
« ஜன   ஜூலை »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category