திசெம்பர் 2006 க்கான தொகுப்பு
பெண்களால் உலகை கட்டுப்படுத்த முடியுமென்றால்..


Advertisements

Add a comment திசெம்பர் 28, 2006

கனவே கலையாதே….

கனவு சொல்றதுங்கறது ஒரு கலை. அதை பொறுமையா கேக்கறதுங்கறதும் ஒரு கலை, ஏனோ அது நிறைய பேருக்கு கைவர மாட்டேங்குது! தான் கண்ட கனவை சொல்றதுல இருக்கற ஆர்வம், கேக்கறதுல இல்ல!

கனவுன்னா அப்துல் கலாம் சொல்றாரே அந்த கனவு இல்லீங்க..நாம தூங்கும்போது வருமே அது!

என் தோழி ஒருத்தி பாவம்..அவளுக்கு நிறைய கனவு வரும். ஆனா, அதை கேக்கறதுக்குதான் யாருமே இருக்கறதில்ல! காலேஜ் நாள்ல இருந்தே அவளுக்கு இது ஒரு பழக்கம். கனவை கண்ட உடனே அதாவது காலையிலேயே சொல்லிடனும் சுடச்சுட. அதுவும் பரீட்சை சமயத்தில எல்லை மீறி போய்டும். திடு திப்புனு எழுந்து உக்காந்துப்பா! என்னன்னு பார்த்தா, கனவாம். வேற வழி இல்லாம் நாங்களும் அந்த நேரத்தில அதை கேட்டுட்டு…எங்க தூங்கறது!!அவளோட மனக்குறைய போக்கத்தான் இந்த பதிவு!

என்ன கனவுன்னா பரீட்சைக்கு இவ கிளம்பி வரா. அதுவும் நேரம் வேற ஆகிடுது. இவளும் வேக வேகமா வந்து சேர்ந்துடுடறா! பார்த்தா, பெல் அடிச்சு, கேள்வித்தாள் கொடுத்துடறாங்க! அது மட்டும் இல்லாம, ஒரு மணி நேரம் லேட். அப்படியே வியர்த்து விறுவிறுத்து போய் நிக்கறா. அந்த நேரத்தில இவ முழிச்சுக்கறா!இதுதான் கனவு! இந்த கனவு ரொம்ப கடினமான பேப்பர் அன்னைக்குத்தான் வரும். என்ன கேக்க வரீங்க..இது எப்படி எங்களுக்கு தெரியும்ன்னா..ஏன்னா, இதே கனவு எல்லா செமஸ்ட்ருக்கும் எல்லா கடினமான் பேப்பருக்கும் வரும்! (ம்ம்..எல்லா பேப்பருமே கடினமான பேப்பர்தான்..அது தனி விஷயம்!!)

வேற வழி..நாங்க எல்லாரும் அதே கனவை எல்லா செமஸ்டருக்கும் கேக்க வேண்டி வரும்!இதுக்கூட பரவாயில்ல..இன்னொரு விஷயம் என்னன்னா, நிஜ வாழ்க்கையில் அவளுக்கு ஒரு பழக்கம்.அதாவது, அவ எதிர்பாராதது ஏதாவது நடந்துச்சுன்னா, அது கனவா இருக்க கூடாதான்னு நினைச்சிப்பாளாம்.அதே மாதிரி, கனவுலயும் நினைச்சுப்பாளாம்.இது எப்படி இருக்கு?

அந்தளவுக்கு கனவோட ஒன்றி போய்டறது…அதாவது பரவாயில்ல..அவ விளையாடற மாதிரி கனவு கண்டா, ஃபுட்பால் யாருன்னு நினைக்கறீங்க பக்கத்துல படுத்திருக்கறவங்கதான்! ஒருதடவை, டமால்ன்னு ஒரு சத்தம் , பார்த்தா கட்டில்ல இருந்து கீழே விழுந்து கிடக்கறா என்னன்னு கேட்டா, மலையில இருந்து ஓடி வந்து பள்ளத்துல விழற மாதிரி கனவாம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சொல்லுவாங்க இல்லையா!இதே பழக்கம் இப்பவும் தொடருது.இப்பவும்ன்னா கல்யாணத்துக்கு அப்புறமும்! இப்ப அம்மணிக்கு என்ன கவலைன்னா அவளோட கணவர் இவ சொல்லுற கனவையெல்லாம் ரசித்துக் கேக்கறதில்லையாம். .

