ஜனவரி 2007 க்கான தொகுப்பு
பதிவர்கள் : ஒரு ஜாலி கற்பனை

“யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல.தவறாக நினைக்க வேண்டாம்! “

நம்ம பதிவர்கள் எல்லாரும் சின்ன வயசுல ஒரே ஸ்கூல்ல படிச்சா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!

(மாணவர்கள் : அரைபிளேடு, தேவ்,கவிதா,பொன்ஸ்,ரவி,லக்கிலுக்,,இளா,சுதர்சன் கோபால்.மற்றும் பலர்!!)

கிளாஸ் ரூம்

டீச்சர் : பசங்களா, லீவ் முடிஞ்சு இப்பதான் புது வருஷத்தில வந்திருக்கோம். எல்லாரும் புது ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா?
வெரி குட்! வரிசையா கிளாசுக்கு போங்க!

டிங்..

முதல் வகுப்பு ஆரம்பிக்கிறது!

அட்டெண்டென்ஸ் எடுக்கிறார்.

அரைபிளேடு – இந்தாமே..இங்கதான் கீறேன்!
தேவ் – உள்ளேன் மேடம்!
இளா – இருக்கேன் அம்மா!
கவிதா – உள்ளேன் அம்மா!
லக்கிலுக் – இதோ இருக்கேன் அம்மா!
பொன்ஸ் – இருக்கிறேன் அம்மா!
ரவி – எண்ட்ரி டீச்சர்!
சுதர்சன் – வந்துட்டேன் டீச்சர்!

புத்தகம் கொண்டு வந்திருக்கீங்களா எல்லாரும்?
டீச்சர் – கவிதா ஏன்மா உன் கண் சிவந்து இருக்கு? டல்லா இருக்கே?

கவிதா – டீச்சர், நான் வேன்ல வரும்போது ஒரு பையன் என்னையும் என் ப்ரெண்டயும் இடிச்சிட்டான் டீச்சர்!
ஏண்டா இடிச்சன்னு அவனை கேட்டதுக்கு, இந்த அரைபிளேடு என்னை முறைக்கிறான் டீச்சர்.
அப்புறம் அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க.அவங்களை சமாளிச்சி
திரும்பி பார்க்குறதுக்குள்ள அதுக்குள்ள இடிச்சவன் ஓடிட்டான்.

டீச்சர் : அரைபிளேடு..

அரைபிளேடு : டீச்சர்..நான் அப்டி பண்ணல டீச்சரு..வேன்ல வந்துகினு இருக்கும்போது, இவங்கதான் டீச்சரு என்னை இடிச்சாங்க!
வேன் நிக்கும்போது எனக்கு கிச்சு கிச்சு மூட்டினாங்க!
நீங்க, அண்னா தம்பி கூட பொறக்கலியான்னு கேட்டதுக்கு சண்டைக்கு வராங்கோ டீச்சரு! நான் ஆம்பளைக்குங்களுக்கு
சப்போர்ட் பண்றதனால, அவங்களும் எனக்கு சப்போர்ட் பண்றாங்கோ!

ஆண் மாணவர்கள் : ஆமா..ஆமா! அரைபிளேடு சொல்றதுதான் சரி..ஆமா..ஆமா!

டீச்சர் : அமைதி..அமைதி! சரி..நான் பாடத்தை முடிச்சிட்டு விசாரிக்கறேன். புத்தகத்தை எடுங்க எல்லாரும்!
பொன்ஸ்..நீ என்னம்மா புத்தகம் கையிலே வச்சிருக்கே?

பொன்ஸ் : இது கோகுலம் டீச்சர்.

டீச்சர் : ஓ..அப்படியா..? உன் யானை படம் போட்ட ட்ரெஸ் நல்லா இருக்கு! அந்த புத்தகத்தில என்ன இருக்கு?

பொன்ஸ் : என் கவிதை, கதை இருக்கு டீச்சர்!

டீச்சர் : எங்க படி!!

பொன்ஸ் : தமிழ்மணமாம் தமிழ்மணம்..
இன்டர்நெட்டில் தமிழ்மணம்..
தமிழோவியதில் தினம்வரும்
தேன்கூட்டில் வலம்வரும்..

டீச்சர் : நல்லா இருக்கே..மாரல் வகுப்புல உன் கதகளை படிச்சி காட்டு!

பொன்ஸ் : சரி டீச்சர்..

டீச்சர் : தேவ்..அங்க என்ன தாள் கயிலே வச்சிருக்கே?

தேவ் : டீச்சர்..இது..

டீச்சர் : இதெல்லாமா பார்குறது? அசிங்கமான படமா இருக்கே! உனக்கு எப்படி கிடைச்சது இது?

தேவ் : டீச்சர்..பொண்ணுங்கதான் டீச்சர்…இப்படி..

இளா : டீச்சர்..அது நாந்தான் வச்சிருந்தேன். வன் என்கிட்ட இருந்து திருடிட்டான் டீச்சர். டேய்..குடுறா…

தேவ் :டீச்சர் : பாருங்க ..என்கிட்ட இருந்து பிடுங்கறான்..நான் தரமாட்டேன் போ!