ஏங்க, நான் பச்சைகலர் புடவை கட்டிக்கிட்டு போறேண்..காடு மாதிரி இருக்குது அந்த இடம். ஆனா அங்க ஒரு ஏரோப்பிளேன் மாதிரி ஒன்னு வருது.நான் அதுகிட்ட போய் என்னன்னு பார்க்கறேன். திடீருன்னு ஒரு சத்தம்.. இப்படின்னு அவ சொல்லறத கேக்க பொறுமை இல்லயாம்.

“ஏங்க, நேத்து எனக்கு வந்த கனவுல” ன்னு ஆரம்பிச்ச உடனே “இதோ..குளிச்சிட்டு வரேம்மா”ன்னு கிளம்பிடறாராம்.

அதனால, என்ன பக்க விளைவுன்னா, எனக்கு போன் பண்ணிடறாங்க மேடம். வேறேன்ன..நான்தான் கேக்க வேண்டியிருக்கு!

ம்ம்..நானுந்தான் எத்தனை நாள் பொறுமையா இருக்கறது!!
அதனால, ஒரு ஐடியாவை சொன்னேன்.அது இப்போ சரியா ஒர்க்-அவுட் ஆகிடுச்சாம்.. இப்போல்லாம், அவ வீட்டுக்காரர் ஒரு கனவு விடறதில்லையாம்!!

சாம்பிளுக்கு சில..

“நான் வேகமா சைக்கிள் ஓட்டிக்கிட்டு போறேன். அழுத்தி தான் மிதிக்கறேன். ஆனா, போன மாதிரியே தெரியல..அப்போ பார்த்தா நீங்க வந்துடறீங்க! என்னை பார்த்துட்டு சைக்கிள் சாவியோட பூட்டை திறக்கறீங்க..என்ன ஆச்சரியம்..சைக்கிள் ஓடுது! நான் போய்கிட்டே இருக்கும் போது பார்த்தா, ஒரு போலீஸ்காரர் வரார். என்கிட்ட வந்து, “லைசன்ஸ் இருக்கா”ன்னு கேக்கறார். நான் இல்லன்னு சொல்றேன். அப்போ நீங்க வந்துடறீங்க…அப்புறம்..

“ம்ம்..சொல்லு. நான் வந்து என்ன பண்றேன்?”

“இருங்க..மறந்துட்டேன்..ம்ம்.”

“நல்லா யோசிம்மா! என்ன பண்றேன்?”

அடுத்த நாள்,

“நான் பிளேன்ல போய்கிட்டிருக்கேன். கீழே பார்த்துகிட்டே வரேன். மெட்றாஸ் மாதிரி இருக்கு. அட, நம்ம வீடு தெரியுதான்னு எட்டி பார்க்கறேன். நீங்க நிக்கறீங்க.”

“ம்ம்..என்ன பண்றேன்..? நான் உன்னோட பிளேன்ல வரலியா?”

“ம்ம்..எனக்கு றெக்கை முளைக்கற மாதிரி இருக்கு. என் கைய பார்த்துக்கறேன்..”

“சொல்லு? வேற என்ன பண்றேன்?”

“கைய ஆட்டறீங்க..! ஏதோ சொல்ற மாதிரி இருக்கு!
அப்புறம், காலையும் பார்த்துக்கறேன்”

“என்ன சொன்னேன் நான்?”

மற்றொரு நாள்,

“மாடியில மொளகா காய வச்சிக்கிட்டிருக்கேன். அப்போ ஒரு காக்கா வந்து மொளகா கேக்குது! நான் ஆச்சரியமா பார்க்கறேன். கையில இருந்த மொளகாய கொடுக்க நினைக்கிறேன். உங்க குரல் கேட்குது!! “

“நானும் வரேனா?..”

கட்..கட்..கட்!!

இப்ப உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமே..நான் என்ன ஐடியா கொடுத்திருப்பேன்னு!

எதிர்ல இருக்கறவங்களயும் கனவுவில சேர்த்துகிட்டா
அவங்களும் சுவாரசியமா கேப்பாங்க! சொல்லறது என்னமோ கனவுதானே!!

Add a comment திசெம்பர் 27, 2006

கொல்" லுனு ஒரு காதல் – பாகம் 3

கொல்” லுனு ஒரு காதல் – பாகம் 1
கொல்” லுனு ஒரு காதல் – பாகம் 2

அது என்னன்னா…அந்த் ஜக்கம்மாவோட ஒரு நாள் கௌத்தமை எப்படியாவது மீட் செய்ய வைக்கிறது! உடனே, ஆர்குட்-ல போய் ஜக்கம்மாவை தேடறா.
பார்த்தா ஜக்கம்மா டுமீல்குப்பம்-ல வடை சுட்டு விக்கறா.
ஓவர் டூ குந்தவை.

குந்தவை : ஜக்கம்மா, நான் கௌத்தமோட மனைவி.
ஜக்கு : அது ஓன் தலையெழுத்து. வந்துட்ட..சொல்றதுக்கு!
குந்தவை : அப்படி சொல்லாதீங்க!
ஜக்கு : சரி, எருமை!
குந்தவை :வந்து
ஜக்கு: அப்போ கய்தே!!

சரி விடுங்க! நான் எதுக்கு உனங்களை பார்க்க வந்தேன்னா, கௌத்தமுக்கு ஒரு ஆசை!உங்க கூட ஒரே ஒரு நாள் அதே காண்டீன் – ல வடையும், டீயும் சாப்பிடனும்னு! ஏமாத்திடாதீங்க..ப்ளீஸ்!

சரி..வரேன். ஆனா ஒரு கண்டிஷன்!என்னன்னா, பில்லுக்கு நான் காசு குடுக்க மாட்டேன்.

கௌத்தம் வீடு!அழைப்பு மணி அடிக்கிறது. கதவை திறந்த கௌத்தம், அதிர்ச்சியில் !

ஐயயோ! இவ வந்துட்டாளா! பழைய பாக்கி 500யை கேப்பாளோ..கடங்காரி!!
அப்போ குந்தவை “கௌத்தம், நாந்தான் இவங்களை வர சொன்னேன். உன் டைரிய படிச்சு பார்த்தேன்.நீங்க உங்க இஷ்டபடி, வடை சாப்பிடுங்க! ஆனா, எனக்கு மீதி வைங்க!” ன்னு சொல்லிட்டு, ஸ்லோமோஷன்ல ஓடி போய்டறா!

ஜக்கு “என்னா கௌத்தம், இவ்ளோ டீசண்டா மாறீட்ட!சரி. வா நம்ம காலேஜுக்கு போய் அதே காண்டீந்ல வடை, சுடுதண்ணி ச்சீ..டீ சாபிடலாம்.நீ பாதி..நான் பாதி..இன்னா!!” னு சொல்றா!

ரெண்டு பேரும்,ஊசி போன வடைய பிச்சி பிச்சி, நூல் எடுத்து காத்தாடி விடுறாங்க!கொக்கு பற..பற..கொழி பற..பற!! ட்ண்ட்ண்டடாய்ங்!!

அப்படியே குந்தவைக்கு ஷாக்கடிச்ச மாதிரி இருந்தது!…இதுமாதிரில்லாம் நடந்துச்சின்னா!ஃபாஸ்ட் ஃபார்வார்டுல ஓடி வர்றா!

அங்க கௌத்தம், பொறுப்பா எல்லா பாட்டில்லயும் தண்ணி ஊத்தி ஃப்ரிட்ஜ்-ல வைக்கிறான்.

ஜக்கம்மா எங்க?
அவ போய்ட்டா! உனக்கு ஒரு ஆர்குட்-ல ஒரு ஸ்க்ராப் எழுதி வச்சிருக்கா!