டீச்சர் :அமைதி..அமைதி..
இந்தியநாடு ஒரு பழைமை வாய்ந்த நாடு..
ரவி..அங்க என்ன சத்தம்..செல்போன்லாம் எடுத்துவ்ரக்கூடதுன்னு தெரியும் இல்ல.

செந்தழல் : இல்ல..டீச்சர்..லக்கிக்கு குடுத்தேன் டீச்சர்! அப்புறம், பக்கத்து பள்ளிகூடத்தில உங்களுக்கு
ஒரு வேலை காலி இருக்கு டீச்சர். வேணும்னா சொல்லுங்க டீச்சர்..பிரின்ஸிபால் முகவரி தரேன்.
நம்ம ஒண்ணாங்கிளாஸ் கொத்தவரங்கா அங்க மூணவது படிக்கிறா டீச்சர். இன்னும் நிறையபேர்
இங்கேருந்து அங்க போகபோறாங்க டீச்சர்!

டீச்சர் : வேணாம் ரவி….நீ நல்ல வேலைதான் பண்றே..ஆனா, நம்ம கிளாஸ் அப்படியே இருக்கட்டும். புக்கை ஓப்பன் பண்ணு!
இந்தியாவில் பல கலாச்சாரங்கள் உள்ளன..லக்கிலுக்..என்ன பக்கத்து கிளாஸிலே எட்டி பார்த்துகிட்டிருக்கே?
பாடத்தை கவனிப்பா..

லக்கி : இல்ல டீச்சர்..நேத்து..அந்த பக்கத்து கிளாஸ் டீச்சர் ASL கேட்டேன். ஆனா, அவங்க என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க..பியூன்
அவங்க ரெக்கார்ட் பார்த்து எனக்கு சொல்லிட்டான் டீச்சர்.

டீச்சர் : இப்படீல்லாம் பண்ண கூடாது..லக்கி..சிஸ்டர்கிட்ட இப்போதானே அடிவாங்கி கட்டு பிரிச்சிருக்கு உனக்கு?
இந்தியாவில் பல இனமக்கள் வாழ்கின்றனர். சுத்ர்சன்..என்ன நோட் பாஸ் பண்ணிக்கிடிருக்கே..?

சுட்ஜி : டீச்சர்..அது வந்து..வந்து..நேத்து கேட்ட பாட்ட முதல் வரி மறந்துட்டேன்..அதான் நடு வரி எழுதி பாஸ் பண்ணேன்..
முதல்வரிய மத்தவங்க எழுதிக்கொடுக்கறாங்க!!

டிங்..

டீச்சர் : அப்பப்பா..உங்களை மேய்க்கற்துக்குள்ள வகுப்பே முடிஞ்சிடுது..ம்ம்!!

Advertisements

Add a comment ஜனவரி 5, 2007

சண்டகோழி

காலை மணி 7.30.

“என் கருப்பு பேண்ட் எங்க இருக்கு?” – காலை அவசரத்தில் அவன்!

“உங்க ஷெல்பிலயே பாருங்க!” – இது அவள்!

“ப்ச்..இன்னைக்கும் லேட்டா? ட்ரெயினிங் இருக்கு, சீக்கிரம் போகனும்னு சொன்னேனே!
வந்து கொஞ்சம் தேடிக் குடுத்தா என்ன?” – அவன்.

“நான் என்ன இங்க சும்மாவா இருக்கேன்? தேடி எடுங்க..ராத்திரியே எடுத்து வச்சிகிட்டா என்ன?” – அவள் மறுபடியும்!

“ச்சே!! இது கூட பண்ணாம என்ன வேலை உனக்கு? ஒண்ணுமே ஒழுங்கு இல்ல இந்த வீட்டில!” – அவன்.

“நான் மட்டுமா இருக்கேன் இந்த வீட்டுல..நீங்களுந்தான் இருக்கீங்க! எப்பவும் என்னை ஏதாவது சொல்லனும் உங்களுக்கு!” – அவள்.

மணி – 8.00

“காலையில இவ்ளோ சத்தமா பாட்டு வைக்க வேணாம்னு எத்தனை தடவை சொல்றேன்?” – அவள்.

“சரி..கத்தாதே! பாட்டு கேட்டாக்கூட தப்பா உனக்கு. இதுக்கும் சுதந்திரம் இல்லாம போய்டுச்சு!
இதோ நிறுத்திடறேன்!! ” – எரிச்சலுடன் அவன்!

“நான் ஒண்ணும் நிறுத்த சொல்லல..கொஞ்சம் சத்தம் கம்மியா வைக்கலாம் இல்ல!” – அவள்

“ஒண்ணும் தேவையில்ல..நான் கிளம்பறேன்!!” – வாசலில் அவன்!

“சாப்பாடு வேணாமா? ” – அவள்!

“வேணாம், டைமாயிடுச்சு! இந்த வீட்டுல நிம்மதியாவே இருக்க முடியல!!” – பைக் உறுமியது!