ஓடி போய் அத படிக்கிறா குந்தவை!

அதுல,

நான் போறேன்! அவனுக்கு நான் சுடற வடைய விட நீ சுடற வடைதான் பிடிக்குது!அதனால, ஒரு வடைதான் நானும் அவனும் சாப்பிட்டோம்.
இனிமே உன் வடைல சாரி வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்!
ஜக்கு!

இத படிச்சுட்டு, குந்தவை பெருமூச்சு விடறா!”அப்பாடி, நான் ஃப்ரிஜ்-ல வச்சிருந்த வடைமாவு அப்படியேதான் இருக்கு!எங்க, அதை எடுத்து காலி பண்ணிடுவீங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்!”ன்னு மனசுகுள்ள நினைச்சுக்கிட்டு, கௌத்தமை பார்த்து சிரிக்கறா!!
================================================

Add a comment திசெம்பர் 23, 2006

புஸ்வாணி ஹேர் ஆயில்

இப்போ எல்லாரும் “கொல்”லுனு ஒரு காதல் பார்த்துகிட்டிருக்கீங்க! இப்ப இடைவேளை! சின்ன விளம்பரம்..(இதுக்கும் அஸ்வினி ஹேர் ஆயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!!)

நான் கடந்த ஆறு வாரங்களா புஸ்வாணி ஹேர் ஆயில் தான் யூஸ் பண்றேன். அதுனால இப்ப எனக்கு முடி கொட்டற பிரச்சினை இல்ல. ஏன்னா, எல்லா முடியும் முதல் வாரத்திலயே கொட்டிடுச்சு. இப்ப சுத்தமா தலையில் முடி இல்ல! அதனால் முடி கொட்டற பிரச்சினையும் இல்ல! நான் விக் தான் வச்சிக்கிட்டு இருக்கேன். புஸ்வாணி ஹேர் ஆயிலுக்கு தேங்க்ஸ்!

‘விக்’கிராணி
மொட்டைத் தெரு,
திருச்சி- 00

Add a comment திசெம்பர் 21, 2006

கொல்" லுனு ஒரு காதல் – பாகம் 2

கொல்” லுனு ஒரு காதல் – பாகம் 1

கௌத்தம் ப்ளேன் ஏறினவுடனே வீட்டுல …
அம்மா..அம்மா..- என்னோட ஜக்கம்மா ஓடி வந்தா!
ஜக்கம்மா யாருன்னு சொல்லல இல்ல! அது எங்களோட பொண்ணு!3வது வருஷமா மூணாவது வகுப்புல ஃபெயில் ஆகிட்டு இருக்கா!

என்னடின்னு கேட்டா, அவங்க ஸ்கூல்ல ஒரு ப்ராஜக்ட் செய்ய சொல்லி இருக்காங்களாம்!

கௌத்தமுக்கு ஒரு பழக்கம், சின்ன வயசுலேர்ந்து! யார் நல்லா படிக்கறாங்களோ அவங்க நோட், ரெக்கார்ட்-ல்லாம்
திருடி வச்சிக்கறது. அது மாதிரி நிறைய டப்பா எங்க வீட்டுல இருக்கு!

“சரி..போய் நம்ம செக்யூரிட்டிய கூப்பிட்டுட்டு வா. உங்க அப்பா யாரோட அசைன்மெண்டையாவது திருடி வச்சிருப்பார். நான் தேடி தரேன்-ன்னு சொன்னேன்.
எப்படியாவது ஜக்கம்மா பாஸ் பண்ணனுமே!!

கடைசில ஒரு அட்டை பெட்டியத் தேடி கண்டுபிடிச்சோம்.அதுல பார்த்தா ஒரு ஹீல்ஸ் பிஞ்சி போன செருப்பு (ஹீல்ஸ் பிஞ்சி போற அள்வுக்கு யார்கிட்டயோ நல்லா அடி வாங்கியிருக்கான்!), கொஞ்சம் காஞ்சி போன மல்லிப் பூ, ஒரு ரிப்பன் இதுல்லாம் கிடந்தது. அதோட ஒரு டைரியும்!

அந்த டைரிய படிச்சு பார்த்தா தான் தெரியுது…கௌத்தம் ஒரு குட்டிச் சுவர்ன்னு! மாட்டினேடா..மவனே..நீ செத்த!

முதல் வருஷம்

ஃபெமினாவை பார்த்தேன். காலேஜ்ல அவ போற இடத்துகெல்லாம் நானும் போனேன். கடைசில் அவ எனக்கு கிடைக்கல. அவ தலயில வச்சிருந்த பூ தான் கிடைச்சுது!!

ஃபெமினா

நீ இல்லாம நான்
காத்து போன பலூனா!!

(கஷ்ட காலம்..இவனோட கவிதையெல்லாம் வேற நாம படிக்க வேண்டியிருக்கு!!)

இரண்டாம் வருஷம்

ஒரு ஃப்ரெஷ் ரோஜாவா எங்க காலேஜ்ல வந்து சேர்ந்தா சோனியா! இப்ப என் கண்ணு எல்லாம் அவ மேலதான்!
அவ முன்னாடி நான் ஹீரோவா தெரிய ஆசைப் பட்டேன்.
(அடப்பாவி, இப்படில்லாம் நினைக்க உனக்கு ரொம்ப தன்னம்பிக்கை வேணும்டான்னு நான் நினைச்சுகிட்டேன்!)
ப்ரோப்போஸ் பண்ணேன். அவ செருப்ப எடுத்து அடில ஹீல்ஸ் பிஞ்சிடுச்சு!

சோனியா..
நீ என் இதயத்தில்
வந்து
போனியா!!
– ன்னு ஒரு கவிதை வேற!

மூன்றாம் வருஷம்

இப்போ எனக்கு ஒரு டஜன் அரியர்ஸ் வேற சேர்ந்து போச்சு!

ஜக்கம்மா

(ஓ..உங்க பாட்டி பேருனு சொன்னியே குழந்தைக்கு பேர் வைக்கும்போது ..உன் லவ்வர் பேரா அது!! இருடா இரு!!)

இவதான் என் கனவுகன்னி! என் தேவதை. இவளைதான் நான் இப்போ லவ் பண்றேன். அவளும் என்னை! ரெண்டு பேரும் க்ளாஸுக்கே போகாம எப்பவும் கேண்டீன்ல தான் இருப்போம். நாங்க காசு கொடுக்காம சாப்பிட்டதால கடன் தொல்லை அதிகமாய்டுச்சு! அதுக்கு பயந்து நான் காலேஜ்க்கு வராம இருந்தேன். அதுக்குள்ள ‘ஜக்கு’ வேற காலேஜ்க்கு போய்ட்டா!

ஜக்கு…

ஜாங்கு ஜக்கு
ஜஜக்கு ஜக்கு…
ஜாங்கு ஜக்கு …ஜா….ஆ..ஆ!!

(அடப்பாவி தலைவர் பாட்ட சுட்டு உன் கவிதைன்னு வேற சொல்றியா!!)

இதைப் படிச்சுட்டு குந்தவைக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிடுது. தனியா போய் சுவத்தில முட்டிகிட்டு அழறா! என் கௌத்தம்க்குள்ள இப்படி ஒரு சோகமா…ன்னு நினைக்கற அவ ஒரு முடிவு செய்றா..! அது என்னன்னா…??

Add a comment திசெம்பர் 21, 2006

"கொல்" லுனு ஒரு காதல் – பாகம் 1

என் பேரு குந்தவை. எனக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்!
அவங்க பேரு நிற்பவை மற்றும் நடப்பவை. எங்க ஸ்கூல்ல படிக்கறத தவிர மீதியெல்லாம் சொல்லி கொடுப்பாங்க! வாழ்க்கைல எங்க மூணு பேரோட லட்சியமே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகறதுதான். அதுவும் திருட்டு கல்யாணம்! ஸ்கூலுக்கு போறதுகூட சைட் அடிக்கறதுக்குத்தான்! ஆனாலும் யாரும் மாட்டற மாதிரி தெரியல. ஆனா நாங்க யாரும் மனம் தளராம எல்லாரயும் மடக்க பார்த்தோம். அதுல நிற்பவையும் நடப்பவையும் பாஸ் ஆகிட்டாங்க! அவங்க ரெண்டு பேரும்
அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஃபிகர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! நான் கொஞ்சமும் மனம் தளராம +12 வை 4வது தடவையா எழுதினேன். பாஸ் மட்டும் கடைசி வரை பண்ணல! அது கதைக்கும் தேவையில்ல!!