காலையிலிருந்து நடந்த சண்டைகள் அவர்களுக்குள்! இதற்குப்பின் ஒரு நாள் முழுதும் பேச்சு வார்த்தை இருக்காது அல்லது ஒற்றை வார்த்தையில் பதில்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை இயல்புக்கு திரும்பும். பெரும்பாலும், அவசரங்களும், எதிர்பார்ப்புகளுமே காரணம்!!

“ஹேய்! என்ன அழுமூஞ்சி சீரியல பார்த்துகிட்டிருக்கியா!! காபி குடு!!” – வீடு திரும்பியவன் உற்சாகமாய் பேச முற்பட்டான்.

“என்ன..பேச மாட்டேங்கற..காலையில இருந்த கோவம் இன்னும் போகலியா?” – செல்லமாய் சீண்டினான்.

இதற்கும் மௌனமே பதில் அவளிடமிருந்து!

“சரி, மன்னிச்சுடு! இனிமே சண்டை போடல..காலையில அவசரத்தில டென்ஷனாயிட்டேன்!” – அவனே பேச தொடங்கினான்.

“ம்ம்..அதுக்காக ஏன் சாப்பிடாம போகனும்? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு!!” – அவள்.

“ம்ம்..இன்னைக்கு எங்க மேனேஜ்மெண்ட் ட்ரெயினிங்ல ஒரு மேட்டர் சொன்னாங்க..அதாவது, நமக்கு நெருக்கமாயிருக்க யார்கிட்டயாவது கருத்து வேறுபாடு,சண்டை இருந்ததுன்னா, அதை தீர்க்க இந்த மாதிரி செய்யலாம்ன்னு” – அவன்

“எந்த மாதிரி? ” – அவள்

“இரு, வரேன்!” – என்றபடி இரு தாள்கள் மற்றும் பேனாக்களோடு வந்தான்.

“இந்தா” – அவளிடம் ஒரு தாள் மற்றும் பேனாவை நீட்டினான்.

“ம்ம்” – பெற்றுக்கொண்டாள்.

“இதுல என்கிட்ட பிடிக்காத விஷயம் எதுன்னு நீ நினைக்கிறீயோ அதை ஒன்னு, ரெண்டுன்னு நெம்பர் போட்டு எழுது. உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயத்தையெல்லாம் நான் எழுதறேன். அப்புறம் மாத்திக்கலாம்.கொஞ்சம் கொஞ்ச்மா நம்மை மாத்திக்க முயற்சி பண்ணலாம். சரியா? ” – அவன்.

“சரி!!” – பேனாவை உருட்டிக்கொண்டே அவள்.

“ஏய்..எழுது?” – சொல்லிவிட்டு அவன் நிமிராமல் எழுத் தொடங்கினான்.

“எட்டி பார்க்காதே..ம்ஹூம்..!!” – திரும்பவும் அவன்.

அவளும் ஏதோ கிறுக்கினாள் சிறிதுநேரம். பின் தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தண்ணீர் குடித்தாள்.

“எழுதிட்டியா. இரு..நானும் முடிச்சிட்டேன்” – என்றபடி நிமிர்ந்தான்.

“குடு..மாத்திக்கலாம்” – என்றபடி தாள்களை மாற்றிக்கொண்டனர்.

அவள் எந்த உணச்சியும் முகத்தில் காட்டாமல் வாங்கிகொண்டாள்.

அவன் தாளில்,

1. எப்பவோ நான் கோவத்தில சொன்ன வார்த்தையெல்லாம் ஒவ்வொரு தடவை சண்டை போடும் போதும் சொல்லிக்காட்ட கூடாது.

2. ராத்திரி சண்டை போட்டா அதை காலையில மறந்துடனும். நான் வேலைக்கு போகும்போது உர்ருன்னு இருக்க கூடாது.

3. எந்த கலர்ல் நீ கல்யாணநாள் அன்னைக்கு ட்ரெஸ் போட்டிருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லன்னு சண்டை போடக்கூடாது!!

என பத்து வரை எழுதி இருந்தான்.

அவன் கையில் இருந்த தாளில்,

1.ஐ லவ் யூ
2.ஐ லவ் யூ
3.ஐ லவ் யூ
4.ஐ லவ் யூ
5.ஐ லவ் யூ
6.ஐ லவ் யூ
7.ஐ லவ் யூ
8.ஐ லவ் யூ
9.ஐ லவ் யூ
10.ஐ லவ் யூ

என்று இருந்தது.

“ஏய்..அதை படிக்காதே ப்ளீஸ்!!” – கத்திக்கொண்டே அதை பிடுங்க பாய்ந்தான் அவன்!

“முடியாது நான் படிச்சிட்டுதான் தருவேன்” – அவள்.

இன்னொரு சண்டைக்கான ஆரம்பம் தொடங்கியிருந்தது அங்கே!

Add a comment ஜனவரி 3, 2007

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2007
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   மார்ச் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category