அந்த நேரத்தில தான், இந்த கௌத்தம் மாட்டுனான். சரி, நமக்கு இந்த தகர டப்பா மூஞ்சி போதும்னு கழுத்த நீட்டுனேன்!

5 வருடங்களுக்குப் பின்

கௌத்தம் ஒரு சைக்கிள் கம்பெனியில வேல பார்க்குறான்.
அப்போ ஒரு மீட்டிங்! திடீர்னு கௌத்தம் எழுந்து பேசறான்.

“சார், நான் என்ன சொல்றேன்னா இந்த மாடல் நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஹேண்டில் இல்லாத சைக்கிள் இங்க ஓட்ட லாயக்கில்லை! அதனால.. “

“நிறுத்து..நீ எதுவும் சொல்ல வேண்டாம்! நான் என் மாடல்ல ஜன்னல் வச்ச சைக்கிள் தான் ப்ரஸ்ண்ட் பண்ணுவேன். யு கெட் லாஸ்ட்! ” – அப்படின்னு் அவங்க மேனேஜர் சொல்றார்.

கௌத்தம் வெளில வந்துடறான். அவன் மூளைய ரொம்ப கசக்கி ஒரு மாடல் கண்டுபிடிக்கறான். அதாவது, சைக்கிள்ல ஸ்டெப்னி மாட்டிக்கறது! அதுனால அவனுக்கு அமெரிக்கா போக ஒரு சான்ஸ் கிடைக்குது!

அவனும் அப்பாடா குந்தவைகிட்ட இருந்து தப்பிச்சோம்ன்னு ஓடி போய்டறான்.

Add a comment திசெம்பர் 20, 2006

தொடரும் ஆப்பு

கேஷா,கார்டா மேடம் ? – பொருட்களை எடுத்து பையில் வைத்தவாறே கேட்டார் கடைப்பணியாளர்.

அவள் பைக்குள் பர்ஸை தேடும்போது ஒரு டி.வி ரிமோட்டை பார்த்ததும்,

“மேடம்..நீங்கள் எப்போதும் டி.வி ரிமோட்டை கையோடு கொண்டு செல்வீர்களா?” என்றார்.

“இல்லை, என் கணவர் என்னொடு ஷாப்பிங் வர மறுத்தனால், என்ன செய்வது என்று யோசித்தேன். இதைக்கொண்டு வந்து விட்டேன்!!” – அவள்!

Add a comment திசெம்பர் 20, 2006

ஆப்பு – தொடர்கிறது!!

நேற்றைய மௌன போராட்டத்துக்குப் பின் அதே தம்பதியினர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை.ஒரு வார்த்தை கூட பேசாமல் காரில் இருவரும்!

வழியில், கோவேறு கழுதைகள், ஆட்டு மந்தைகள் மற்றும் பன்றிக் கூட்டத்தை கடக்க நேர்ந்தது!

“உன் உறவினர்களோ? ” – கிண்டல் தொனிக்கும் குரலில் கணவன்.

“ஆமாம், என் புகுந்த வீட்டுக்காரர்கள்” – அடுத்த நானோ செகண்டில் பதில் வந்தது!!

Add a comment திசெம்பர் 19, 2006

தூம் – 3 – முடியலப்பா..முடியல!!

எல்லாரும் சிவாஜி க்ளைமேக்ஸ்- புது ஸ்டைல் பார்த்து அசந்து போய் இருப்பிங்க!! நம்ம தூம்-3 பாருங்க!!

Add a comment திசெம்பர் 19, 2006

நெஞ்சே நெஞ்சே

சென்னை போகும் லால்பாக் ரயில் கிளம்ப இன்னும் அரை மணிநேரம் இருந்தது. ப்ரியங்கா ஒரு ஓப்பன் டிக்கட்டை கையில் வைத்து கொண்டு, குழப்பத்தோடு வந்துக் கொண்டிருக்கிறாள். மறு கையில் இருந்த ஹோல்டால் கனத்தது. மனம் அதனினும் மேலாக.

சரி, எஸ்-3 எண் கொண்ட பெட்டியில் ஏறிக்கொண்டாள். பெண் என்றால் பேயும் இரங்கும், டிடிஆர் இரங்காமலா போய் விடுவார்? அதுவும் தனியாக வரும் பெண் என்றால்
ஒரு டிக்கட் அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிடுவார் என்று மனதில் நினைத்தவாறு ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். தள்ளுவண்டியில் வந்த லேஸ் சிப்ஸ் மற்றும் வாழைப்பழத்தை வாங்கியவள், கையோடு கொண்டு வந்திருந்த வுமன்ஸ் எராவை பிரித்து படிக்க முற்பட்டாள்.
ஆனால், அவள் மனமோ இரவு நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.

செந்தில் – ப்ரியங்கா திருமணம் நடைபெற்று மூன்று மாதங்களே ஆகி இருந்தது. செந்தில் ஒரு நல்ல கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக இருந்தான். கண்ணுக்கு இனியவன். தேனிலவு முடிந்து, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது இருவருக்கும். அதுவும், செந்தில் வேலை செய்யும் பன்னாட்டு கம்பெனி வேலை பளு அதிகம். இரவு வீடு திரும்ப தாமதமாக ஆகும்.ஆனால், கடந்த மூன்று மாதங்களாகவே அது ஒரு நாள் போல தொடர்ந்து கொண்டிருந்தது.

ப்ரி-யும்,(செந்தில் அப்படித்தான் அவளை அழைப்பது வழக்கம்) கேட்காமலில்லை. பதில் என்னவோ,

“இன்னைக்கு ஸ்டேடஸ் மீட்டிங்டா” இல்லை “ரிலீஸ் இருக்கு” என்ற ரீதியில் இருக்கும். சில நேரங்களில், “கான்ப் கால் இருக்கு, வெய்ட் பண்ணாதே..சாப்பிட்டுடுமா” என்பான் தொலைபேசியில். காலை எட்டு மணிக்கு சென்றால், இரவு பதினொன்று இல்லை அதற்கு மேல்தான். சனிக்கிழமைகளிலும் செல்ல வேண்டி இருக்கும்.

என்ன வேலையோ என்று ப்ரிக்கு சில சமயங்களில் தோன்றும். அதுவும், மொழி தெரியாத, நண்பர்க்ளும் இல்லாத இந்த ஊரில் தனியாக மாட்டிக்கொண்டோமே என்று கழிவிரக்கம் அவள் மனதில். இவை எல்லாம் சேர்ந்து அவளை வாட்டியதில், பிரச்சினை நேற்று வெடித்து விட்டது.

கரம் பிடித்து கொஞ்சியவன், சினத்தைக் காட்டிவிட்டான்.
வார்த்தைகள் முற்றியது. கண்ணீர் மிஞ்சியது. இதோ இப்போது அவள் ரயிலில். அவள் பயணப்படுவது கூட அறியாமல் கணினி முன் அவன். இன்னும் இருபத்தியைந்து நிமிடங்கள் இருந்தன. “நான் போறேன். இப்போ ரயிலில் இருக்கேன். என் தொல்லை இல்லாமே, உங்க வேலையை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க! ” என்று குறுசெய்தி அனுப்பி விட்டு ஜன்னல் புறம் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

அட..அங்கே வருவது யார் சுனந்தா போல் இருக்கிறதே!
அப்பா, ஒரு துணை கிடைத்து என மகிழ்ந்தவள், அவளை நோக்கி கையசைத்தாள். தோழிகள் இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர்.

“ஹாய், எப்படி இருக்கே சுனி? யூ.எஸ்-ல இருந்து எப்ப வந்தே? எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து? “

“ஆமாப்பா!நான் வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. நீ எப்படி இருக்கே? “

“நான் நல்லா இருக்கேன். அப்போ கல்யாணத்துக்கு வந்திருக்கலாமில்ல? எங்க உன் ஹப்பி?” – வினவினாள் ப்ரி.
“இல்ல ப்ரியா..நான் தனியா வந்துட்டேன். விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்கேன்!”

“ஹேய்! என்ன சொல்ற? “

“ஆமாப்பா! அவன் கூட வாழ்ந்த ஒரு வருஷம்… ஊப்ஸ்!
அது ஒரு நைட் மேர்!! “

“ஓ..சாரி சுனி! அம்மா, அப்பால்லாம் எப்படி இருக்காங்க? “

“ம்ம்..ஓக்கே! “

அதற்குள், ரயில் புறப்படுவதற்க்கான அறிவிப்புகள்.
இன்னும் சில மணித்துளிகள்! திடீரென தன்னைத் தேடி செந்தில் இப்போது வந்தால் எப்படி இருக்கும் என அவள் மனம் நினைத்தது. ம்ம்..அவன் வரமாட்டான், வேலைதான் முக்கியம் அவனுக்கு என்றெண்ணியவள், சுனியை நோக்கி
பேச்சை தொடரலானாள்.

“இப்ப என்ன சுனி பண்ணிட்டிருக்கே?”

“நான் மெயின்ஃபிரெம்ஸ் கோர்ஸ் முடிச்சிட்டு, இப்ப வேலை தேடிக்கிட்டிருகேன். இப்பக்கூட இண்டர்வியூக்குதான் இங்க வந்தேன். அனேகமா இது கிடைச்சிடும்.”

“ஓ! கங்கிராட்ஸ்யா! “

“தேங்க்ஸ் ப்ரியா! “

ரயில் ஓட தொடங்கியது. அவர்கள் பேச்சும்!

யாஹூக்கு ஃபுல்பார்ம் தெரியுமாடி ப்ரி உனக்கு?

தெரியலயே சுனி! இண்டர்வ்யூ-ல கேட்டாங்களா?

இல்ல சுனி, இது தெரியலன்னு என்னை ஒரு நாள் ராத்திரி முழுக்க வெளியில் நிக்க வைச்சாண்டி. குளிர்ல விறைச்சு போய்ட்டேண்டி!

“யாரு உன் ஹஸ்பெண்டா?!” – அதிர்ந்தாள் ப்ரி.

ஆமா! அதுமாதிரி நிறைய!! வீட்டுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாங்கன்னு ஆரம்பத்துல நான் யார்கிட்டயும் எதுவுமே சொல்லல!

ம்ம்..!

ஆனா, அவன் என்கிட்ட சின்சியரா இல்லன்னு என்க்கு ஒருநாள் தெரிய வந்தது! அப்பதான் எனக்கு வெறுத்துப் போச்சு!

அடப்பாவி!!

மனம் செந்திலை எடை போட்டது. அவளை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசியது இல்லை. வீட்டில் இருந்தால் வேலைகளில் உதவாமலில்லை. தான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டோமோ!

அவள் எண்ணத்தை கலைத்தது செல்லில் வந்திருந்த் குறுசெய்தி! அட..செந்தில்தான்!

“டியர், நான் எஸ்-9லில்..இதே ரயிலில் உன்னோட !! ! ம்ம்…என்ன பார்க்குறே என்னை விட்டு போக முடியுமா :-)?
ம்ம் எந்த பெட்டியில் இருக்கே..வந்திட்டேன்!!

அவன் அன்பை நினைத்து அவள் மனம் பூரித்தது!!

“சுனி, இதோ வந்திடறேன்”

அவசரமாக எழுந்து செல்லும் ப்ரியாவை ஒன்றும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுனி!

Add a comment திசெம்பர் 18, 2006

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

திசெம்பர் 2006
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Posts by Month

Posts by Category